இலங்கையில் மனித உரிமைகள் சீர்குலைந்துவிட்டது: ஐ.நா.

செப்ரெம்பர் 6, 2006

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையானது குறிப்பிடத்தகுந்தளவு சீர்குலைந்து போய்விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பிலான பிரிவின் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிறிலங்கா அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் உத்திசார் இலக்காக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் மனித உரிமை முறைகேடுகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் சர்வதேச அமைப்பு ஒன்று அவசியமானதும் அவசரமானதுமாக உள்ளது.
தங்களது நியாயப்பூர்வமான காரணங்களுக்கான ஆதரவை சர்வதேச சமூகத்திடம் எதிர்பார்க்கும் இருதரப்பினரும் மனித உரிமைகள் விடயத்தில் தங்களது நேர்மையான செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Advertisements

நிலைமைகளைக் கட்டுப்படுத்த சர்வதேசசமூகம் தவறிவிட்டது.

செப்ரெம்பர் 6, 2006

இலங்கை நிலைமைகளைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் தவறிவிட்டது என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்காவில் நிலவும் படுகேடான நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமுதாயம் தவறியதையொட்டி அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துக்கொள்கிறது.
சிறிலங்கா அரசின் ஆயுதப் படைகள் திருகோணமலை மாவட்ட சம்பூர் பகுதியை பலவந்தமாக இராணுவ அடிப்படையில் தம்வசப்படுத்திக்கொண்ட கொடுஞ்செயலையே இங்கு கண்டன காரணமாகக் கூறுகிறோம்.
போர் ஓய்வு ஒப்பந்தம் ஐயந்திரிபற வகுத்துக்காட்டும் எல்லைக்கோட்டை பலவந்தமாக மீறி சம்பூர் கொடும் பிடுங்கல் நடந்திருக்கிறது. இந்த நிலையைச் சீராக்கி தவறைத் திருத்தி உடனடியாக ஆவண செய்தாலன்றி ஒப்பந்தம் முற்றாகச் சீர்குலையும் சாத்தியக்கூறும் தோன்றியிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் விதிக்கும் கடப்பாடுகளை கடைப்பிடிப்பதிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதில் தவறில்லை என்று விடுதலைப் புலிகள் முடிவுசெய்யக்கூடிய ஒரு சாத்திதியக்கூறும் சம்பூர் கொடும் பிடுங்கலால் உருவாக வாய்ப்புண்டு என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விழைகின்றது.
சிறிலங்காவின் இந்த நடவடிக்கையால் வசதி ஏற்பாட்டாளர், கண்காணிப்பாளர், ஐரோப்பிய கூட்டமைப்பினர், கூட்டுத் தலைமை நாடுகள் ஆகியோர் புறம்தள்ளப்பட்டு அவமதிக்கப்பட்டு உதாசீனப்டுத்தப்பட்டிருக்கின்றனர். ஆயினும் அனைத்துலக சமுதாயம் சிறிலங்காவைக் கண்டிக்கத் தவறிவிட்டது. தண்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தவறிவிட்டது.
போர் ஓய்வு ஒப்பந்தம் படிப்படியாக நிலைகுலைந்துவிட்டது. அத்தோடு திட்டமிட்டே வேரறுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்திலிருந்து ஐ.நா பட்டயத்தை தூக்கியெறியும் வகையில் தமிழ் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுகள் வீசப்பட்டன. அனைத்துலக சமுதாயத்தின் மௌனத்தை சம்மத அறிகுறியாகக் கருத்தெடுத்த சிறிலங்காவின் வான்குண்டு வீச்சு, வேகப் பெருக்கெடுத்து ஒன்றன்பின் ஒன்றாகக் கிராமங்களை அழித்தது.
மாவிலாறு நீர் பங்கீட்டுத்தகராறு விதலைப் புலிகளாலும் கண்காணிப்பாளராலும் சுமூகமாகத் தீர்க்கப்படும் தருணத்தை எட்டிய வேளையில் அரச ஆயுதப்படைகள் தாக்குதலைத் தொடுத்து கட்டில்லாக் கொலைகள் புரிந்து பலத்த இடப்பிறழ்வையும் தோற்றுவித்திருந்தன.
இங்கே கூட அனைத்துலக சமுதாயத்தின் மௌனம் சம்மத அறிகுறியாகத் திரிபு படுத்தப்பட்டு போர் தொடுக்கும் துணிச்சலையும் அரசிற்குக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் இலக்குகள் மீது வான் குண்டுத்தாக்குதல்களை அரசு முடுக்கிய ஆரம்ப கட்டத்தில் ஒப்பந்த மீறலை கண்காணிப்பாளர், ஐரோப்பிய கூட்டமைப்பினர், கூட்டுத் தலைமை நாடுகள் ஆகியோர் அடங்கிய அனைத்துலக சமுதாயம் கண்டிக்காது தன் கடமையிலிருந்து தவறிவிட்டதை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அனைத்துலக சமுதாயத்தின் சுரத்தற்ற போக்கே தமிழ் மக்களுக்கெதிராகக் கொடுமை புரிய சிறிலங்கா அரசைத் தூண்டியதோடு ஒப்பந்தத்தை அது மீறவும் இன்றைய உருக்குலைவு நிலைக்கு இட்டுச் செல்லவும் காரணமாகியது என்றும் துணிந்து கூறலாம்.
ஒப்பந்த மீறல்களை கணிப்பெடுக்க நிறுவப்பட்ட கண்காணிப்புக் குழு தனக்குரிய அச்சொட்டான பணியை விட மனிதாபிமான மீறல்களைக் கணிப்பிடுவதிலேயே சிரத்தை எடுத்தது. ஓப்பந்த மீறல்களைப் பொறுத்த வரையில் அரசுமீது குற்றம் சார்த்த கண்காணிப்புக் குழுவிற்கு என்றுமே துணிச்சல் இருந்ததில்லை.
விதிகளைக் கடைப்பிடிக்குமாறு இரண்டு பிரிவினருக்கும் பொதுவாகப் போதகம் செய்யும் நழுவல் போக்கையே அது கடைப்பிடித்தது. தங்கு தடையின்றி அரசு குற்றம் புரிய இதுவே இடமளித்தது.
இன்னொன்றை நாம் இங்கே சுட்டிக்காட்டத் தவறக்கூடாது. ஐரோப்பித் தடையே அது.
விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் அது குற்றத் தண்டக் கறைச்சேறு பூசியது. போர் ஓய்வு ஒப்பந்தம் நிலைகுலைந்து போவதற்கு அடிநாதக் காரணமும் இதுவே. மறைமுகக் காரணமும் இதுவே.
பணி முடித்துப் பிரியும் கண்காணிப்புத் தலைவர் உல்வ் கென்றிக்சன் அவர்களும் நோர்வேயின் சிறப்பு அமைதித் தூதர் ஜோன் அன்சன் பவர் அவர்களும் இதையே நீதிவழி நின்று சுட்டிக்காட்டினார்கள்.
சம்பூர் கொடும்பிடுங்கலை அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு மீண்டும் கண்டிப்பதோடு சிறிலங்காவைச் சட்டத்தின் முன் நிறுத்துதற்கு வேண்டிய செவ்வையானதும் நீதியானதுமான நடவடிக்கையை அனைத்துலக சமுதாயம் மேற்கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் போர் ஓய்வு ஒப்பந்தம் கைநெகிழவிடப்படாது அதைக் காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டு நிற்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம.

செப்ரெம்பர் 6, 2006

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளதாவது:
சம்பூர் பிரதேசத்தை முழுமையாக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக சிறிலங்கா இராணுவத்தால் கூற முடியாது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய நிலைமைகள் நீடித்தால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து நாங்கள் விலகிக் கொள்வோம் என்றார் இளந்திரையன்.
“சம்பூர் ஆக்கிரமிப்பு தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நோர்வே மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களது முடிவுக்குப் பின்னர் இறுதி முடிவெடுக்கப்படும்” என்று விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக் குழுவினர் எதுவித பதிலும் தரவில்லை. கண்காணிப்புக் குழுவினர் ஏன் மௌனமாக இருக்கின்றனர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பதில் கிடைத்த பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றும் தயா மாஸ்டர் கூறினார்.
நன்றி>புதினம்.

இணைத்தலைமை நாடுகள் சிறீலங்காவை எச்சரிக்குமா?

செப்ரெம்பர் 5, 2006

இலங்கை அரசை கடுந்தொனியில் எச்சரிக்க இணைத் தலைமை நாடுகள் ஆயத்தம்
இலங்கையில் மீண்டுமொரு போர் வெடிக்க வுள்ள சூழ்நிலையில் இலங்கைக்கு வழங் கப்படும் உதவிகள் தொடர்பில் கடும் நிபந் தனைகளை முன்வைத்து கடுந்தொனியில் எச்சரிப்பதற்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் உத்தேசித்திருக்கின்றன என்று நம்பகரமாக அறியமுடிகின்றது.
இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டம் எதிர்வரும் பதினொராம் திகதி பிரஸல்ஸில் நடைபெற வுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது இலங்கை யின் தற்போதைய நிலைமை குறித்து விரி வாக ஆராயப்படவுள்ளது.
இலங்கையில் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசும், புலிகளும் உடனடி நட வடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் இலங் கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரு மென்று இணைத்தலைமை நாடுகள் எச்ச ரிக்கை விடுக்கவுள்ளன என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் கூறின.
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடருமானால் உதவி வழங்கும் விவ காரத்தில் கடுமையான சில நிபந்தனைகளை முன்வைப்பதற்கும் இணைத்தலைமை நாடு கள் உத்தேசித்திருக்கின்றன எனவும் அந்த வட்டாரங்கள் கூறின.
இதேவேளை,
இணைத் தலைமை நாடுகளின் அழுத் தத்தைத் தவிர்க்கும் வகையில் சில இராஜ தந்திர நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
மூதூரில் சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பிலும் இணைத்தலைமை நாடுகள் கடும் கண்டனத்தை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இணைப்பு : newstamilnet.com
Tuesday, 05 Sep 2006 USA

சர்வதேசம் உணர்ந்து கொள்ளுமா?

செப்ரெம்பர் 5, 2006

சிறிலங்கா பேரினவாத அரசு தற்போது தமிழர் தாயகத்தில் மிகப் பெரியதொரு இன அழிப்பு நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் தினமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவரும் படுகொலை செய்யப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி தமிழர்களின் தாயக மண் இன்று ஆட்லறித் தாக்குதலாலும் பல்குழல் பீரங்கித் தாக்குதலாலும் விமானக்குண்டு வீச்சுக் களாலும் அழிந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு மூர்க்கத்தனமான மிக மோசமான இன அழிப்பை சிங்களப் பேரினவாதப் படைகள் மேற்கொள்கின்ற சூழலில் சமாதானம் என்பது இனி கிட்டவரக்கூடிய சாத்தியமில்லை.
இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் மௌனமாக இருப்பது கவலைக்கும், கண்டனத்துக்கும் உரியது. ஏனெனில் இரு தரப்புக்கும் இடையில் யுத்தம் நிகழக்கூடாது என்பது தான் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென சர்வதேச சமூகம் விரும்புகின்றது. அது மாத்திரமன்றி போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
ஆனால் கள நிலைமைகளை அவதானிக்கின்ற போது சமாதானம் எனக்கூறிக் கொண்டு சிங்களப் பேரினவாத அரசு முழு அளவிலான யுத்த முனைகளைத்திறந்து விட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டினை முழுமையாக மீறி தமது முப்படைகளின் வலுவையும் பயன்படுத்தி தமிழ் மக்களை கொன்றொழிக்கின்ற போது சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசு மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதது ஏன்?
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டால் சிறிலங்காப் படைத் தளபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டால் சர்வதேச சமூகம் அனுதாப மும்,கண்டனமும் தெரிவிப்பதுடன் விடுதலைப்புலிகளைத் தடை செய்யும் தீர்மானத்துக்கு வந்து விடுகின்றனர்.
ஆனால் பிஞ்சுக் குழந்தைகளை, பெண்களை, வயோதிபர்களை எவ்வித ஈவிரக்கமுமற்ற முறையில் இனச்சுத்திகரிப்பு செய்யும் சிங்கள அரசை சர்வதேச சமூகம் கண்டிக்காது இறமையுள்ள நாடாக ஜனநாயக நாடாக பார்க்க நினைப்பது மனிதாபிமானத்தினை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
லெபனான் – இஸ்ரேல் மோதல் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச சமூகம் தலையிட்டு யுத்தத்தைத் தற்காலிகமாவது நிறுத்தி அமைதியை ஏற்படுத்த எடுத்த அதே அக்கறையையும் கரிசனையையும் இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து இன்னும் தாங்கள் விலகி விடவில்லை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதாகக்கூறும் சிறி லங்கா அரசு மாறாக தொடுத்திருக்கும் போரினால் இதுவரை பல இலட்சம் மக்கள் வரை போர் அவலத்தைச் சந்தித்துள்ளனர். யாழ்.குடா நாட்டில் சிறிலங்கா அரசு அமுல்படுத்தி வரும் தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவால் சுமார் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இன்று பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த தேர்தல்களைப் புறக்கணித்த யாழ் குடா மக்கள் மகிந்தரின் கொடும்பாவியை எரித்ததற்குப் பழிவாங்கும் வகையில் தான் இன்று குடா நாட்டில் சிங்களப் படை மக்களைக் கொடுமைப்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
அது மாத்திரமன்றி தமிழர் தாயகத்தில் போக்குவரத்துத் தடை களை விதித்து இடம்பெயர்ந்து அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள மக்களுக் கான உணவு, வைத்திய சேவைகளை முடக்கி கொடுமைப்படுத்தும் பேரின வாத அரசை இன்னும் சர்வதேச சமூகம் கண்டிக்காதது மாத்திரமின்றி சிங்கள அரசுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது இரு ப்பது இன்னும் சிறு பான்மையினமான தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதம் நசுக்கும் சூழலையே ஏற்படுத்தும்.
எனவே சர்வதேச சமூகம் இனியும் பாராமுகமாக பக்கசார்பாக நடந்து கொள்ளாது ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி>ஈழநாதம்.

சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள்.

செப்ரெம்பர் 5, 2006

திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும்சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும்-
மூதூரில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து இறங்குதுறை வரை நகர்ந்ததையிட்டு ஆனந்தப்படுவது
தமிழ் மக்களின் விடுதலை ஏக்கத்தின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம்.
இருப்பினும் எமது ஊடகங்களும் ஏதோ இறுதிப் போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டதாக எண்ணி, ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று அதீதமான ஆசைச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.
எழிலன், இளந்திரையன் கூறும் அதிகாரத் தரப்புச் செய்திகளுடன் ஏனைய ஊடக நிறுவனங்களால் வெளியிடப்படும் ஊகச் செய்திகளையும் இணைத்துத் தொகுப்பதனால் மக்கள் மனங்களில் ஒருவித அதீதமான எதிர்பார்ப்புக்களை எமது ஊடகவியலாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ செய்திகளும் அதற்கான அவர்களின் விளக்கங்களுமே மக்களுக்குப் போதுமானதாக இருக்கும்.சம்பூர் தந்திர யுத்தம் சம்பூரில் நடைபெறும் சமர் தற்காப்புச் சமாராக விடுதலைப் புலிகள் கூறினாலும் அடிப்படையில் ஒரு தந்திர யுத்தம் தான்.
இச்சமரில் புலிகளின் இராணுவ நகர்வுகள் எவ்வகையில் அமைந்தாலும் அடிப்படையில் மேற்குலக அனுசரணையாளர்களுக்கு உருவாக்கப்படும் ஒரு பாரிய பொறியாகவே கருத இடமுண்டு.
சண்டே லீடரின் இவ்வார ஏட்டில், விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியதாக வெளிவந்த செய்தியில், சம்பூரை இராணுவம் கைப்பற்றினால் போர் நிறுத்த ஒப்பந்தம் செயலற்றுப் போகும் என்று கூறியிருக்கும் விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
சிறிலங்கா அரச விமானப் படையினரின் குண்டு வீச்சுக்களும் மாவிலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பாரிய படையெடுப்புகளும் அப்பட்டமான போர் நிறுத்த மீறல்களாக இருந்தும் கண்காணிப்புக் குழுவோ அனுசரணையாளர்களோ வாய்மூடி மௌனியாக இதுவரை காலம் கடத்திய வரலாற்றுக்கு முடிவுரை எழுதும் நேரம் நெருங்கிவிட்டது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மகிந்த வெளியிட்ட சம்பூர் செய்தியானது, தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பூர் ஆக்கிரமிப்பால் திருமலைத் தளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அரசியல் செய்தியையும் மகிந்த கூறியுள்ளார்.
இந்நிலையில் திருகோணமலை கடற்படைத் தளத்தின் மீது புலிகளின் ஒரு எறிகணைக் குண்டு வீழ்ந்தாலும் அவரின் வெற்றிச் செய்தி அர்த்தமற்றுப் போகலாம்.
ஆயினும் புலிகளின் தந்திரோபாய நகர்வுகள், அதற்கிசைவாக அமையும் வாய்ப்பினை உருவாக்காது.அடுத்த நகர்வுகள்புலிகளின் அழுத்தங்கள் இனி அதிகமாகவே அனுசரணையாளர்கள் மீது திரும்பலாம். போர் நிறுத்த ஒப்பந்த சரத்துக்களை பலமுறை அரசு மீறினாலும் இம்முறை சம்பூர் பிரதேச மீறலானது சாட்சியங்கள் தேவையற்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.
சம்பூரை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று புலிகள் கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் பதில் நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?
இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது என்று நோர்வேக்குத் தெரியும்.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள் நிராகரித்தால் சர்வதேச உலகம் கூறும் பதிலென்ன என்பதில் அடுத்த கட்ட நகர்வு அமையும்.
இப்பொறிக்குள் அகப்பட்டுள்ள நோர்வே, சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்குமா அல்லது தானாகவே வெளியேறுமா என்பதைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியாவிடமும் இல்லை. மேற்குலகிடமும் இல்லை.
பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இப்போதே மகிந்த கூறத் தொடங்கிவிட்டார்.

இலங்கைத் தீவின் கள நிலைமையைத் தீர்மானிக்கும் பந்து நோர்வேயின் காலடியின் உள்ளது.
நன்றி>புதினம்

வணக்கம்.

செப்ரெம்பர் 5, 2006

எனது புதிய பதிவுக்கு வருகை தரும் அனைவருக்கும் வணக்கங்கள்.

சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள்.

செப்ரெம்பர் 5, 2006

 திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும்சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும்

மூதூரில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து இறங்குதுறை வரை நகர்ந்ததையிட்டு ஆனந்தப்படுவதும

தமிழ் மக்களின் விடுதலை ஏக்கத்தின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம்.

இருப்பினும் எமது ஊடகங்களும் ஏதோ இறுதிப் போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டதாக எண்ணி, ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று அதீதமான ஆசைச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

எழிலன், இளந்திரையன் கூறும் அதிகாரத் தரப்புச் செய்திகளுடன் ஏனைய ஊடக நிறுவனங்களால் வெளியிடப்படும் ஊகச் செய்திகளையும் இணைத்துத் தொகுப்பதனால் மக்கள் மனங்களில் ஒருவித அதீதமான எதிர்பார்ப்புக்களை எமது ஊடகவியலாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ செய்திகளும் அதற்கான அவர்களின் விளக்கங்களுமே மக்களுக்குப் போதுமானதாக இருக்கும்.சம்பூர் தந்திர யுத்தம் சம்பூரில் நடைபெறும் சமர் தற்காப்புச் சமாராக விடுதலைப் புலிகள் கூறினாலும் அடிப்படையில் ஒரு தந்திர யுத்தம் தான்.இச்சமரில் புலிகளின் இராணுவ நகர்வுகள் எவ்வகையில் அமைந்தாலும் அடிப்படையில் மேற்குலக அனுசரணையாளர்களுக்கு உருவாக்கப்படும் ஒரு பாரிய பொறியாகவே கருத இடமுண்டு.

சண்டே லீடரின் இவ்வார ஏட்டில், விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியதாக வெளிவந்த செய்தியில், சம்பூரை இராணுவம் கைப்பற்றினால் போர் நிறுத்த ஒப்பந்தம் செயலற்றுப் போகும் என்று கூறியிருக்கும் விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

சிறிலங்கா அரச விமானப் படையினரின் குண்டு வீச்சுக்களும் மாவிலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பாரிய படையெடுப்புகளும் அப்பட்டமான போர் நிறுத்த மீறல்களாக இருந்தும் கண்காணிப்புக் குழுவோ அனுசரணையாளர்களோ வாய்மூடி மௌனியாக இதுவரை காலம் கடத்திய வரலாற்றுக்கு முடிவுரை எழுதும் நேரம் நெருங்கிவிட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மகிந்த வெளியிட்ட சம்பூர் செய்தியானது, தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பூர் ஆக்கிரமிப்பால் திருமலைத் தளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அரசியல் செய்தியையும் மகிந்த கூறியுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை கடற்படைத் தளத்தின் மீது புலிகளின் ஒரு எறிகணைக் குண்டு வீழ்ந்தாலும் அவரின் வெற்றிச் செய்தி அர்த்தமற்றுப் போகலாம்.

ஆயினும் புலிகளின் தந்திரோபாய நகர்வுகள், அதற்கிசைவாக அமையும் வாய்ப்பினை உருவாக்காது.அடுத்த நகர்வுகள்புலிகளின் அழுத்தங்கள் இனி அதிகமாகவே அனுசரணையாளர்கள் மீது திரும்பலாம். போர் நிறுத்த ஒப்பந்த சரத்துக்களை பலமுறை அரசு மீறினாலும் இம்முறை சம்பூர் பிரதேச மீறலானது சாட்சியங்கள் தேவையற்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.சம்பூரை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று புலிகள் கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் பதில் நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?

இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது என்று நோர்வேக்குத் தெரியும்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள் நிராகரித்தால் சர்வதேச உலகம் கூறும் பதிலென்ன என்பதில் அடுத்த கட்ட நகர்வு அமையும்.

இப்பொறிக்குள் அகப்பட்டுள்ள நோர்வே, சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்குமா அல்லது தானாகவே வெளியேறுமா என்பதைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியாவிடமும் இல்லை. மேற்குலகிடமும் இல்லை.

பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இப்போதே மகிந்த கூறத் தொடங்கிவிட்டார்.

ஆம

இலங்கைத் தீவின் கள நிலைமையைத் தீர்மானிக்கும் பந்து நோர்வேயின் காலடியின் உள்ளது.

நன்றி>புதினம்

சர்வதேசம் உணர்ந்து கொள்ளுமா?

செப்ரெம்பர் 4, 2006

சிறிலங்கா பேரினவாத அரசு தற்போது தமிழர் தாயகத்தில் மிகப் பெரியதொரு இன அழிப்பு நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்கள் தினமும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவரும் படுகொலை செய்யப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி தமிழர்களின் தாயக மண் இன்று ஆட்லறித் தாக்குதலாலும் பல்குழல் பீரங்கித் தாக்குதலாலும் விமானக்குண்டு வீச்சுக் களாலும் அழிந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு மூர்க்கத்தனமான மிக மோசமான இன அழிப்பை சிங்களப் பேரினவாதப் படைகள் மேற்கொள்கின்ற சூழலில் சமாதானம் என்பது இனி கிட்டவரக்கூடிய சாத்தியமில்லை.

இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் மௌனமாக இருப்பது கவலைக்கும், கண்டனத்துக்கும் உரியது. ஏனெனில் இரு தரப்புக்கும் இடையில் யுத்தம் நிகழக்கூடாது என்பது தான் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாக இருக்கின்றது.

இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென சர்வதேச சமூகம் விரும்புகின்றது. அது மாத்திரமன்றி போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

ஆனால் கள நிலைமைகளை அவதானிக்கின்ற போது சமாதானம் எனக்கூறிக் கொண்டு சிங்களப் பேரினவாத அரசு முழு அளவிலான யுத்த முனைகளைத்திறந்து விட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டினை முழுமையாக மீறி தமது முப்படைகளின் வலுவையும் பயன்படுத்தி தமிழ் மக்களை கொன்றொழிக்கின்ற போது சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசு மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதது ஏன்?

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டால் சிறிலங்காப் படைத் தளபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டால் சர்வதேச சமூகம் அனுதாப மும்,கண்டனமும் தெரிவிப்பதுடன் விடுதலைப்புலிகளைத் தடை செய்யும் தீர்மானத்துக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால் பிஞ்சுக் குழந்தைகளை, பெண்களை, வயோதிபர்களை எவ்வித ஈவிரக்கமுமற்ற முறையில் இனச்சுத்திகரிப்பு செய்யும் சிங்கள அரசை சர்வதேச சமூகம் கண்டிக்காது இறமையுள்ள நாடாக ஜனநாயக நாடாக பார்க்க நினைப்பது மனிதாபிமானத்தினை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
லெபனான் – இஸ்ரேல் மோதல் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து சர்வதேச சமூகம் தலையிட்டு யுத்தத்தைத் தற்காலிகமாவது நிறுத்தி அமைதியை ஏற்படுத்த எடுத்த அதே அக்கறையையும் கரிசனையையும் இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து இன்னும் தாங்கள் விலகி விடவில்லை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதாகக்கூறும் சிறி லங்கா அரசு மாறாக தொடுத்திருக்கும் போரினால் இதுவரை பல இலட்சம் மக்கள் வரை போர் அவலத்தைச் சந்தித்துள்ளனர். யாழ்.குடா நாட்டில் சிறிலங்கா அரசு அமுல்படுத்தி வரும் தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவால் சுமார் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இன்று பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த தேர்தல்களைப் புறக்கணித்த யாழ் குடா மக்கள் மகிந்தரின் கொடும்பாவியை எரித்ததற்குப் பழிவாங்கும் வகையில் தான் இன்று குடா நாட்டில் சிங்களப் படை மக்களைக் கொடுமைப்படுத்தும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி தமிழர் தாயகத்தில் போக்குவரத்துத் தடை களை விதித்து இடம்பெயர்ந்து அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள மக்களுக் கான உணவு, வைத்திய சேவைகளை முடக்கி கொடுமைப்படுத்தும் பேரின வாத அரசை இன்னும் சர்வதேச சமூகம் கண்டிக்காதது மாத்திரமின்றி சிங்கள அரசுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது இரு ப்பது இன்னும் சிறு பான்மையினமான தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதம் நசுக்கும் சூழலையே ஏற்படுத்தும்.

எனவே சர்வதேச சமூகம் இனியும் பாராமுகமாக பக்கசார்பாக நடந்து கொள்ளாது ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி>ஈழநாதம்.

இலங்கை மத்தியவங்கியின் நம்பிக்கை தன்மை.

செப்ரெம்பர் 4, 2006

ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளுக்கான நிதி முடக்கப்பட்டுள்ளது: தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையால் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளுக்கான நிதி முடக்கப்பட்டுள்ளது என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பேச்சாளர் அர்ஜூனன் எதிர்வீரசிங்கம் கூறியதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் ரூ 75,000,000 தொகையானது யுனிசெஃப், சிறுவர் பாதுகாப்பு நிதியம், நிப்போன் அறக்கட்டளை மற்றும் ஓப்பரேசன் அமெரிக்கா நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கான தொகையாகும்.

கடந்த ஓகஸ்ட் 29 ஆம் நாள் எமது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக வங்கிகளிலிருந்து தெரிவிக்கபட்டது. ஆனால் இதுவரையில் இந்த வங்கிக் கணக்கு முடக்கத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பான எதுவித தாக்கீதும் எமக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

முடக்கி வைக்கப்பட்டுள்ள தொகையானது வடக்கு கிழக்கில் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளுக்குரிய திட்டங்களுக்கானது என்றார் அவர்.

நன்றி<புதினம்.