Archive for the ‘Blogroll’ Category

மகிந்தரின் பிரித்தானிய சரணாகதி ஏன்?

செப்ரெம்பர் 10, 2006

பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பற்ற திடீர் பயணமொன்றை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

சந்திரிகா அம்மையாருடன், தமது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருகடிகளைத் தீர்க்கும் வண்ணம் பேச்சுவார்த்தை நடத்த இலண்டன் வந்துள்ளார் என்று சில செய்தி நிறுவனங்கள் ஊகம் வெளியிட்ட நிலையில் அவரின் பயணமானது, அதற்கும் பாற்பட்டதொரு நகர்விற்கான பயணமாகக் கருத இடமுண்டு.

இருப்பினும் பிரித்தானியா என்கிற பின்கதவால் இந்தியாவை அணுகும் அதிரடி இராஜதந்திர நகர்வாகவே இதனை நோக்கலாம்.

பாகிஸ்தானின் இலங்கைப் பிரசன்னம் குறித்து நோர்வேயிடம் இந்தியா சுமத்திய குற்றச்சாட்டினால் எழுந்த புதிய சிக்கல்களால் தடுமாறிய ராஜபக்ச, பிரித்தானியாவினூடாக சில நகர்வுகளை மேற்கொள்ள முயற்சிக்கிறார்.

அத்துடன் அதிகரித்து வரும் தமிழக எழுச்சிக் கோலங்கள், இந்திய மத்திய அரசின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாறுதல்களை உருவாக்கலாம் என்கிற பதற்றமும் மகிந்தரைத் தொற்றிக் கொண்டுள்ளது.

அன்மைக்காலமாகவே, கண்காணிப்புக் குழுவின் மாதாந்த அறிக்கைகளும், .நா. சபையின் உப பிரிவுகளின் நேரடி களநிலவரச் சாட்சியங்களும் சிறிலங்கா அரசுக்குச் சாதகமாக அமையவில்லை.

இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னுமொரு முக்கிய செய்தியானது, சமாதான முயற்சிகளின் அனுசரணையாளராக விளங்கும் நோர்வே ஊடாகச் சாதிக்க முடியாத விடயமொன்றை நோர்வேயின் பின்தளச் சக்திகளில் ஒன்றான பிரித்தானியாவைப் பயன்படுத்தி தமக்குச் சாதகமான கருத்து நிலையை ஏற்படுத்தவும் மகிந்தர் முயற்சிக்கிறார்.

இருப்பினும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பிற்குரிய அகச் சூழ்நிலை உருவாக்கப்படுவதற்கு முன், சமாதான முன்னெடுப்புக் களத்தில் ஏற்கனவே நிலை கொண்டுள்ள சார்புச் சக்திகளை ஒன்று திரட்டுவதிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பொதுக் கருத்தியலைத் தக்க வைக்கவும் மகிந்தர் வேகமாகச் செயற்படுகிறார்.

இதுவரை காலமாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது தனித்துவத்தைப் பேணிவந்த இந்தியா, அண்மைக் காலமாக மேற்குலக அச்சோடு பயணிக்க முயல்வதனையும், அவர்களோடு இணைந்து சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசியல் தீர்வொன்றினை தம்மீது வலிந்து திணிக்க முயற்சிக்கலாம் என்ற அச்சமும் சிறிலங்கா அரசிடம் ஏற்பட்டுள்ளது.

ரணிலுடன் இணைந்து பொதுக்கருத்தினை உருவாக்கி, இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்ட வரைபினை முன்வைக்கும் வரையான காலத்தில், புலிகளின் தாக்குதல்களிலிருந்து அரசினைப் பாதுகாக்க, இராணுவ உபகரண உதவிகளையும் பிரித்தானியாவிடம் கோரலாம்.

தனது பலத்தை அதிகரிக்கவும், அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையினைக் குறைக்கவும், மேற்குலகு திருப்திபடும்படி அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசவும் சிங்கள ஆட்சியாளர்கள் தயங்கமாட்டார்கள்.

இருப்பினும்எதைப் பற்றி பேசுவதாயினும், தமது மேற்குலகின் பிரதிநிதி நோர்வேயை அணுகுங்கள்என்பதே பிரித்தானியாவின் பதிலாக அமையலாம்.

நன்றி>புதினம்.

Advertisements

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம.

செப்ரெம்பர் 6, 2006

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது:
சம்பூர் பிரதேசத்தை முழுமையாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் கூற முடியாது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய நிலைமைகள் நீடித்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்வோம் என்றார் இளந்திரையன்.
“சம்பூர் ஆக்கிரமிப்பு தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களது முடிவுக்குப் பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும்” என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எதுவித பதிலும் தரவில்லை. கண்காணிப்புக் குழுவினர் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பதில் கிடைத்த பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றும் தயா மாஸ்டர் கூறினார்.
நன்றி>புதினம்.

சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள்.

செப்ரெம்பர் 5, 2006

 திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும்சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும்

மூதூரில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து இறங்குதுறை வரை நகர்ந்ததையிட்டு ஆனந்தப்படுவதும

தமிழ் மக்களின் விடுதலை ஏக்கத்தின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம்.

இருப்பினும் எமது ஊடகங்களும் ஏதோ இறுதிப் போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டதாக எண்ணி, ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று அதீதமான ஆசைச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

எழிலன், இளந்திரையன் கூறும் அதிகாரத் தரப்புச் செய்திகளுடன் ஏனைய ஊடக நிறுவனங்களால் வெளியிடப்படும் ஊகச் செய்திகளையும் இணைத்துத் தொகுப்பதனால் மக்கள் மனங்களில் ஒருவித அதீதமான எதிர்பார்ப்புக்களை எமது ஊடகவியலாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ செய்திகளும் அதற்கான அவர்களின் விளக்கங்களுமே மக்களுக்குப் போதுமானதாக இருக்கும்.சம்பூர் தந்திர யுத்தம் சம்பூரில் நடைபெறும் சமர் தற்காப்புச் சமாராக விடுதலைப் புலிகள் கூறினாலும் அடிப்படையில் ஒரு தந்திர யுத்தம் தான்.இச்சமரில் புலிகளின் இராணுவ நகர்வுகள் எவ்வகையில் அமைந்தாலும் அடிப்படையில் மேற்குலக அனுசரணையாளர்களுக்கு உருவாக்கப்படும் ஒரு பாரிய பொறியாகவே கருத இடமுண்டு.

சண்டே லீடரின் இவ்வார ஏட்டில், விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியதாக வெளிவந்த செய்தியில், சம்பூரை இராணுவம் கைப்பற்றினால் போர் நிறுத்த ஒப்பந்தம் செயலற்றுப் போகும் என்று கூறியிருக்கும் விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

சிறிலங்கா அரச விமானப் படையினரின் குண்டு வீச்சுக்களும் மாவிலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பாரிய படையெடுப்புகளும் அப்பட்டமான போர் நிறுத்த மீறல்களாக இருந்தும் கண்காணிப்புக் குழுவோ அனுசரணையாளர்களோ வாய்மூடி மௌனியாக இதுவரை காலம் கடத்திய வரலாற்றுக்கு முடிவுரை எழுதும் நேரம் நெருங்கிவிட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மகிந்த வெளியிட்ட சம்பூர் செய்தியானது, தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பூர் ஆக்கிரமிப்பால் திருமலைத் தளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அரசியல் செய்தியையும் மகிந்த கூறியுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை கடற்படைத் தளத்தின் மீது புலிகளின் ஒரு எறிகணைக் குண்டு வீழ்ந்தாலும் அவரின் வெற்றிச் செய்தி அர்த்தமற்றுப் போகலாம்.

ஆயினும் புலிகளின் தந்திரோபாய நகர்வுகள், அதற்கிசைவாக அமையும் வாய்ப்பினை உருவாக்காது.அடுத்த நகர்வுகள்புலிகளின் அழுத்தங்கள் இனி அதிகமாகவே அனுசரணையாளர்கள் மீது திரும்பலாம். போர் நிறுத்த ஒப்பந்த சரத்துக்களை பலமுறை அரசு மீறினாலும் இம்முறை சம்பூர் பிரதேச மீறலானது சாட்சியங்கள் தேவையற்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.சம்பூரை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று புலிகள் கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் பதில் நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?

இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது என்று நோர்வேக்குத் தெரியும்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள் நிராகரித்தால் சர்வதேச உலகம் கூறும் பதிலென்ன என்பதில் அடுத்த கட்ட நகர்வு அமையும்.

இப்பொறிக்குள் அகப்பட்டுள்ள நோர்வே, சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்குமா அல்லது தானாகவே வெளியேறுமா என்பதைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியாவிடமும் இல்லை. மேற்குலகிடமும் இல்லை.

பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இப்போதே மகிந்த கூறத் தொடங்கிவிட்டார்.

ஆம

இலங்கைத் தீவின் கள நிலைமையைத் தீர்மானிக்கும் பந்து நோர்வேயின் காலடியின் உள்ளது.

நன்றி>புதினம்