ஈழத்தமிழரை ஆதரிக்கும் ஜெயலலிதா.

ஈழத் தமிழர் பிரச்சனையில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?: கா.காளிமுத்து விளக்கம்

ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என்று அக்கட்சியின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கா.காளிமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

றிடிஃப் ஆங்கில இணையத்தளத்துக்கு கா.காளிமுத்து அளித்த நேர்காணல்:

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளை உங்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களான வைகோ, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான உங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டதாக அர்த்தமா?

பதில்: தமிழகத்தில் எதுவித ஆயுதக் குழுவினரது நடமாட்டமும் இருக்கக் கூடாது என்பதில் அம்மா(முதல்வர் ஜெயலலிதா) உறுதியாக உள்ளார். அனைத்துத் தமிழர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார்.

கேள்வி: அனைத்துத் தமிழர்களும் என்றால்? தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களையும் சேர்த்தா?

பதில்: ஆமாம். தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்கின்ற தமிழர்களைத்தான். தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என்பதும் அனைத்துத் தமிழர்களை ஆதரிப்பது என்பதும் இரு வேறு விடயங்கள்.

எமது நண்பர்களான வைகோ, திருமாவளவனும் கூட தமிழகத்தில் பயங்கரவாதிகள் நுழைவதை விரும்பமாட்டார்கள் என்றார் காளிமுத்து.

நன்றி>புதினம்

பின்னூட்டமொன்றை இடுக