Archive for ஜூன், 2006

இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது.

ஜூன் 25, 2006

சிங்கப்பூரின் சிற்பி லீ குவான் யூ
இலங்கைத்தீவை இனி ஒருபோதும் ஒன்றாக்க முடியாது. அந்த ஆட்சியமைப்பை மாற்றும்படி அல்லது நெகிழ்ச்சித்தன்மையைக் கைக்கொள்ளும்படி அல்லது பிரித்து வழங்கும்படி யாராவது அவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும் – என சிங்கப்ப10ரின் சிற்பியான லீ குவான் யூ தெரிவித்துள்ளார். லீ குவான் யூ பற்றி வெளியிடப்பட்டுள்ள லீ குவான் யூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும் என்ற நூலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.லீ குவான் யூ என்ற மனிதரும் அவரது எண்ணங்களும்” என்பது சிங்கப்பூரில் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு நூலின் தலைப்பாகும். “ஸ்றெய்ற் ரைம்ஸ்” சஞ்சிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களான ஹவான் ப10க் குவாஸ் வாரன பெர்னாண்டஸ் மற்றும் சுமிகேரான் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த நூலின் லீ குவான் யூவின் வாழ்வை வழிப்படுத்திய நிகழ்வுகள் பற்றியும் அவர் சிங்கப்பூரை ஆண்ட விதம் பற்றியும் அவர் அளித்த செவ்விகள் அடங்கியுள்ளன. அந்த நூலில் சிறிலங்காவைப்பற்றி இப்படித்தான் லீ குவான் யூ கூறியிருக்கிறார்:எமது செயற்பாடுகளின் பின்விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான்; ஆகவேண்டும். நாங்கள் எங்கள் மக்களுக்குப் பதில்சொல்ல வேண்டியவர்கள். அவர்களுக்காக சரியான முடிவுகளை நாங்கள்தான் எடுக்கின்றோம். பழைய பிலிப்பைன்ஸ்ää பழைய இலங்கைää பழைய கிழக்குப் பாகிஸ்தான் மற்றும் பலநாடுகளைப் பாருங்கள். இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் நான் போயிருக்கிறேன். 1956ம் ஆண்டில் முதன்முதலாக கொழும்புக்குச் சென்றிருந்தபோது அது சிங்கப்பூரை விடச்சிறப்பான நகரமாக இருந்தது. சிங்கப்பூர் மூன்றரை வருடகாலம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குக்கீழ் இருந்ததும் கொழும்பானது மவுண்ட் பேட்டனுடைய தென்கிழக்காசிய கட்டளைப்பீடத்தின் மையமாக அல்லது தலைமையகமாக இருந்ததும்தான் அதற்குக் காரணமாகும். அவர்களிடம் ஸ்ரேலிங் பவுண்களில் சேமிப்புகள் இருந்தன. அவர்களிடம் இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. கல்வியூட்டப்பட்ட திறமைசாலிகள் இருந்தனர். அமெரிக்க மிதவாதிகளும் பிரித்தானிய மிதவாதிகளும் சொல்வதை நீங்கள் நம்புவதானால் அவர்கள் செழித்தோங்கியிருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு என்பது தமிழ் சிறுபான்மையினருக்கு மேல் சிங்களப் பெரும்பான்மையினர் மேலாதிக்கம் கொள்ளவே உதவியது. செயல்முனைப்பும்ää புத்திசாலித்தனமும் கொண்ட இந்த தமிழ் சிறுபான்மையினர் கடுமையாக உழைத்தார்கள். ஆதற்காகவே தண்டிக்கவும் பட்டார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டார்கள். சிங்களம் ஆட்சி மொழியாகியது இரண்டு பல்கலைக்கழகங்களிலும் அவர்களுக்கு கோட்டா வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் வெறிகொண்ட புலிகளாகிவிட்டார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும் பொழுது துங்கு புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார். என்றுதான் தோன்றுகிறது. (துங்கு என்பது மலேசியப் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மானைக் குறிக்கிறது. இவரது ஆட்சியின் கீழ்தான் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தது ஆட்சியமைப்பை நெகிழ்ச்சியுள்ளதாக்கும் யோசனையை நான் முன்வைத்தேன். “இல்லை வெட்டொன்று துண்டு இரண்டாக செல்வோம். நீங்கள் உங்கள் வழியில் போங்கள்” என்று அவர் சொன்னார். பலவீனமான தலைவர்களையும் தவறான தலைவர்களையும் கொண்டிருந்ததாலயே அவர்கள் (சிறிலங்கா மக்கள்) வெற்றிபெறத்தவறிவிட்டார்கள்.

இணைப்பு : newstamilnet.com

கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?

ஜூன் 24, 2006

இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன.
சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கடந்த செவ்வாய்க்கிழமை (20.06.06) மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதன்படி, இராணுவமும், விடுதலைப் புலிகளும் போரை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளதால், இதை நிறுத்த ஒரு மாற்று உத்தியை தான் முன்னெடுக்க யோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவின் உத்தியோகபூர் வாசஸ்தலத்தில் சந்தித்த மகிந்த, இதற்கான இணக்கப்பாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து கண்டறிந்து தனக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
போரொன்று ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படையலாம் என்று குறிப்பிட்ட மகிந்த, சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் இதனால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததுடன், நோர்வேயின் அனுசரணையில் தங்கியிருக்காது, அவர்களை விலக்கிவிட்டு, நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய நேரடிப் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப்பாட்டை அமுல்படுத்த இரு வாரங்களுக்கு முயற்சித்துப் பார்த்து, அதில் வெற்றி காணும் பட்சத்தில் அந்த வெற்றியைத் தொடர்ந்து செயற்படுத்த இருதரப்பும் முயலலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்த இருவார காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ, கருணா குழுவினர் எதுவித தாக்குதல்களையும் தொடுக்காது இருக்க தான் பொறுப்பெடுக்க முடியும் என்று தெரிவித்த மகிந்த, இத்தகைய இருவார நேரடி போர் நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் இந்தக் கோரிக்கையை, உதயன் நாளேட்டைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் விளக்கியதாகவும், அதற்கான பதிலை விடுதலைப் புலிகள் பின்னர் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறிவிட்டதாகவும், சண்டே லீடர் மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி>புதினம்.

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்லம் தாக்குதல்.

ஜூன் 24, 2006

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்ல தாக்குதல்களை கண்டித்து மக்கள் போராட்டம்.
யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அரச படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரும் சேதப்படுத்தியமையைக் கண்டித்து இன்று சனிக்கிழமை குடாநாடு தழுவியபூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய விழிப்புணர்வு கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று வீடுகளை விட்டு மக்கள் வெளியில் வரமால் வர்த்தக நிலையங்கள் முடியும் போக்குவரத்தை நிறுத்தியும் தமது எதிர்பை மக்கள் தெரிவிக்க வேண்டும் என தேசிய விழிப்புக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நன்றி>புதினம்.

பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு.

ஜூன் 23, 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது:
உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்?
அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும்.
இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது.
பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் போராளிகளுக்கும் சுயநலங்களுக்காகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.
வன்முறையை விடுதலைப் புலிகள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுவதை விட ஏன் எடுத்தார்கள் என்ற கார்ணத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுதான் தீர்வுக்கான ஒரே வழி என்றார் கமலாதாஸ்.

நன்றி>புதினம்.

சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் ராஜபக்ச.

ஜூன் 23, 2006

எந்த ஒரு பிரச்சனையிலும் சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு சாடியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:
ராஜ்பக்சவின் கதிரை இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. யார் ராஜபக்சவை கதிரையில் உட்கார வைத்தார்களோ அவர்களே கதிரையை ஆட்டவும் தொடங்கிவிட்டனர்.
உண்மையான செயல்பூர்வ அர்த்தத்தில் ராஜபக்சவை கதிரையில் அமர்த்திய முதலாவது அணியினர் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். இரண்டாவது அணியினர்தான் ஜே.வி.பி.யினர்.
ஜே.வி.பி.யினர் ராஜபக்சவோடு தோளோடு தோள் கை கோர்த்து நின்று கதிரைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் ராஜபக்சவை விடுதலைப் புலிகள் கதிரைக்கு அழைத்து வந்த விதமோ மிகவும் விநோதமனது. உண்மையிலேயே அவர்கள்தான் அதனை சாத்தியமாக்கியவர்கள் கூட.
ராஜபக்சவை கதிரையில் ஏற்றிய இருவருமே உண்மையில் அவரது பரம எதிரிகளாவர்.
ராஜபக்சவுடன் சேர்ந்து அவரை கவிழ்ப்பதற்காக கூட்டுச் சேர்ந்தவர்கள் ஜே.வி.பி.யினர். ராஜபக்சவுடன் சேர்ந்து அவருக்கு மேலாக வளர முற்பட்ட சக்தியினர்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களது நோக்குநிலையும் தந்திரோபாயமும் வேறானதாக இருந்தது. மனதால் எதிரியாக இருந்தாலும் செயலால் ராஜபக்சவை கதிரையில் அவர்கள் அமர்த்தினர்.
இப்போது இந்த இரு எதிரிகளும் கதிரையை ஆட்டத் தொடங்கிவிட்டனர். அதாவது முற்பகுதியில் நண்பர்கள்- பிற்பகுதியில் எதிரிகள்.
நண்பர்களும் எதிரிகளுமாக இருந்த இரு அணியினரும் ராஜபக்சவின் கதிரையை உலுக்கத் தொடங்கியிருப்பதிலிருந்துதான் இலங்கையின் உள்நாட்டு அரசியலை எடைபோட வேண்டியுள்ளது.
கதிரையில் அமர்ந்திருக்கும் ராஜபக்சவின் சுயமான ஆளுமையானது கதிரையில் அவரை எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடித்திருக்க வைத்திருக்கும் என்பது ஒரு கேள்வி.
சிறிலங்காவில் சீர்கெட்டிருக்கும் அரசியல் பின்னணியில் ராஜபக்சவின் ஆளுமையானது எத்தகைய பாத்திரத்தை வகிக்க வல்லவது என்பதை எடைபோடுவது அவசியமாகும்.
ஏனெனில், அவருக்கு ஊடாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவரே அந்தக் கதிரையில் இருந்து தீர்மானங்களுக்கு பொறுப்பானவராக உள்ளார்.
தான் கதிரையில் அமர்வதற்கு செய்யக்கூடிய எல்லா உத்திகளையும் அவர் செய்யத் தொடங்கினார். அதில் ஒன்றுதான் அவரது மகிந்த சிந்தனை என்கிற தேர்தல் விஞ்ஞாபனமாகும்.
உண்மையில் மகிந்த சிந்தனை என்பது கால கட்டத் தேவைகளுக்கு சற்றுப் பொருத்தமில்லாத ஒன்று. அது வெற்று வேச கோசமாகும். அந்த வெற்று வேச கோசமானது செயல்பூர்வ அர்த்தத்தில் எத்தகைய பாத்திரத்தையும் வகிக்க முடியாது.
மகிந்த சிந்தனை என்கிற அதனடிப்படையில்தான் தான் கதிரையில் அமருவதற்கான அடித்தளத்தை சிங்கள மக்கள் மத்தியில் அவர் உருவாக்கினார்.
ராஜபக்ச பதவிக்கு வந்தபோது அவரது பிறந்தநாள் பரிசாக அரச தலைவர் பதவி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்த பிறந்தநாள் பரிசை உண்மையில் விடுதலைப் புலிகள்தான் கொடுத்தனர்.
ஆனால் இப்போது அந்த பிறந்தநாள் பரிசையும் இலகுவில் தட்டிப் பறிக்கக் கூடிய வித்தைகளைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.
இதுதான் வரலாற்றில் மிகவும் சுவராசியமான எதிர்முரணாகும்.
ஒரு அரசைப் பொறுத்தவரையில் அதிகாரப்பூர்வமான வார்த்தைகளில் பார்ப்பதானால்
அந்த நாட்டின் தலைவராக காணப்படுகிற அரச தலைவர் அல்லது தீர்க்கமான தலைவராகக் காணப்படுகிற பிரதமர் என்பவர்தான் முக்கியமானபாத்திரம் உள்ளவர்களாகக் காணப்படுவர்.
அரச தலைவரையும் பிரதமரையும் விட இராணுவத் தளபதிதான் அந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதுகாப்பின் பேராலான மிடுக்குக்கும் பொறுப்பானவர்.
அரச தலைவர் பதவியேற்கும் போது முப்படை மற்றும் காவல்துறையினரால் அரணமைக்கப்பட்ட நிலையில்தான் பதவியேற்கிறார். அப்படியென்றால் ஆயுதப் படையினர் மிகவும் முக்கிய சக்தியானவர்கள்.
சிறிலங்காவில் மிகவும் பிரதானமாக இருப்பது இராணுவமாகும். அந்த இராணுவத் தளபதியினது மிடுக்கும் ஓர்மமும் அரசியலில் ஒரு காத்திரமன பாத்திரத்தை வகிக்க வல்லது.
இப்பின்னணியில்தான் அரச தலைவரும் தனது மிடுக்கை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இப்போது அந்த தளபதியினது வீழ்ச்சியானது- தாக்குதல் மூலம் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியானது அரச தலைவரை ஓரளவு செயலற்ற நிலைக்கே தள்ளியுள்ளது.
அந்த இராணுவ தளபதியின் வீழ்ச்சியை குறியீட்டு அர்த்தத்தில் எடுத்துக் கொள்வோம்.
அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடன் உரையாடிய பலரிடமும் அரச தலைவர் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.
முதலாவதாக பதவிக்கு வருவதுதான் பிரச்சனை என்றும்
பதவிக்கு வந்தால் தன்னால் பிரச்சனையைக் கையாள முடியும் என்றும்
நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.
ஒருவகையில் அவரிடம் கற்பனை இருக்கவே செய்தது.
பதவிக்கு வந்த பின்பு ஜே.வி.பி.யினரையும் விடுதலைப் புலிகளையும் தன்னால் இலகுவாகக் கையாண்டுவிட முடியும் என்று அவர் நம்பினார்.
ஆனால் யதார்த்தம் அதற்கு நேர் முரணாகவே இருக்கிறது.
ராஜபக்ச பதவிக்கு வந்தபோது இருந்த கற்பனை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே காட்சியளிக்கிறது.
அவரது மகிந்த சிந்தனை என்பது எவ்விதமான திட்டமுமில்லாத முழு நீளமான கற்பனாவாதமாகக் காணப்படுகிறது. அவர் இப்போது எதுவித அரசியல் பொருளாதாரத் திட்டத்தை கொண்டிருக்கவில்லை. அதற்கான நடைமுறையையும் கொண்டிருக்கவுமில்லை. இப்படியான ஒரு தலைவன் நாட்டுக்கு இருக்க முடியாது.
ராஜபக்சவிடம் இலங்கைத் தீவு பற்றிய எதுவிதமான பார்வையும் இல்லை.
அவர் பதவிக்கு வந்தபோது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் படர்ந்திருந்தது உண்மைதான். ஆனால் அந்த ஒளிவட்டம் மிக விரைவில் கரைந்து போய்விட்டது.
அவர் தன்னைச் சூழ்ந்திருக்கக் கூடிய ஒளிவட்டத்தைக் காப்பாற்றக் கூடிய திட்டத்தையும் ஆளுமையையும் அவர் கொண்டிருக்கவில்லை.
இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பதில் தீர்க்கமான போக்குகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பதும் அவர் இயல்பில் சுயமாகத் தீர்மானம் எடுக்கக் கூடிய திறமையற்றவராகவே அவர் எப்போதும் காணப்பட்டிருக்கிறார்.
அவர் வாழ்நாளில் சுயமாகத் தீர்மானமெடுத்து அரசியல் ரீதியாக திட்டங்களை நிறைவேற்றியவராக இல்லை. இனியும் அவரால் சுயமாக ஒரு திட்டத்தைத் தீர்மானித்து சுயமாக நிறைவேற்ற முடியும் என்பது முடியாதது.
எதிர்காலப் பார்வை ஏதுமற்ற ஒரு தலைவனாகவே ராஜபக்ச எம்முன் காட்சியளிக்கிறார்.
எந்த ஒரு பிரச்சனையையும் கையாளக் கூடியவராக அவர் இல்லை என்பதை அவரைச் சூழ்ந்திருப்பவர்கள் கண்டுகொள்கிறார்கள். உண்மையிலே அவரின் அடிப்படை எதிரிகளாக ஐக்கிய தேசியக் கட்சியினரும் சந்திரிகா அணியினரும் ஜே.வி.பியினரும் கட்டங்களைப் பயன்படுத்தி தம்மை முன்நிறுத்தத் தொடங்கிவிட்டனர்.
ராஜபக்சவைப் பொறுத்தவரை நான்கு முனைகளிலும் அவருக்கு எதிரிகள் உள்ளன.
நண்பர்கள் எவரும் இல்லை.
ஒரு புறம் புலிகள்-
மாற்றுக் கருத்துக்கு இடமற்ற- விட்டுக்கொடுக்கப்பட முடியாத உரிமைகளின் பொருட்டு அவர்களின் நிலைப்பாடு உறுதியான தளத்தில் செயற்படத் தொடங்கியிருக்கிறது
மறுபக்கம் ஜே.வி.பியினர்
சூழலைப் பயன்படுத்தி பிரச்சனைகளைக் கிளறி அவற்றின் மூலம் தம்மை வளப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றனர்.
இந்தப் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தீர்வுத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகளில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்துவிட்டனர்.
மறுபக்கமாக அரசாங்கத்தின் மீதான தாக்குதலை புரிந்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியில் தலைமைக்காகப் போராடுவதற்காக பண்டாரநாயக்க குடும்பம் புறப்பட்டுவிட்டது. சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சந்திரிகா இன்னமும் விட்டுவிடவில்லை. சந்திரிகா இப்போது ஒரு பதவியிலும் இல்லாமல் இருக்கலாம். அதாவது அரசியலில் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைச்சுப் பதவியோ நாடாளுமன்ரப் பதவியோ இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவரை இன்றும் சிங்கள மக்கள் தேசிய சின்னமாகக் கருதுகின்றனர்.
ராஜபக்சவின் செயற்பாடுகள் காத்திரமானதாக இல்லாதபோது- இலங்கைத் தீவு நெருக்கடிக்குள்ளாகிறபோது தங்கள் கட்சிக்குள் இன்னொரு காத்திரமான தலைவராகக் காணக்கூடிய சந்திரிகா தொடர்ந்தும் இருக்கிறார். அப்படியென்றால் ராஜபக்சவை பொறுத்தவரையில் முடிவடையாத உட்கட்சிப் போராட்டத்தில் இழுத்துவிடப்பட்டுள்ளார். உள்நாட்டு- வெளிநாட்டு சிக்கல்களுக்குள்ளும் மாட்டுப்பட்டுள்ளார்.
இப்பின்னணியில் இலங்கைத் தீவின் அரசியல் மேலும் மேலும் சீரழிந்து- குழப்பகரமானதாகவே இருக்கக் கூடியதாகவும் உள்ளது என்றார் திருநாவுக்கரசு.
´
நன்றி>புதினம்.

கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு

ஜூன் 22, 2006

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்.
கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின் போதும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இதனை வலியுறுத்தினார்.
ஆனால் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இன்று வியாழக்கிழமை நிராகரித்திருப்பதாக அசோசியேட் பிறஸ் நிறுவன செய்தி தெரிவித்துள்ளது.

நன்றி>புதினம்.

தமிழீழஅரசை புலிகள் இயங்குகின்றனர் – AP செய்தி நிறுவனம்.

ஜூன் 22, 2006

சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் AP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரசு இயங்குவதை உணர்த்தி நிற்பதாகவும், AP செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. கிளிநொச்சியை தலைநகராகக் கொண்;டு, எல்லையில் குடிவரவு – குடியகல்வு – சுங்க நிர்வாகத்தையும், உள்ளே காவல்துறை, கல்விக் கட்டமைப்பு, வரியிறுப்பாளர்கள், விளையாட்டுத்துறை போன்ற அரசுக்கு உரித்தான சகல கட்டமைப்புக்களையும், விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாகவும், AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டள்ளது.

நன்றி>புதினம்.

எச்சரிக்கை!!! படங்கள் கோரமானவை.

ஜூன் 21, 2006

வங்காலை படுகொலைகள் காட்சிவடிவில், சிறுவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்.

http://www.sankathi.org/vankaalai.html

நன்றி

புலம்பெயர் துணைஇராணுவக் குழுவினரை வெளியேற்றுவோம்.

ஜூன் 20, 2006

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருப்பதற்காகத்தான் என்று பல இராஜதந்திரிகள் இப்போது நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்து நாட்டின் தூதுவர் விடுதலைப் புலிகளைப் பட்டியலிலிட்டதானது அமெரிக்காவின் நடவடிக்கை போன்று காட்டமானது அல்ல என்றும் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே இப் பட்டியலிலிடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா பட்டியலிலிட்டதன் மூலம் விடுதலைப் புலிகளிற்கு “யுத்தத்திற்காக” நேரடியாக நிதி சேர்ப்பதைத் தடை செய்துள்ளதுடன், விடுதலைப் புலிகளுடன் இராஜதந்திரத் தொடர்பைப் பேணுவதில்லை என்பதுமாகவே இருக்கிறது.

அதனைத் தவிர அமெரிக்காவில் எந்தவித நடவடிக்கைகளிற்குமே தடை விதிக்கப்படவில்லை.

தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் மாவீரர் விழா நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளுமே அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கான அன்பளிப்புக்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.

எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலிலிடுதல் அமெரிக்காவைப் போன்று வலியது ஒன்றல்ல என்ற கூற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான நிலைகளில் பெரிதான மாற்றங்கள் எதனையும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வரப்போவதில்லை என்பதே ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் வாய்வழி வந்த உண்மையாக இருக்கலாம்.

ஆனாலும் அந்நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் பயணம் செய்வதென்பது பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்படும் வரை தடைப்பட்டதாக இருக்கும்.

கனடாவும் விடுதலைப் புலிகளைப் பட்டியலிட்ட போதும், இதற்குத் தான் விதிவிலக்கு என்று தெரிவிக்கும் விதமாக பேச்சுவார்த்தையை கனடாவில் நடத்த ஒத்துழைப்பதாகவும் இது தொடர்பிலான தமது விருப்பை நோர்வேயிடம் தெரிவித்துள்ளதாகவும் அது கூறியிருந்தது.

இந்நாடுகள் என்ன வியாக்கியானங்களைத் தெரிவித்தாலும் இப்பட்டியலிடுதல் என்பது ஒரு பக்கச்சார்பான நடவடிக்கையாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.

இந்நாடுகளின் குடியுரிமை பெற்ற மக்களாக வாழும் புலம்பெயர் தமிழ்மக்களான எமக்கு இந்நடவடிக்கை ஏற்புடையதல்ல என்பது அந்நாடுகளுக்கு விளக்கும் பணி இப்போது நடைபெறுகிறது.

அதனைக்கூட அந்நாடுகளின் அரசுகளுடன், இராஜதந்திரிகளுடன் நட்பான பாங்குடன் நயமாகவே எமது மக்கள் விளக்கி வருகிறார்கள். இப்பட்டியலிடுதல் என்கிற சாட்டை வைத்து தமிழர்களை அவர்கள் வாழும் நாடுகளில் ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம் என்கிற எதிரியின் ஆசையைத் தவிடு பொடியாக்கும் அளவிற்கு அரசு மற்றும் உயரதிகாரிகளுடனான நட்பான தொடர்பையே புலம்பெயர் சமூகம் தற்போது பேணி வருகிறது.

இதற்கு மேலாக பல மேற்குலகப் பிரமுகர்களே இத்தடை தேவையற்ற, ஓரு பக்கச்சார்பான நடவடிக்கையென்றும், இருதரப்பினர் மீதும் அழுத்தம் கொடுப்பதே யதார்த்தம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவையெல்லாம் ஒரு புறமாக இருந்த போதும், தற்போதைய முறுகல் நிலைக்கான பூரண காரணகர்த்தாக்கள் துணை இராணுவக் குழுக்களே. அவைகளின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு-கிழக்கில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று புரிந்துணர்வு ஒப்பந்த விதிக்கு முரணான இந்தத் துணை ஆயுதக்குழுக்களின் கொலை வெறியாட்டச் செயல்களே இன்றைய இந்நிலைக்கான காரணமாகும்.

இந்நிலையில் மீண்டும் சமாதான முயற்சிகள் துளிர்க்க வேண்டும் என்றால் துணை இராணுவக் குழுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேற்குலகு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய சூழ்நிலையைப் புலம்பெயர் தமிழர்கள் மேலும் அதிகரிக்க வேண்டும்.

மேற்குலக நாடுகள் மனிதாபிமானத்தை பெரிய அளவில் மதிப்பவர்கள். அதற்காக எப்போதுமே உரத்துக் குரல் கொடுப்பவர்கள் என்ற காரணத்தை முன்வைத்தே, “பயங்கரவாதப்” போர்வையில் அவர்கள் மீதான சேறுபூசலை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்தது.

இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட அரசானது தனது படைகளினூடாகவும், துணை இராணுவக் குழுக்களினூடாகவும் மிகவும் மிலேச்சத்தனமான மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது.

சிறிலங்கா அரசாங்கப் படைகள் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் தற்சமயம் சர்வதேசத்தின் அவதானத்திற்கு பூரணமாக உள்ளாகிவிட்டன.

இக்கொடூரச் செயல்களுக்குக் காரணகர்த்தாக்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல சர்வதேச அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இருப்பினும் இத்தகைய கொடூரச் செயல்களை மேற்கொள்கிற சிறிலங்கா அரசாங்கப் படை மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களின் நபர்கள் மேற்குலகுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் மீது பாராமுகமாக இருக்கும் அல்லது இந்த விடயத்தை பாரதூரமாக எடுத்துக் கொள்ளாத மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் இப்போது அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பயணத்திற்கே அனுமதிக்காத நாடுகளுக்கு அல்லைப்பிட்டியில் ஒன்பது பேர் உட்பட பல அப்பாவிகளின் படுகொலைகளில் நேரடியாக தொடர்புடைய ஈ.பி.டி.பி. துணைக்குழுவானது சிறிலங்கா அரசின் தயவில் பயணம் மேற்கொள்வதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளின் மீதான இப்போதைய தடைகளுக்கு முன்னேற்பாடாக வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளால் தமிழ் மக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்ற கோதாவில் அறிக்கை தயாரித்து வெளியிட்ட மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பிற்கு இராணுவத் துணைக்குழுவின் பிரதிநிதிகளே உதவினார்கள் என்பதையும் வெளிக்கொணர வேண்டும்.

அந்த அறிக்கை தயாரிப்பிற்கான இங்கிலாந்தின் நெருங்கிய தொடர்பாளராக அடையாளப்படுத்தப்பட்டவரான ராமராஐன் என்பவர் ஒரு மோசமான குற்றவாளியாக சுவிசில் சிறைவாசம் அனுபவிப்பதையும், கனடாவில் தொடர்பாளரான டேவிட்சன், டென்சில் ஆகியோர் ஈ.பி.டி.பியின் முக்கிய பிரமுகர்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்து அந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்க வேண்டும்.

இது போன்றே மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் அந்த அமைப்பால் பயன்படுத்தப்பட்ட நபர்கள் குற்றங்களின் குறிப்புக்களாக, தமிழ்ச் சமூகத்திலிருந்து விடுபட்டு அந்நியப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பதையும், துணை இராணுவக் குழுவின் பிரதிநிதிகள் என்பதையும் ஆதாரப்படுத்த வேண்டும்.

சிறிலங்காவின் ஜனநாயகத்திற்குள் தாங்கள் இரண்டறக் கலந்து விட்டதாக அவர்கள் வெளிப்போக்கிற்குக் கூறினாலும், துணை இராணுவத்திற்கான சம்பளப்பட்டியலில் இருந்து கொண்டு சொந்த இனத்தையே அழிக்கின்றவர்கள் என்பதையும், படை முகாம்களிலேயே, படையினரின் பாதுகாப்புடனேயே அவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதையும் முக்கியப்படுத்த வேண்டும்.

அதேபோன்று இக்குழுக்களின் வெளிநாடுகளிலுள்ள பிரதிநிதிகள் தங்களை மனிதநேய அமைப்புக்களின் போர்வைக்குள் புகுத்த முயன்றாலும், அவர்கள் மீதான குற்றப்பட்டியல்களானது அவர்கள் கொடூர கொலைஞர்கள், பயங்கர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என்ற உண்மைகளைப் புடம் போட்டுக் காட்டிவிடும்.

எனவே சில உயிரற்றுப் போன அமைப்புக்களின் போர்வையில் விடுதலைப் புலிகள் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யப் புறப்பட்டிருக்கும் இக் காலகட்டத்தில், இவர்கள் பற்றிய பயங்கரப் பக்கங்களை வெளிக்கொணர்ந்து இவர்களது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவை இரண்டுமே காலந்தாழ்த்தாது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும். குறிப்பாக இங்கிலாந்திலும் கனடாவிலும் இந்நபர்கள் பற்றிய விடயங்களை அரசு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், ஏனைய நாடுகளிலும் இவை படிப்படியாக மக்களால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

எமது இந்தப் பரப்புரை மூலமாக, மேற்குலகு இக்குழுக்களின் மீது எடுக்கும் நடவடிக்கையே சமாதானத்திற்கான சூழ்நிலையை, தடைப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் உயிர் பெறுவதற்கு வழியேற்படுத்துவோம்.

நன்றி>புதினம்.

விமானக் குண்டுவீச்சு: சர்வதேச மன்னிப்புச் சபை கவலை.

ஜூன் 20, 2006

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்தும் விமானக் குண்டு வீச்சுக்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை:

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தைத் தொடர்ந்து பதில் விமானத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை கவலை அளிக்கிறது.

சம்பூர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அருகில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமைகளை மீறி பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் இந்த விமானத் தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தேசிய பாதுகாப்புக்கு இந்த நடவடிக்கை அவசியமானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பதில் குறித்து நாம் கவலை கொள்கிறோம்.

சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலையடுத்து ஏப்ரல் மாதமும் இத்தகைய தாக்குதல்களை திருகோணமலை சம்பூரில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தியது. அத்தாக்குதலில் 15 பொதுமக்கள் உயிரிழந்ததாக கண்காணிப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் வன்முறைகளில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது நீடித்து வரும் உக்கிரமற்ற போரினால் இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறக் கூடும் என்று நாம் கவலைகொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்த அறிக்கைக்கு பதிலளித்து சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது:

பொதுமக்களைத் தாக்குகிற திட்டத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். அதைத் தடுக்க இந்த நடவடிக்கை ஒரு வழிதான் இந்தத் தாக்குதல். தேசியப் பாதுகாப்பு மிக முக்கியமானது. அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்குமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

எமது தேசியப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து எவரும் எழுப்பி கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. இத்தகைய கேள்விகள் எழுப்புவோர் ஏன் நாட்டின் பிரதேச ஒற்றுமைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

இத்தகைய பதில் நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை நாம் கூடுமானவரை உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் விடுதலைப் புலிகள்தான் பேசாலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்றார் கேகலிய ரம்புக்வெல.

நன்றி>புதினம்.