ஆகஸ்ட், 2006 க்கான தொகுப்பு

எம்.ஜி.ஆர். சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 28, 2006

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகளை சிங்கள இராணுவத்தினர் தார்பூசி அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களால் அவருக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது.
இந்தச் சிலை கடந்த ஆண்டு இந்திய சிற்பக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.
யாழில் ஊரடங்குச் சட்டத்தினை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கள இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வல்வெட்டித்துறையில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் வீதி திருத்தத்துக்கு வைக்கப்பட்டிருந்த தாரை எம்.ஜி.ஆர். உருவச்சிலையின் மீது பூசி சேதப்படுத்தியுள்ளனர்.
சிங்கள இராணுவத்தினர் இந்நடவடிக்கையினை போது அவர்களுக்கு உதவியாக துணை இராணுவக் குழுவினரும் உடனிருந்து செயற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல் குருநகரில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையும் இராணுவத்தினரால் அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நெல்லியடியில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் கரும்புலியாக தன் இன்னுயிரை அர்ப்பணித்த கப்டன் மில்லரின் திருவுருவச் சிலையையும் அண்மையில் சிங்கள இராணுவத்தினர் அடித்து உடைத்து சேதப்படுத்தியிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களும் சிங்கள இராணுவத்தினால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
நன்றி>புதினம்.

ஏழைமக்களின் யுத்தம் பயங்கரவாதமா?- “ரொறன்ரோ சண்”:

ஆகஸ்ட் 28, 2006

கனேடிய இஸ்ரேலியர்கள்- சீக்கியர்கள்- ஐரிஸ் நாட்டவர் செய்ததையேதான் தமிழர்களும் செய்கிறார்கள்: “ரொறன்ரோ சண்”:

கனடாவில் உள்ள இஸ்ரேலியர்கள்-சீக்கியர்கள் மற்றும் ஐரிஸ் நாட்டவர்கள் தங்களது நாடுகளின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பைத்தான் கனேடியத் தமிழர்களும் செய்கிறார்கள் என்று கனடாவிலிருந்து வெளியாகும் “ரொறன்ரோ சண்” என்ற ஏடு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த ஏட்டில் எறிக் மார்க்கோலிஸ் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்:
பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஆறு கனேடியத் தமிழர்கள் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமையானது எனக்கு சேர் பீற்றர் உஸ்டினோவின் அறிவார்ந்த் வரிகளை நினைவூட்டியது.
அந்த வரிகள்:
“ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்”
அமெரிக்க அரச தலைவர் புஸ்சின் தத்துவம் மற்றும் கொள்கைகளை பின்பற்றி கனடாவின் ஹார்ப்பர் அரசாங்கமும் அண்மையில் இலங்கை தமிழ்ப் புலிகள் கெரில்லாக்களை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது. 1997 ஆம் ஆண்டு அமெரிக்கா பட்டியலில் இணைத்தது.
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. பல தசாப்தங்களாக பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களும் சிறுபான்மை இந்து தமிழர்களுக்கும் இடையேயான முறுகல் வளர்ந்து வந்தது. சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக தனித் தனிழ்நாடு கோரி தமிழ்ப் புலிகள் கெரில்லாக்கள் கொடுமையான இரத்தம் தோய்ந்த போரில் ஈடுபட்டனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் உயிரிழந்தனர். வெளிநாட்டு அனுசரணை இருந்தபோதும் யுத்தம் தொடர்கிறது.
இலங்கையின் சிங்களவர் கட்டுப்பாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை உள்ளது. விடுதலைப் புலிகளிடம் குறைந்தபட்ச ஆயுதங்களே உள்ளன. கனடாவில் உள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் தமிழர்களின் பணத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் வாங்கப்பட்டன.
- கனடாவில் உள்ள ஐரிஸ் இன மக்கள் இதனைத்தான் அயர்ந்தால்ந்து விடுதலை இராணுவத்துக்குச் செய்தனர
- கனடாவில் உள்ள யூத இன மக்கள், இங்கிலாந்திடமிருந்து இஸ்ரேலிய விடுதலைக்கான போருக்காக ஆயுதங்களை வாங்க நிதி சேகரித்தனர்.
- பஞ்சாபில் சீக்கிய தனிநாடு கோரியவர்களுக்கு கனேடிய சீக்கியர்கள் நிதி உதவி அளித்தனர்.
புலிகள் துணிச்சல் மிக்கவர்கள்-உயர்வானவர்கள்- அவர்கள் தெற்காசியாவின் ஹிஸ்புல்லாக்கள். அரசாங்கத்துக்கு எதிராக தங்களது உடல்களையே மனித வெடிகுண்டுகளாக்கியவர்கள். அதன் பின்னர் 1980-களில் இந்தியா உள்நுழைந்து தன்னோடு இணைக்க முயற்சித்தது. 1991 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவை ஒரு பெண் புலி தன்னை வெடிக்கச் செய்து அழித்தார்.
விடுதலைப் புலிகள் கொடூரமாக அதிகமான கொலைகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் வெறிபிடித்த, மிகவும் ஆபத்தான ஒரு சர்வாதிகாரமான அமைப்பினர். ஆனால் அவர்கள் அமெரிக்காவும் தற்போது கனடாவும் கூறுவது போல் “பயங்கரவாதிகள்” அல்ல.
“அரசியல் காரணங்களுக்காக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது” என்பதுதான் பயங்கரவாதமாக பொதுவில் வரையறுக்கப்பட்டுள்ளது. விமானங்கள், தொடரூந்துகள், பாடசாலைகளைத் தகர்க்கும் பைத்தியகார நாய்கள் பயங்கரவாதிகள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த வரையறையின் கீழ் டிரெஸ்டென், ஹம்பர்க், டோக்கியோ, ஒசாகா, நாகசாகி மற்றும் ஹிரோசிமாவில் பெருந்தொகையான மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை என்ன என்று அழைப்பது?
அல்லத
- ரஸ்யாவினால் செச்சினியாவில் ஒரு தசாப்த காலத்துக்கு முன்பாக 1 இலட்சம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1982 ஆம் ஆண்டு பெய்ரூட் மீதான் இஸ்ரேலின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 18 ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1991 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தில் தொற்றுநோயை உருவாக்கி ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இவற்றை அந்த வரையறையின் கீழ் என்னவென்று அழைப்பது?
- அமெரிக்கா, கனேடிய மற்றும் நேட்டோ படைகளால் ஆப்கான் கிராமங்கள் மீது குண்டு வீசப்பட்டது அது பற்றி பாரபட்சமின்றி என்ன சொல்வது?
அல்லது அண்மையில் ஒரு இலட்சம் இஸ்ரேல் மற்றும் லெபனான் மக்கள் கொல்லப்பட்டது சர்வதேச சமூகத்தால் போர்க் குற்றம் இல்லை என்று கூறப்பட்டதே அதை என்ன என்று சொல்வது?
மற்றவர்களை பயங்கரவாதத்தின் கீழ் குற்றம் சொல்கிறவர்கள் அடிக்கடி தாங்களே அதை செய்கின்றனர்.
தமிழ்ப் புலிகள் இலங்கையின் மூன்றில் பகுதியை நிர்வகித்து வருகின்றனர். அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைப்பது அர்த்தமற்றது- தவறானது. லெபனானில் ஊழலற்ற நிர்வாகம் நடத்தும் ஹிஸ்புல்லாக்களை “பயங்கரவாத காடையர்கள்” என்று அழைப்பது போல் தவறானதாகிவிடும்.
“பயங்கரவாதம்” என்ற சொற்றொடரானது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க கையாளப்படும் ஒரு அரசியல் ஆயுதம்.
முஸ்லிம் உலகத்தை கனடா அண்மையில் எதிரியாக ஆக்கிக் கொண்டது. இப்போது அந்நாட்டின் சொந்த மக்கள் மீதும் வர்த்தக நிலைகள் மீதும் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கிறது. தமிழ்ப் புலிகளை சிலந்தி வலைக்குள் தள்ளிவிடுவதற்கு இது நேரமல்ல. குறிப்பாக கனடாவுக்கோ அமெரிக்காவுக்கோ எதிராக புலிகள் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கடந்த கால கனேடிய அரசுகள் செய்யவில்லை. பிரச்சனையும் எழவில்லை.
பயங்கரவாதம் என்பது ஒரு உத்தி, அது ஒரு சிந்தனை அல்ல. பல தசாப்தகால ஒடுக்குமுறைகளுக்குப் பின்னர் தமிழ்ப் புலிகள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். அனைத்து மக்களும் ஒடுக்குமுறைகளை சகிக்காமல் ஆயுதப் போராட்டம் நடத்தியதை நாம் மேற்கத்தியர்கள் மறந்துவிட்டோம்.
தனது சொந்த மக்களுக்கு உலகின் இரண்டாம் நிலையிலான சுகாதார வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலையில் மற்றொரு அந்நிய நாட்டு யுத்தத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டு புதிய பாதுகாப்பு பிரச்சனைகளை கனேடியர்களுக்கு உருவாக்க வேண்டும்? என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

ஈழத்தமிழருக்கு என ஒரு குழுமம்.

ஆகஸ்ட் 27, 2006

வாருங்கள் நண்பர்களே, இது ஈழத்தமிழருக்கான ஒரு குழுமம். எமது எண்ணங்களை, எமது தேவைகளை, எமது விருப்புகளை பற்றி பேசுவோம். எமது தேசத்தின் விடியலுக்காக எம்மாலான அனைத்து முயற்சிகள் பற்றி பேசுவோம். வலைப்பதிவுகளின் பாதை, அதன் போக்கு, அதன் குறிக்கோள் பற்றி பேசுவோம். இணையத்தின்மூலம் இயன்றவரை செயற்படுவோம். சிறுதுருப்பையும் பெருஇருப்பாக்கி காட்டுவோம். தனித்தனியாக வலைபதித்த நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம். தெரிந்ததை தெரிவிப்போம் தெரியாததை தெரிந்து கொள்வோம். அனைத்து வழிகளிலும் ஒன்றினைந்து எமது தேசத்தின் விடியலுக்கு வலுச்சேர்ப்போம்.
உணர்வாளர்கள், விருப்புடையோர்,எம்மீது நேசம்கொண்டோர் உங்கள் கருத்துக்களை கூற இங்கே சுட்டவும்.>http://groups.google.com/group/eelam1

நேசத்துடன்
இவன்
ஈழபாரதி.

இந்திய தேசிய கீதத்துக்கு அவமரியாதை.

ஆகஸ்ட் 27, 2006

சிறிலங்காவில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் கால் பந்தாட்டத்தில் இந்திய- சிறிலங்கா அணிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மோதின.

முன்பாக இந்திய வீரர்கள் தேசிய கீதத்திற்கு மரியாதை செய்வதற்காக அணிவகுத்து நின்றனர்.

அப்போது இந்திய தேசிய கீதம் தெளிவற்ற முறையில் ஒலிபரப்பப்பட்டது.

ஆனால் சிறிலங்காவின் தேசிய கீதம் சிறப்பான முறையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று இந்திய தேசிய விளையாட்டுக் குழுச் செயலர் ஜீவன்ராம் சிரஸ்தா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளை நடத்தும் நாடு இப்படியாக கவனக்குறைவுடன் இருப்பது வேதனைக்குரியது என்றும் இது பற்றி தெற்காசிய சம்மேளனத்தில் தாங்கள் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டியில் இந்திய தேசிய கீதத்தை திட்டமிட்ட முறையில் குழப்பமான வகையில் ஒலிபரப்பியமையானது இந்திய வீரர்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்து சிறிலங்கா அணி வெற்றி பெறுவதற்காக திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாக இருக்கலாம் என்றும் இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று சனிக்கிழமையான வரையான போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கங்களில் சதத்தை எட்டி தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது
நன்றி>புதினம்.

விடுதலைப் புலிகளின் உத்திகள்: இக்பால் அத்தாஸ்

ஆகஸ்ட் 27, 2006

யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டு வரும் சில உத்திகள் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு அமைப்பும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் விடைதேடி வருவதாக இராணுவம் தொடர்பான ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சண்டே ரைம்ஸ்” வார இதழில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான இக்பால் அத்தாசின் கட்டுரையில் இது குறித்து இடம்பெற்றுள்ளவை:
கொழும்பில் உள்ள புலனாய்வு அமைப்புக்கள் மட்டுமின்றி சர்வதேச புலனாய்வு அமைப்புக்களின் மத்தியிலும் பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது சில வளங்களை இந்த சமரில் பயன்படுத்தவில்லை? என்பதுதான் அந்த கேள்வி. அது தொடர்பிலான சில விடயங்கள் இன்னமும் தெளிவுபடுத்தப்படாமலேயே உள்ளன.
- இரணைமடு நீர்த்தேக்கம் அருகே 1.4 கிலோ மீற்றர் நீளமுள்ள விமானத் தளத்தை விடுதலைப் புலிகள் அமைத்திருப்பதாக கூறியிருக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 5 இலகு ரக விமானங்கள் இருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு அமைப்பு ஒன்று உறுதி செய்து சிறிலங்கா அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. வான்வழி தற்கொலைத் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்தக் கூடும் என்ற அச்சமும் உள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் அதனை பாவிக்கவில்லை.
- தரையிலிருந்து வானில் சென்று தாக்குதல் நடத்தும் ரஸ்ய தயாரிப்பான எஸ்.ஏ.7 என்ற ஏவுகணை விடுதலைப் புலிகளிடம் உள்ளது. மூன்றாம் ஈழப் போரில் சிறிலங்கா விமானப் படையின் பயணிகள் விமானத்தை 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கியபோது இது பயன்படுத்தப்பட்டது. இந்த ரக ஏவுகணைளின் பயன்பாட்டுக்காலம் குறைவானதுதன். அப்படியான நிலையில் அண்மையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தனி என்பவர் விடுதலைப் புலிகளிடம் இத்தகைய ஏவுகணைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
- தங்களது விமானத் தளத்தைப் பாதுகாப்பதற்கான விமானப் படை பாதுகாப்பு சாதனங்களை விடுதலைப் புலிகள் வைத்திருப்பதாக கடந்த ஆண்டு எழுதியிருந்தோம். இரணைமடு விமானத் தளத்துக்கு மேலாக 3 விதமான உலங்குவானூர்திகள் ஏவுகணைகளுடன் பறந்த நிலையில் இது தெரிவிக்கப்பட்டது. எஸ்.ஏ.7 தரையிலிருந்து வானை நோக்கித் தாக்குதல் ஏவுகணையானது விரைந்து சென்று தாக்காது என்பதால் அமெரிக்காவில் எஸ்.ஏ.18 ரக ஏவுகணைகளை வாங்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் விமானத் தளத்தில் பயன்படுத்தப்படும் பல தளபாடங்கள் குறித்தும் அமெரிக்க புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் விடுதலைப் புலிகள் ஏன் விமான தளத்தை பயன்படுத்தவில்லை?
- விடுதலைப் புலிகளின் பலமாக உள்ள கடற்புலிகள் தற்போதைய சமரில் பெருந்தொகையில் பயன்படுத்தப்படவில்லை. சிறிலங்கா விமானப் படையின் தாக்குதல் காரணமாகவா? அல்லது திட்டமிட்ட வகையில் நகர்த்தப்பட்டுள்ளனரா?
- ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் ஓகஸ்ட் 18 ஆம் நாள் வரை 14 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் 141 சிறிலங்கா இராணுவத்தினர் யாழ். குடாநாட்டில் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 2 அதிகாரிகள் மற்றும் 21 இராணுவத்தினர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் 43 அதிகாரிகள் மற்றும் 685 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டு சமரில் 12 அதிகாரிகளும் 28 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
யூலை 26 ஆம் நாள் முதல் நேற்று சனிக்கிழமை வரை மொத்தம் 278 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த 246 பேர்- கடற்படையில் 9- விமானப் படையில் 2- காவல்துறையில் 14- ஊர்காவல் படையில் 7. யாழ். சமரில் 800 போராளிகள் இறந்தனர் என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுயாதீனமாக விசாரித்தமையில் இந்த எண்ணிக்கை சாத்தியமற்றது என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

இந்தியாவின் கவலை.

ஆகஸ்ட் 27, 2006

சிறிலங்காவில் பாகிஸ்தனிய ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறித்து நோர்வேயிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த ஓகஸ்ட் 23 ஆம் நாளன்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கார் ஸ்டொரை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சியாம் சரண் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது இலங்கை நிலைமைகள் குறித்தும் சிறிலங்காவில் பாகிஸ்தானிய ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமை தொடர்பான இந்திய புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான புதிய பாகிஸ்தான் தூதுவராக விமானப் படையின் பிரதி தளபதி நியமிக்கப்படுவது குறித்த தனது அதிருப்தியையும் நோர்வேயிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை போர் நிலைமைகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடன் சியாம் சரண் ஆலோசனை நடத்தினார். மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மூன்று நாள் போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான அகதிகளின் வருகையானது தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே ஒரு அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் நோர்வேத் தரப்பினரிடம் சியாம் சரண் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அமைதி முயற்சிகளில் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்து உருவாவதற்காக ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியையும் மகிந்தவின் சுதந்திரக் கட்சியையும் இணைந்து செயற்பட வைக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வழமையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள “சம்பூர்” குறித்த சிறிலங்காவின் அச்சத்தை நோர்வேத் தரப்பினர் இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். சம்பூரிலிருந்து விடுதலைப் புலிகள் விலகிக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலைமையில் பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 3 நாள் போர் நிறுத்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நோர்வேத் தரப்பினர் தெரிவித்தனர்.
சியாம் சரணின் நோர்வே பயணத்தின் போது ஓஸ்லோவில் தங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேசியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு நடைபெற்று வந்த நிலையில் புதுடில்லியில் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம் சந்தித்துப் பேசினார். இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அகமதுவையும் இந்திய நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களையும் ஹக்கீம் சந்தித்துப் பேசினார்.
நன்றி>புதினம்.

யாழிலிருந்து வெளிநாட்டு பணியாளர்கள் வெளியேறினர்.

ஆகஸ்ட் 26, 2006

யாழ்ப்பாணத்திலிருந்து பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்று வெளியேறினர்.
நோர்வே அகதிகள் சபை, வேர்ல்ட் விசன், கரித்தாஸ், பார்க், டெனிஸ் மிதிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் சேவா லங்கா ஆகியவற்றின் வெளிநாட்டுப் பணியாளர்கள் இன்று சனிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடிகள் தாங்கிய படகு மூலமாக வெளியேறியுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களும் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடையும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
மேலும் அவசர மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகோரும் நிலையில் உள்ள 150 பொதுமக்களையும் யாழிலிருந்து படகுகள் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வெளியேற்றியுள்ளனர்.
நன்ரி>புதினம்.

இந்தியருக்கு எதிரான சிங்களவரின் துரோகங்கள்.

ஆகஸ்ட் 26, 2006


இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் “தினமணி” நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார்.

“தினமணி” நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை:

சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர்.

ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார்.

கீழக்கரை, காயல்பட்டினம், இராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய தமிழக நகரங்கலில் இருந்து தமிழரான முஸ்லிம்களும் மும்பையிலிருந்து போராக்கள், பார்சிகள், சிந்திகளான முஸ்லிம்களும் கொழும்பு நகரிலும் சிங்களக் கிராமங்களிலும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். 1915-ல் முஸ்லிம்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் மூண்டது. முஸ்லிம்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு, பின்பு இலங்கைப் பிரதமரான சேனநாயக்கா உள்ளிட்ட மூத்த சிங்களத் தலைவர்கள் அக்காலத்தில் திரண்டெழுந்தனர்.
1927-ல் காந்தியடிகளின் இலங்கைப் பயணத்தின்போது சிங்களத் தீவிரவாதிகள் காட்டிய எதிர்ப்புகளையும் ஈழத்தமிழரும் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸýமாக அளித்த வரவேற்பையும் இந்திய விடுதலைப் போருக்காகக் காந்தியடிகளிடம் தமிழர் அளித்த நன்கொடைகளையும் மகாதேவ தேசாய் விரிவாக எழுதியுள்ளார்.

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் பணிக்காகச் சென்ற தமிழகத் தொழிலாளர்களையும் கொழும்புத் துறைமுகத்தில் பணிக்காகச் சென்ற கேரளத்து தொழிலாளர்களையும் திருப்பி அனுப்புமாறு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களைச் சிங்களவர் நடத்தினர். 1920-களில் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ.குணசிங்கா தலைமையில் முளைவிட்ட இந்தப் போராட்டங்கள் 1930களில் கூர்மை அடைந்தன.

மலையாளிகளைத் திருப்பி அனுப்பக் கோரிய சிங்களவரின் போராட்டத்தின் கடுமையைத் தணிக்கும் நோக்குடன், கேரளப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.கோபாலன், 1939-ல் கொழும்புக்குச் சென்றார். வெள்ளவத்தையில் அவர் பங்கேற்ற மேதினக் கூட்டத்தை சிங்களத் தீவிரவாதிகள் குலைக்க முயன்றனர். அதன் பின்னர் 1940-களின் தொடக்கத்தில் மலையாளிகள் கொழும்பிலிருந்து முற்றாக வெளியேறினர்.
மலையகத் தமிழ்த் தொழிலாளருக்குச் சிங்களவர் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமையைத் தணிக்க, மகாத்மா காந்தியின் சார்பில் ஜவாஹர்லால் நேரு இலங்கைக்குச் சென்றார். இலங்கை இந்தியக் காங்கிரûஸ நிறுவினார். 1939 ஜூலை 26 அன்று கொழும்பு, காலிமுகத் திடலில் அவர் பங்கேற்று உரையாற்றிய கூட்டத்தைச் சிங்களத் தீவிரவாதியான ஏ.இ. குணசிங்காவின் அடியாள்கள் குழப்பினர்.

1948-ல் இலங்கை விடுதலை பெற்றதும் சிங்களப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தின் ஆயத்தப் பணிகளுள் ஒன்றுதான், தமிழகத்திலிருந்து சென்று மலையகத் தோட்டங்களை வளப்படுத்திய தொழிலாளரின் குடி உரிமையைப் பறித்த சட்டமாகும். மலையகத் தமிழ்த் தொழிலாளர் அனைவரையும் திருப்பி அழைக்க வேண்டுமென இந்தியாவிடம் சிங்களவர் கூறினர்; இந்தியா மறுத்தது; அவர்களை நாடற்றவர்களாக்கியது சேனநாயக்கா அரசு.
நேரு காலத்தில் பலமுறை முயன்று தோற்றதை, சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் இலங்கை பெற்றுக்கொண்டது. சிறீமாவோ-சாஸ்திரி மற்றும் சிறீமாவோ- இந்திரா ஒப்பந்தங்கள் சிங்களவரின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகளின் வெற்றி முகங்கள். நான்கு இலட்சம் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் கச்சத் தீவை இலங்கை எல்லைக்குள் அடக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டதல்லவா?
மலையகத் தமிழர்களைத் திரும்பப் பெற இந்தியா ஒப்பியதற்கு நன்றியாக, 1977லிலும் 1983லிலும் இனக்கலவரத்தில், கொழும்பில் வணிகம் செய்த இந்திய முதலாளிகளைக் கொலை செய்து, அவர்களின் சொத்துகளைச் சிங்களக் காடையர் சூறையாடினர். நாடற்றவர்களான மலையகத் தமிழர் பலரையும் கொன்றுகுவித்தனர்.

கச்சத் தீவைக் கொடுத்ததற்கு நன்றியாகத் தமிழக மீனவரின் உயிர்களைப் பலி கேட்டுக்கொன்று குவித்து, தமிழக மீனவரின் படகுகளைச் சேதாரமாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, பிடிபட்ட மீன்களையும் இன்றுவரை இலங்கைக் கடற்படை பறித்தெடுத்துச் சென்றுவருகிறது.

1971 ஏப்ரலில் ஜேவிபியின் ஆயுதப் புரட்சியை அடக்க, இந்தியா படைகளை அனுப்பியது. நன்றிக் கடனாக, 1971 டிசம்பர் வங்கப்போரில், இந்திய வான் பகுதிமேல் பறக்க முடியாத பாகிஸ்தான் விமானங்கள், இந்தியாவுக்கு எதிராகக் கொழும்பு விமான நிலையத்தில் தங்கிப்போக, ஈழத்தமிழரின் எதிர்ப்பையும் மீறிச் சிங்கள அரசு பாகிஸ்தானுக்கு உதவியது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வெளியாகும் இதழ்களையும் நூல்களையும் குப்பைகள் என இழித்து, அவற்றின் இறக்குமதியை 1971 முதல் கட்டுப்படுத்தியது.

1983- முதலாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் பலமுறை தாக்குதலுக்குள்ளாயது; தூதரக வாகனங்கள் கொளுத்தப்பட்டன.

1987-ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஒப்பமிட, ராஜீவ் கொழும்பு செல்கிறார். அப்போதைய பிரதமரான பிரேமதாசா, ராஜீவை அவமதிக்கத் திட்டமிட்டு கொழும்பை விட்டு நீங்கித் தாய்லாந்தில் பயணித்தார். ராஜீவை அவமதித்த பிரேமதாசாவின் அரசியல் குரு, 1939 ஜூலை 26-ல் நேரு பேசிய கூட்டத்தைக் குலைக்க வந்த ஏ.இ.குணசிங்கா.
கொழும்பில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ராஜீவுக்குப் பிரியாவிடை… கடற்படைச் சிப்பாய் ஒருவன், ராஜீவின் முதுகில் துப்பாக்கிப் பிடியால் கடுமையாகத் தாக்குகிறான். குற்றவாளியான அவனை நீதிமன்றம் சிறையில் அடைக்க, அரசோ அவனை விடுதலை செய்கிறது.

1983 முதலாக, பல இலட்சம் ஈழத்தமிழர் இந்தியாவில் தஞ்சம் புகுந்து, இந்திய மக்களின் வரிப்பணத்தில் வாழ்வை ஓட்டவேண்டிய, இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைக்கும் சிங்களப் படையின் வெறியாட்டமே காரணமாகும்.
ஆசிய நாடுகளின் வாக்குகளைப் பிரித்து, இந்திய வேட்பாளர் ஐ.நா. தலைமைச் செயலராக வெற்றி பெற முடியாதவாறு தானும் ஒரு வேட்பாளரைக் களத்தில் இறக்கி, அவருக்காக உலகெங்கும் சென்று ஆதரவு திரட்டுகிறது இலங்கை அரசு.

விவேகானந்தர் காலம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, சிங்கள இனத்தவரின் அரசும், அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் தனி மனிதர்களும் இந்தியாவின் முகத்தில் திட்டமிட்டே பலமுறை கரி பூசி வந்துள்ளனர். அவற்றைப் பொருளெனக் கொள்ளாது, நிகழ்வுகளை மறந்து, அவர்களின் அடாச் செயல்களை மன்னித்து, தொடர்ந்தும் சிங்களவருக்கு நன்மையையே செய்து வருகிறது இந்தியா. இந்த மாதத்தில் இலங்கைப் படைக்கு ராடார் கருவிகளை அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளது. மறப்பதும் மன்னிப்பதும், அவர் நாண நன்னயம் செய்தலும் இந்திய மண்ணோடு கலந்த மரபுகள். 999 மனிதத் தலைகளைக் கொய்த அங்குலிமாலாவை மன்னித்துப் பண்பட்ட மனிதனாக்கித் தன் சீடராக்கியவர் புத்தர்.

இந்தியாவே ஆயுதங்களைக் கொடுத்தது; பயிற்சியை வழங்கியது; நிதியும் வழங்கியது. அதைத் தொடர்ந்த 1987-91 காலத்திய நிகழ்வுகளால் இந்தியாவின் கடுஞ் சினத்துக்கு ஈழத்தமிழர் ஆளாகினர். 13 சங்கப் பாடல்களைத் தந்த ஈழத்துப் பூதந்தேவனார் முதலாக, ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள் ஊடாக, இன்றைய அறிஞர், புலவர், படைப்பாளிகள் வரை, கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கூடாக, ஈழத்தமிழரும் இந்தியாவும் எவ்வித பகைமையோ, உரசலோ, எதிர்ப்புணர்வோ இல்லாது கொண்டும் கொடுத்தும் ஒருவரை ஒருவர் ஆட்கொண்டு, வாழ்ந்து வருகின்றனர். இடையில் ஈழத்தமிழர் உணர்ச்சிவயத்தால், பொருந்தாச் செயல் செய்திருப்பின் மன்னிப்பதும் மறப்பதும் மீண்டும் அரவணைப்பதும் இந்தியாவின் கடனல்லவா? நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து உரசியும் கடுமையாக எதிர்த்தும் வரும் சிங்களவரோடு பெருந்தன்மையோடு நடப்பதுபோல், இடையில் ஒரு சில ஆண்டுகள் இணக்கமற்றிருந்ததற்காக வருந்தும் ஈழத்தமிழருடனான கசப்புகளை மன்னித்து மறந்து பெருந்தன்மையோடு நடப்பது இந்தியாவின் கடன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

இந்திய புலனாய்வுத் துறையின் தகவல்.

ஆகஸ்ட் 25, 2006

விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புக்களை பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் கொழும்பிலிருந்து முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வுத் துறையின் றோவின் முன்னாள் பயங்கரவாத முறியடிப்பு தலைமை அதிகாரி ராமன் சிறீலங்காவின் யுத்த முன்னெடுப்புக்களை நெறிப்படுத்துவற்காக பாகிஸ்தான் படை உயர் அதிகாரிகள் 12 பேர் தொடக்கம் 15 பேர் வரையில் கொழும்பில் தங்கியிருந்து வழிநடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் நான்கு தொடக்கம் ஐந்து அதிகாரிகள் பாகிஸ்தான் வான்படையினர் என்றும் இவர்களின் நெறிப்படுத்தலுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் வான்வெளித் தாக்குதலை சிறீலங்கா வான்படையினர் மேற்கொள்ளுவதாக ராமன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் தமிழீழ தேசியத் தலைவரை இலக்குவைத்து வான்வெளித் தாக்குதல்களை நடத்துவற்கும் சிறீலங்காப் படை அதிகாரிகளும் இணைந்து பாகிஸ்தான் அதிகாரிகள் திட்டம் ஒன்றை வகுத்து வருவதாகவும் ராமன் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மலைச் சாரல்களில் அமெரிக்க வான்படையினர் பயன்படுத்திய ”பக்கர் பஸ்ச” எனப்படும் பதுங்கு குழிகளைத் தகர்க்கும் குண்டுகளை சிறீலங்கா வான்படையினர் பயன்படுத்துவற்கு பாகிஸ்தான் படையதிகாரிகள் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் ராமன் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் “களமுனை” திறந்திருக்கும் பாகிஸ்தான்.

இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது “கைங்கர்யத்தில்” சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய “றோ” மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம்சாட்டப்படும் பாகிஸ்தான் உளவு அமைப்பான “ஐ.எஸ்.ஐ.”யின் முன்னாள் அதிகாரி அவர் என்பதுதான்.
இப்போது சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நபரும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கக் கூடும்.
பாகிஸ்தானிய விமானப் படை பிரதித் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஏயர் வைஸ் மார்சல் சேக்சட் அஸ்லம் சௌத்ரிதான் இப்போதை புதிய தூதுவர்.
- மலைப்பிரதேசங்கள் அடங்கிய பாகிஸ்தான் பலுசிஸ்தான் பிரதேசத்தில் நடைபெற்று வரும் விடுதலைப் போரை ஒடுக்குவதில் பாகிஸ்தானிய விமானப் படையை தீவிரமாக பயன்படுத்தியவர்.
- அமெரிக்காவிடமிருந்து எஃப் – 16 ரக விமானக் கொள்வனவில் தீவிரம் காட்டியவர
- சீனாவுடன் இணைந்து ஜே.எஃப் – 17 அதிரடித் தாக்குதல் விமான உற்பத்திக்கான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டியவர். இந்த விமானம் எதிர்வரும் ஆண்டு பாகிஸ்தான் விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது.
- சீனா மற்றும் வடகொரியாவிடமிருந்து எம்-9 மற்றும் எம்-11 ஏவுகணைகளை இரகசியமாக கொள்வனதில் தொடர்புடையவர்.
இத்தனை சக்திவாய்ந்த நபரைத்தான் “இராஜதந்திர” விடயங்களுக்கான தூதுவராக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சக்திகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் மிக நெருக்கமும் ஆயுதக் கொள்வனவும் மேற்கொண்டு வரும் சிறிலங்கா அதற்கு கைமாறாக செய்திருக்கும் விடயமானது தென்னிந்தியாவை என்ன செய்யுமோ என்ற அச்சத்தை இந்திய .ராஜதந்திரிகள் வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.
- பாகிஸ்தான் தூதுவராக இருந்து ஓய்வு பெற்ற பசீட் வாலி மொகமட், கொழும்பு தூதரகத்தில் 1990-களில் மற்றொரு பொறுப்பில் பணிபுரிந்த போது தமிழகத்தில் நடந்த கோவை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்ட்ப்பவர
- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானின் மதராசாக்களில் பயிற்சி அளிக்க உதவியவர
- ஜிகாத் குழு குறித்த உண்மைகளை விடுதலைப் புலிகள் அம்பலப்படுத்திய நிலையில் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பின் ஆலோசனையின் பெயரில் கிழக்கு மாகாண முஸ்லிம் ரெஜிமெண்ட் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தவர்.
இந்தியாவுக்கு எதிராக இயங்குவதில் இவருக்கு அவர் சளைத்தவர் அல்ல- அவருக்கு இவர் சளைத்தவர் என்ற வகையில் பாகிஸ்தான் தனது தூதுவர்களை நியமித்து வருகிறது.
இந்தியாவின் பிரதான தொழில் மையங்களும் பாதுகாப்புத் தளபாட நிறுவனங்களும் அமைந்திருக்கும் தென்னிந்தியாவை இலக்கு வைத்தே சிறிலங்காவில் தனது தளத்தை- களமுனையை பாகிஸ்தான் திறந்திருக்கிறது என்று இந்திய இராஜதந்திரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
மும்பாய், பெங்களுர், சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பிரதான தென்னிந்திய நகரங்களில் மும்பையைத் தவிர மற்றவைகளில் மத மோதல்கள் நடத்த முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்திருக்கின்றன. ஆகையால் இந்திய அரசியலின் நிலைமைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த நகரங்களில் பாகிஸ்தான் புலனாய்வுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எளிதில் ஊடுருவும் சாத்தியமிருப்பதாகவும் அவர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.
ஜம்மு-காஸ்மீர் மற்றும் குஜராத் ஊடுருவல்களை விட தென்னிந்திய ஊடுருவல்களால் இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு எப்போதும் ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்வினையாக “லாகூர்” பாணி நடவடிக்கைகளை கொழும்பில் “இந்தியா முடுக்கி விடலாம்”.
ஆனால் அந்த நடவடிக்கைகளை இனி புலிகளின் தலையில் போட்டு சிறிலங்கா தப்பிக்க முடியாது.
அண்மைய கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தெரிவித்தது போல் உடனே இந்தியாவின் றோவை பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம்சாட்டும்.
இனி வேறு வழியில்லை… இந்தியாவை சிறிலங்கா பகைத்துத்தான் ஆக வேண்டும்.
நன்றி>புதினம்.

அனுராதபுரத்தில் இரகசிமாக எரியும் சடலங்கள்.

ஆகஸ்ட் 25, 2006

யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது:
அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரணமாக கொல்லப்பட்டோரின் சடலங்களை குடும்பத்தாரிடம் அரசாங்கம் ஒப்படைக்காமல் உள்ளது.
இனப்பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது தெரியவில்லை. மூன்று மாதங்களுக்குள் தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்குவேன் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அவர் இன்னமும் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்கிறார் என்றார் அவர்.
நன்றி>புதினம்