Archive for ஜூன், 2006

தி.மு.க. கூட்டணி தலைவர்கள் இன்று அவசர கூட்டம்.

ஜூன் 19, 2006

கருணாநிதி தலைமையில் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் இன்று அவசர கூட்டம்: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து முக்கிய முடிவு
முதல்-அமைச்சர் கரு ணாநிதி கடந்த வாரம் பெங் களூர் சென்றார். அங்கு சாப்ட்வேர் நிறுவனங்களை பார்வையிட்டார்.

பெங்களூரில் 10 நாட்கள் ஓய்வு எடுக்க அவர் முடிவு செய்தார். ஆனால் இலங்கை யில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள் ளதை தொடர்ந்து கருணாநிதி அவசரமாக இன்று சென்னை திரும்பினார்.

தி.மு.க. கூட்டணித் தலை வர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. கருணாநிதி இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கு கிறார்.

காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு, இந்திய கம்ïனிஸ்டு உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மோதல் குறித்து ஆலோசிக்கப்படுகி றது.

தமிழகத்துக்கு ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவது குறித்தும் விவாதிக்கப்படு கிறது. பின்னர் இலங்கை பிரச்சினை குறித்து கூட்டத் தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

நன்றி>லங்காசிறீ

போர் தொடங்கினால் : சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை.

ஜூன் 19, 2006

மீண்டும் இன்று வன்னியில் விமானத்தாக்குதல் தொடருகிறது.

போர் தொடங்கினால் அனைத்து உத்திகளையும் கையாள்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மின் அஞ்சல் ஊடாக அவர் அளித்த நேர்காணல்:

தமிழ் மக்கள் மீது மற்றொரு கொடூர யுத்தத்தை சிறிலங்கா அரசாங்கம் திணிக்குமானால் இலங்கைத் தீவு முழுமைக்கும் அது விளைவுகளை ஏற்படுத்தும்.

தமிழ் மக்கள் மீது அத்தகைய கொடூரமான போரைத் திணித்தால் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக எந்த ஒரு உத்தியையும் பயன்படுத்துவோம்.

தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேறி மற்ற மக்களைப் போல் எமது மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இராணுவத்துடனான எமது மக்களினது அல்லது எங்களின் மோதல்கள் நடைபெற்றிருக்காது.

இதனை சிங்களத் தரப்பு உணர்ந்திருந்தால் இந்தத் தீவில் அமைதி உருவாகி இருக்கும். தமிழ் மக்களினது உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் தீவில் அமைதி ஏற்படாது.

தமிழ் மக்கள் படுகொலைகளை நிறுத்துவதுதான் பதற்றத்தை தணிக்க ஒரே வழி. சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி துணை இராணுவக் குழுக்களினது ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிங்களத் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம்.

ஆனால் இவை நிராகரிக்கப்படுட்டு தமிழ் மக்கள் மீது மற்றொரு போர் திணிக்கப்பட்டால் நாம் ஒரு உறுதியான நிலைப்பாட்டுக்கு செல்ல நேரிடும் என்றா சு.ப.தமிழ்ச்செல்வன்.

நன்றி>புதினம்.

வரலாற்றின் வழிகாட்டுதலில் “கிளைமோர் முறியடிப்பு”

ஜூன் 18, 2006

வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன.

சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

ஆழ ஊடுருவும் படையைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பினரது பகுதியில் தாக்குதலை நடத்துவது என்பது அமெரிக்காவின் தோற்றுப்போன ஒரு உத்தியாகும்.

வியட்நாம் போராளிகள் இறுதிக்கட்டமாக பிரான்ஸ் சமரசப் பேச்சுக்கள் இழுபறிப்பட்டு அமெரிக்கப் படைகளை விரட்டியடிக்க தயாரானபோது அதனை சிதைக்க ஆழ ஊடுருவும் படையணியை போராளிகளின் பகுதிகளுக்குள் தரை வழியிலும் இரகசியமாக உலங்குவானூர்திகளின் மூலமாகவும் கொண்டு சென்று ஊடுருவ விட்டு தாக்குதல்களை மேற்கொண்ட போதும் கடைசியில் அமெரிக்கப் படைகள் அவலப்பட்டே தப்பியோடின.

அமெரிக்கப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாமில் வியட்கொங் போராளிகள் போராட்டம் நடத்தினர்.

போராளிகளின் கெரில்லா உத்திகள் அமெரிக்கப் படைகளை ஆட்டுவித்தன.

1960 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் கடைசியில் பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை சிதைக்க நர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்ஸ் தலைநகரில் பேச்சுக்கள் நடந்தன. பேச்சுக்கள் இழுபறிப்பட்டன.

பேச்சு-மோதல், பேச்சு-மோதல் என்று நாட்கள் நகர்ந்தன. இந்த நிலையில் பேச்சுக்களில் நம்பிக்கை இழந்த போராளிகள் போருக்குத் தயாராகினர். அமெரிக்கப் படைகளுக்கு எதிராக டெட் வலிந்த தாக்குதல் என்ற நடவடிக்கையை போராளிகள் தொடங்கினர்.

1968 ஆம் ஆண்டில் தொடங்கிய டெட் நடவடிக்கை கட்டம் கட்டமாக நகர்த்தப்பட்டது.

இதற்கிடையில் 1964 ஆம் ஆண்டில் காட்டுப்போர் முறையாக ஆழ ஊடுருவும் படையணி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

6 பேர் கொண்ட பட்டாலியன், 12 பேர் கொண்ட பிரிக்கேட் என்று பெரும் படையணிகளுக்கு இணையான 6 பேர், 12 பேர் கொண்ட இராணுவத்தினர் என்று அவை உருவாக்கப்பட்டன.

டெட் நடவடிக்கை காலத்தில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனாலும் கட்டம், கட்டமாக டெட் தொடர்ந்தது. டெட் நடவடிக்கையில் இறுதிக் கட்டமாக அமெரிக்கப் படைகளை விரட்ட தயார்படுத்தல்களை போராளிகள் மேற்கொண்டனர். அதனை முறியடிக்க ஆழ ஊடுருவும் படைப்பிரிவு களம் இறக்கப்பட்டது.

பல ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவிலான போராளிகளின் நிலைகளையும் அவர்களின் உயர்மட்டத் தளபதிகளையும் அழிக்க உலங்குவானூர்திகளில் இரகசியமான முறையில் காடுகளுக்குள் இந்த அணிகள் இறக்கி விடப்பட்டன. இதில் அமெரிக்கர்களும் வியட்நாமிய துணை இராணுவக் குழுவினரும் இருந்தனர். அத்துடன் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த வியட்நாமியர்களை மக்களுக்குள் ஊடுருவ விட்டனர். அவர்கள் மக்களோடு மக்களாக விவசாயக் கூலிகளாவும், தொழிலாளர்களாவும் ஊடுருவினர்.

மக்களிடம் பேசி போராளிகளின் நிலைகள் பற்றி அறிய இந்த ஊடுருவல் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களைப் பொறுத்த வரை தமக்குத் தெரிந்ததை தன் சகோதரனுக்கோ, பிள்ளைகளுக்கோ கூட சொல்லாத இரகசியம் காத்தலின் மூலம் அங்கு போராளிகள் பற்றிய தகவல் ஆழ ஊடுருவும் அணிக்கு அந்த வகையில் கிடைக்கவில்லை.

அமெரிக்க ஹொலிவூட் படங்களில் வருவது போல இந்த ஆழ ஊடுருவும் அணியினரால் பெரிய அழிவைப் போராளிளுக்கு ஏற்படுத்த முடியவில்லை.

பல, பல அணிகளாக அமெரி;க்காவின் ஆழ ஊடுருவும் அணிகள் வியட்நாம் போராளிகளின் பகுதிளுக்குள் தீவிரமாக ஊடுருவ விடப்பட்டன.

துணை இராணுவக் குழு, வியட்நாமியர்கள் புலனாய்வுத் தகவல்களுக்கு ஊடுருவ விடப்பட்டனர்.

உலகில் இந்த அணிக்கு அமெரிக்கா பெரும் பரப்புரை செய்து வியட்நாம் மக்களை பீதியுற வைக்கும் உளவியல் போரும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் வியட்நாம் தளபதி ஜெனரல் கியாப்பின் முறியடிப்பு உத்திகள் அவர்களை கதிகலங்க வைத்தன.

காடுகளை கரைத்துக் குடித்த போரளிகளுக்கு அமெரிக்கப் படைகளுக்கு கலக்கத்தை கொடுத்தது ஆச்சரியமான விடயம் அல்ல.

கெரில்லாப் போராளிகளுக்கு இடையில் கெரில்லாப் போர் முறையினை ஒரு மரபாக கொண்டு வந்தபோது தொடக்கத்தில் திகைத்த போராட்ட அணியினர் ஒரு குறிப்பிட்ட காலத்தை அமெரிக்க உத்திகளை பகுப்பாய்வு செய்ய செலவிட்டனர்.

இதன் பின் அவர்களின் உத்திகளை கற்றுக்கொண்டு அவர்கள் முறியடிப்பை தொடங்கினர்.

இதன் விளைவாக அமெரிக்கத் தளங்களில் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி பெரும் போர்மூலம் அமெரிக்கப் படைகளை ஓட, ஓட விரட்டின. வல்லரசுப்படைகள் ஓடின. கடைசியில் கப்பலில் இருந்த உலங்குவானூர்திகள் மற்றும் பெரும் போர்க்கலங்களை கடலில் தள்ளி விட்டு தப்பியோடியதுதான் பெரும் அவலம்.

உலக விடுதலை வரலாறில் மிப்பெரும் வரலாறறுச் சாதனை அது.

அதே அமெரிக்கச் சூத்திரத்தை சிறிலங்காப் படைகள் இங்கு மேற்கொள்கின்றன.

தமிழரின் இறுதிப்போரை சிதைக்கும் நோக்கில் அமெரிக்கப் பாணி ஆழ ஊடுருவும் அணிளை கொண்டு தீவிரமாக தாக்குகின்றனர்.

அதன் பாணியை பகுப்பாய்வு செய்யும் காலம் முடிவடைந்து முறியடிப்புக்கான காலம் நகர்கின்றது.

எதிரிகள் எதைச் செய்கின்றார்களோ அதுவே அவர்களின் அழிவுக்கு காரணமாகும் என்ற வரலாற்றின் முன்னோடியான வியட்நாம் தமிழீழ மக்களுக்கு படிப்பினையான ஒன்று.

அமெரிக்கப் படைகளைப் போல சிறிலங்காவின் யாழ்ப்பாண இராணுவத்துக்கும் மன்னார் மற்றும் மட்டக்களப்பு இராணுவத்துக்கும் அவலம் காத்திருக்கின்றது.

ஏனைய மாவட்டங்களில் காடுகள் வழி படையினர் சிங்கள தேசத்துக்கு தப்பியோடி விடுவர்.

அமெரிக்கா, வியட்நாமில் பொறியில் சிக்கியது போல இப்போது யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் படைகளும், மன்னாரில் 8 ஆயிரம் படைகளும், மட்டக்களப்பில் 10 ஆயிரம் படைகளும் இருக்கின்றன.

இவர்களை பொறிக்குள் சிக்க வைத்து விடுதலையை வென்றெடுக்கும் காலம் நெருங்கின்றது.

வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கின்றது.

-புதினம்

சிறிலங்காவிற்கான ஐப்பான் உதவிகள் நிறுத்தப்படலாம்.

ஜூன் 18, 2006

இலங்கையில் சமாதானமுற்சிகள் தேய்வடைந்து போருக்கான சூழ்நிலை அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கான ஐப்பானின் நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.

ஐப்பான் உதவிகள் நிறுத்தப்பட்டால் சிறி லங்காவிற்கான ஐக்கிய நாடுகளின் உதவிகளும் நிறுத்தப்படலாம் என மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் வலியுறுத்தியிருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மேலும் துணை இராணுவக் குழுவினருக்கும் அரசாங்கப் படைகளுக்கும் தொடர்பில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை நம்பவும் ஜப்பான் மறுத்து ட்டது.

இந்த நிலையில் வன்முறைகளும் அதிகரித்து யுத்தம் தொடங்கக் கூடிய சூழலில் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்த ஜப்பான் பரிசீலிப்பதாக ஜப்பான் தூதரக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள சிறிலங்காவுக்கான சுவீடன் தூதுவரும் கடந்த வாரம், அமைதி முயற்சிகளை உண்மையா ஈடுபாட்டுடன் அரசாங்கம் முன்னெடுக்காத வரை அனைத்து அபிவிருத்திப் பணிகளுக்கான உதவிகளை இடைநிறுத்தப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.

தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதிச்சபை கண்டனம்.

ஜூன் 17, 2006

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே. ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம்.
இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாளுகின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டும். வன்முறையை யார் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்திய அதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திவிட்ட பின்னர் அமைதிப் பேச்சுக்களை நடத்துவது என்பது கடினமானது. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். ஏனெனில் இலங்கைத் தீவிலும் சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வாழுகிற தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற பிரதான அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்.
நாம் நோர்வேயின் வழியைத்தான் பின்பற்றுவோம். ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றமாட்டோம். நோர்ட்டிக் அமைதி குழுவின் அங்கமாகவே நாங்கள் உள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கிற முடிவுகளுக்கு அப்பால் அமைதிக்கான ஆதரவைத் தர வேண்டும். ஐரோப்பியத் தடைய அநாகரிகமானதாகவே நாம் பார்க்கிறோம்.
அமைதியை உருவாக்குவதில் ஸ்காண்டிநேவிய நாடுகள் நடுநிலையுடன் செயற்பட வேண்டியதை உலகுக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை இப்போது உள்ளது என்றார் அவர்.

நன்றி>புதினம்.

ஈழத்தில் போர் வெடிக்குமா?

ஜூன் 17, 2006

பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன்

சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:

இலங்கையில் உள்ள கள நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டி சில நாடுகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளும் கண்டனம் செய்துள்ளனர்.

கெப்பிட்டிக்கொல்லாவ பயணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கவில்லை என்றும் அக்கிளைமோர்த் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளோம்.

இத்தகைய கொடூரமான தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என்று மீண்டும் கூறுகிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துகிற சக்திகள் குறித்து நாம் அவதானமாக உள்ளோம். அமைதி முயற்சிகளை எதிர்க்கும் அந்த சக்திகளே பொதுமக்கள் மீதான தாக்குதலை நடத்தி நிலைமையை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளனர். ஒரு முழு அளவிலான யுத்தத்தை தூண்டியுள்ளனர்.

ஓஸ்லோவில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ளாமை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னைய சூழ்நிலையால் இருதரப்பு சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அது இலங்கையில் ஒரு யுத்தத்தை நோக்கியுள்ளது.

விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்பை பொறுப்பற்ற முறையில் தாக்கியமைக்கு சிறிலங்கா அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்த நேரிடும் என்ற தமிழர் தலைமைப்பீடத்தின் கடும் எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு தெரியப்படுத்தி உள்ளோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

நன்றி: புதினம்

படையினரின் வெறியாட்டம் ஐவர் பலி! 44 பேர் காயம்.

ஜூன் 17, 2006

மன்னாரில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த பேசாலை தேவாலய முன்றலில் இன்று காலை சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லபட்டதுடன் 44 பேர் காயமடைந்துள்ளனர்

அத்துடன் பேசாலைக் கடலில் வைத்து நான்கு மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.45 மணியளவில் மன்னார் கடற்பரபில் இடம்பெற்ற மோதலை அடுத்தே கரையோரக் கிராமங்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்வாறு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது சிறீலங்கா படையினர் இந்த கொலை வெறியாட்டத்தை நடாத்தியுள்ளனர்.

இதில் பெண்னொருவர் சம்பவம் இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மேலும் 44 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

நன்றி>பதிவு.

ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் எழுச்சி ஆர்ப்பாட்டம்.

ஜூன் 16, 2006









இந்திய நாடாளுமன்றக் குழுவை ஈழத்துக்கு அனுப்ப வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் .

ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் பேசியதாவது:
ஈழத் தமிழரைப் பாதுகாக்கிற- தன்னுடைய கடமையை ஆற்ற தமிழ்நாடு இன்று கிளர்ந்து எழுந்துள்ளது.
கடந்த இரு மாதங்களில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மிகக் கொடூரமாக பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இணையத்தளங்களிலே வெளியாகியுள்ள அந்தப் படங்களை பார்க்கவே முடியாத அளவுக்கு மிகக் கொடூரமாகக் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் இணையத் தளங்களிலே அந்த படங்கள் வெளியாகி உள்ளபோதும் கூட இங்கே உள்ள ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்துவிட்டன.
இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு ஒருசார்பாக நிலைப்பாடு எடுத்துவிட முடியாது. உண்மை நிலையை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு உதவாமல் சிங்கள அரசை இந்திய அரசாங்கம் ஆதரிப்பது என்பது இந்தியக் கட்டமைப்பிலே தமிழ்நாடு ஒரு தேசிய இனமாக உள்ளது. இந்தியக் கட்டமைப்பின் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாக வாழ்கின்ற இந்தத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போராட்டம்.
ஈழத் தமிழர்களே!
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கட்சிகளை-இயகங்களை கடந்து இன்று உங்களுக்காக இணைந்து நிற்கிறோம் என்றார் விடுதலை இராசேந்திரன்.

இங்குள்ள தமிழக அரசும் பொறுப்பில்லை என்று சும்மா இருந்துவிட முடியாது. இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் வலியுறுத்த வேண்டும் என்றார் ரவிக்குமார்.
இடையே எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
ஈழத் தமிழர் துயர்துடைக்க
இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம்
வெல்கவே!வெல்கவே!
வெல்கவே! வெல்கவே!
வெல்லட்டும் வெல்லட்டும்
ஈழத் தமிழர் வெல்லட்டும்!
வீழட்டும் வீழட்டும்
சிங்கள இனவெறி
வீழட்டும்
ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்
ஈழத் தமிழர் எங்கள் சொந்தம்
ஈழத் துயரயம் எங்கள் துயரம்
ஈழத் துயரம் எங்கள் துயரம்
சிங்களவன் போடுறான் வெறியாட்டம்
செத்து மடியுது தமிழ்க் கூட்டம்
செத்து மடியுது தமிழ்க் கூட்டம்
வேடிக்கை பார்க்குது இந்திய அரசு
இந்திய அரசே! இந்திய அரசே!
தட்டிக் கேள் தட்டிக் கேள்!
இலங்கை தமிழ் எம்பிக்கள்
இந்திய பிரதமரை சந்திக்க
அனுமதி இல்லையா அனுமதி இல்லையா
சிங்களவரென்றால் இனிக்குதா?
தமிழரென்றால் கசக்குதா?
ஏமாளி தமிழனே
இளிச்சவாய் தமிழனே
இன்னுமா உறக்கம்
இன்னுமா உறக்கம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா:
ஈழத் தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல என்பதற்காக தமிழர் நலன் காப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கருதாமல் எங்கள் தொப்புள் கொடிக்குச் சொந்தக்காரர்கள் என்பதை மனதில் கொண்டு இந்திய அரசங்கம் செயற்பட வேண்டும்.

அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் தாய் தமிழகத்தினர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
தமிழர்கள் 60 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களிலே வாழ்கின்றனர். 2 நாடுகளில்தான் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்தான் தேசிய இனமாக உள்ளனர்.
எமது தேசிய இனத்துக்கு ஆபத்து ஏற்படுகிற போது தட்டிக்கேட்டால் நமக்கு ஊறு வரும் என்று இந்திய அரசு கருதுகிறத
சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதைக் காட்டிலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் சந்திக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிற அரசாங்கம் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் இருப்பது வேதனையான செய்தி.
மொழி வேறு- மொழி பேசுகிற மக்கள் வேறு என்ற மனப்பான்மையில் தமிழகத் தலைவர்கள் உள்ளனர்.

இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்த்து ஈழத்தமிழர் விடியலை உருவாக்க ஒருங்கிணைய வேண்டும்.

சிறிய தீவில் இருக்கிற சிங்கள ஆதிக்கவாதிகள் மிகக் கொடூரமாக நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீற்றம் கொண்டால்…. எரிமலை வெடிப்பதற்கு முன்னால் எச்சரிக்காது.

எங்கள் கடலை பார்க்கிறபோது மீன் முத்து ஆகிய சொத்துகள் மட்டுமல்ல கடலுக்கு அப்பாலே உள்ள எங்கள் சொந்தங்களும் அவர்களின் கண்ணீரும்தான் நினைவுக்கு வரும்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் பாரபட்சமற்ற முறையில் செயற்பட தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமிழக நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களை அல்லது தமிழகத் தலைவர்களை ஈழத்துக்கு அனுப்பி நிலைமையை பார்க்கவேண்டும் என்றார் மல்லை சத்யா.

இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

வெல்லட்டும் வெல்லட்டும்
ஈழத் தமிழர் வெல்லட்டும்

வீழட்டும் வீழட்டும்
சிங்கள இனவெறி
வீழட்டும்

தடுத்து நிறுத்த நாதியில்லை
வேடிக்கை பார்க்குது வெறியாட்சி
கூலிகள் கொடுக்குது சிங்கள நரிக்க
இந்தி பேசும் இனத்தாருக்கு
இப்படி கொடுமை செய்திருந்தால்
இப்படி கொடுமை நிகழ்ந்திருந்தால்
இந்திய அரசு கொஞ்சுமா
இந்திய அரசு கொஞ்சுமா
சிங்களன் தலைதான் மிஞ்சுமா
நேபாள நாட்டின் துயர் துடைக்க
நீட்டுது டில்லி 1,000 கோடி
யாழ்ப்பாண நாட்டின் துயர் துடைக்க
என்னே செய்யதது இந்திய ஆட்சி
ஈழத் தமிழரை இன்னும் கொல்ல
சிங்கள சேனைக்கு ராடார் கருவி
பலாலி விமானத்தளத்தை பழுது பார்க்க போர்முற
இந்தியா செய்யுது
இந்தியா செய்யுது
ஏமாளித் தமிழா
இளிச்ச வாய்த் தமிழா
இன்னுமா உறக்கம்
இன்னுமா உறக்கம்
ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து:
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா என்பவர் சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மொத்தம் 5 ஆயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார். புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜயசிங்கவோ 72 முறை என்கிறார். சென்னையில் உள்ள துணைத் தூதுவரோ மூவாயிரம் முறை என்கிறார். ஆகையால் இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தெரிகிறது.

இலங்கையின் அனுராதபுரத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நேற்று நடந்தது. அது சிறிலங்கா இராணுவத்தின் பகுதி. அங்கே எப்படி புலிகள் நுழைந்து தாக்கியிருக்க முடியும்? எல்லாமே பொய்யாகவே பரப்புகின்றனர் சிங்களவர்.
இந்த உண்மையை நம்நாட்டு ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன்:
இலங்கைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும
ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுபினர்கள் அங்குள்ள நிலைமையை இந்தியத் தலைவர்களிடத்தில் விளக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் இங்கே வந்திருப்பதன் மூலம் ஈழத்திலே வன்முறைகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியலாம்.
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் போது அணிதிரண்டு தாய் தமிழகத்தை நோக்கி கதறி அழுதவாறு வந்தது போல் இரண்டு மூன்று மாதங்களில் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் வந்துள்ளனர்.
சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்குகிறது.
இங்கே எழுப்பப்பட்ட முழக்கங்களில் கூட அது கூறப்பட்டது.
தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக-
சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவாக-
உறுதுணையாக இந்திய அரசு செயற்பட்டு வருகிறத
இந்தப் போக்குகள் கைவிடப்பட்டு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்- ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறுகிற போது “இந்திய அரசின் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு” என்று கூறியுள்ளார்.
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
– சிங்கள அரசுக்கு ராடார் கருவி கொடுப்பத
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
– பலாலி விமானத் தளத்தை சீர்படுத்தித் தருவத
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
– சிங்களப் பேரினவாதத்துக்கு உறுதுணையாக இருப்பத
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
– ரணில் விக்கிரமசிங்க வந்தாலும்- ராஜபக்ச வந்தாலும் சந்திரிகா வந்தாலும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பத
இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே!
தமிழினத் தலைவர் அவர்களே!
இந்த நிலைப்பாடுதான் உங்கள் நிலைப்பாடா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மகிந்த ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறீர்களா-
சிங்களப் பேரினவாதிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கப் போகிறீர்களா?
அல்லத
தமிழர்களுக்கு குரல் கொடுக்கப் போகிறீர்களா?
தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்.
எமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் முதல்வர் தனது பதில் உரையில் இது பற்றி குறிப்பிடவில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கைதுசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பேரவையிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளிநடப்பு செய்தது.
ஆனால் தி.மு.க.வோ ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது.
இன்றும் நாங்கள் சுட்டிக்காட்டவும் கண்டனம் செய்யவும் கடமைப்பட்டுள்ளோம்.
சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிற இந்திய அரசின் நிலைப்பாடுதான் உங்களின் நிலைப்பாடா?
அகதிகளுக்கான ஐ.நா. ஆவணத்திலே இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை. தமிழ்நாட்டின் 13 அமைச்சர்கள் மத்தியிலே உள்ளனர். அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கிற தமிழக முதல்வர், ஈழத் தமிழர்களுக்காக ஏன் அதைச் செய்யக் கூடாது? என்றார் திருமாவளவன்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நன்றி>புதினம்.

விமான குண்டு வீச்சுக்கு ஆழிப்பேரலை அகதிமுகாம் தப்பியது.

ஜூன் 15, 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை மாலை சிறிலங்கா விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது.

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு கிபீர் விமானங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அடங்கிய வன்னி வான்பரப்பில் இன்று மாலை 6.25 மணிக்கு மீண்டும் நுழைந்தன.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மாலை 6.25 மணி முதல் 6.35 வரை நான்கு தடவை நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன. இக்குண்டு வீச்சுத் தாக்குதலை 10 நிமிட நேரம் தொடர்ச்சியாக நடத்தினர்.

அதன் பின்னர் மீண்டும் 6.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சென்றன.

அதைத் தொடர்ந்து 6.55 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் மீளவும் குண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு குண்டை வீசின.

வானில் மிக உயரத்தில் பறந்தவாறு ஏவுகணை எதிர்ப்பு சாதனத்தை இயக்கியபடியே விமானங்கள் குண்டுகளை வீசின என்று கிளிநொச்சியிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அதேபோல் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான தரவை மற்றும் புலிப்பாய்ந்தகல் பகுதிகளில் மாலை 3.15 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் கூறியுள்ளார்.

மேலும் வவுணதீவு சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி மோர்ட்டார் எறிகணைகள் மூலம் இன்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

முன்னதாக இன்று காலையில் முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தின.

இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளையும் ஆழிப்பேரலை அகதிகள் முகாமையும் இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின.

இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புக்கள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மீண்டும் முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின.

இந்தத் தாக்குதலில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. இதையடுத்து அங்கிருந்து ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேறியுள்ளனர்.

கடற்பரப்பிலிருந்து மூன்ற கடல்மைல் தொலைவில் சிறிலங்காவின் டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள் விமானக் குண்டு வீச்சை அவதானித்துள்ளன.

ஆழிப்பேரலை அகதிகள் முகாம் அருகே ஆறு குண்டுகள் விழுந்துள்ளன. இரு குண்டுகள் வெடிக்க்கவில்லை. இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 10 நிமிட இடைவேளையில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் தற்போதும் திடீரென தொடர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தி வருகிறது.

நன்றி>புதினம்

100க்கு மேற்பட்ட இளைஞர்கள் கருணா குழுவால் கடத்தல்.

ஜூன் 15, 2006

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களின் கருணா குழுவினர் இளைஞர்களை கடத்திலுள்ளார்கள். இன்று அதிகாலை முதல் பிற்பகல் வரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள்.

சந்திவெளி கிரான் வாழைச்சேனை கல்குடா பேத்தாழை பட்டியடிச்சேனை போன்ற பகுதிகள் இராணுவத்தினர் சுற்றிவளைக்க கருணா குழுவினர் இளைஞர்களை பிடித்து சென்றுள்ளார்கள். கடத்தப்பட்வர்களில் மாணவர்களும் அடங்குவதா தெரிவிக்கப்டுகின்றது.

இதுதொடர்பாக ஏறாவூர் காவல் துறையினர் மற்றம் வாழைச்சேனை காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளார்கள. அத்துடன் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி>புதினம்.