ஆகஸ்ட் 20th, 2006- ‍க்கானத் தொகுப்பு

பாகிஸ்தான்தூதுவரின் கொலைமுயற்சியின் பின்னனி?

ஆகஸ்ட் 20, 2006

இந்தக் கேள்விக்கான விடையை அறிவதற்கு முன்னர் இந்த இராஜதந்திரி மீதான சில அடிப்படை விளக்கங்களை அறிந்துகொள்ள வேணடும். யார் இந்த இராஜதந்திரி ? இவர் ஏன் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்? இவரது பின்னணி என்ன? இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவர் மீதான குறி யாரால் வைக்கப்பட்டது ? பாக்கிஸதானின் இராணுவப் புலனாய்வுத்துறையின் ஓய்வுபெற்ற கேர்ணல் தரத்திலாலான இந்த பஷீர் வாலி மொகமட் 4 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்காவுக்கான பாக்கிஸதானின் தூதுவராக கடமையாற்றுகின்றார்.

இவரது ஸ்ரீலங்காவக்கான தூதுவர் நியமனம் கடந்த 2002 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவரது நியமனம் தொடர்பாக இந்தியா அப்போது தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் ஸ்ரீலங்கா அரசக்கு தெரியப்படுத்தியிருந்து. இருந்தும், தமிழர்கள் விடயத்தில் குறிப்பாக விடுதலைப்புலிகள் விடயத்தில் இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தினாலும், ஸ்ரீலங்காப்; பாதுகாப்புப் படைகளுத் தேவையான ஆயத உதவிகளை முழுமையாக வழங்குவதற்கு இந்தியா பின்னடித்ததைக் கருத்தில் கொண்டும், இந்தியாவிற்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் ஸ்ரீலங்கா அரசு இந்தத் தூதுவர் நியமனத்தை ஏற்றுக்கொண்டது.

பஷீர் வாலி மொகமட்டின் நியமனத்திற்கான இந்தியாவின் எதிர்ப்பு

இவரது நியமனம் இந்தியாவின் இறைமை மற்றும் தேசியப் பாதுகாப்பு என்பவற்றிற்கு பாரிய அச்சுறுத்தலை கொடுக்கும் என இந்திய உளவு மற்றும் இராஜதந்திரிகள் இந்திய அரசுக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

மேலும், பஸீர் வாலி, கொழும்பைத் தளமாகக்கொண்டு தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அமைந்துள்ள
அணுமின் நிலையங்கள் மற்றும் ஏவகணை செலுத்தும் தளங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்ளும் முகமாகவே நியமிக்கப்பட்டார்.

இது மட்டுமல்லாமல், 1990 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானின் கொழும்புத் தூதுவராலத்தில் உருவாக்கப்பட்ட புலனாய்வு செயற்பாட்டின் முக்கிய பொறுப்பு அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப்பகுதியில், தமிழ்நாட்டைத் தளமாகக்கொண்ட அல் உம்மா என்ற பயங்கரவாத அமைப்பிற்கான சகல உதவிகளும் இவரால் கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் இந்த அமைப்பு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே காலப்பகுதியில் மட்டக்களப்பு மாகாணத்தின் தமிழ் முஸ்லீம்கள் சிலரினை தெரிவு செய்து, கராச்சியில் அமைந்திருக்கும் ஃபினோரி மதராஸ் என்ற தீவிரவாத சிந்தனைகளை கற்பிக்கும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்.

இந்தப் பாடசாலைகளை நிர்வாகிப்பவரும் நிதியளிப்பவர் ரி.ஜே. முவ்ற்றி நிசாமுடின். இவர் வேறுயாருமல்ல பாக்கிஸ்தான ஜிகாத், தலிபன், அல்கையிடா அமைப்புக்களின் போஷகர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய உண்மை. இவர் 2004 ஆம் ஆண்டு மெ மாதம் 30 ஆம் திகதி இனம் தெரியாத குழவொன்றினால் கராச்சியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

பாக்கிஸ்தானின் தூதுவர் பஷீர் வாலி, இந்தியாவின் பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு பெருமளவில் ஆயத மற்றும் பயிற்சி நெறிகளை பாக்கிஸ்தானிய காஷ்மீர் பகுதிகளில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நடாத்தியும் வந்துள்ளார்.

இவ்வாறாக இந்தியாவின் நலன்களுக்கும் பாதுகாப்பக்கும் அச்சுறுத்தலாக விளங்கியவரும், இன்றும் விளங்கி வருபவருமான ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரி கேர்ணல் ஃபஷீர் வாலி மீதான தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டிருக்கும் என்ற தீர்ப்பினை வாசகர்ளாகிய உங்களிடத்திலே விட்டுவிடுகிறேன்.

தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்துப் படுகொலைகளும் விடுதலைப் புலிகளினாலேயே நடாத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா அரசு கூறுகின்றது. ஒவ்வொரு கொலைகளின் பின்னரும் விசாரணைக் குழக்களையும் அமைத்து வந்ததை நாம் எல்லோரும் அறிவோம். எனினும் எந்தவொரு விசாரணக்குழவின் அறிக்கையும் முற்றுமுழுதாக நிறைவு பெற்றதாக சரித்திரம் இல்லை! இனியும் நிறைவடையப்போவதில்லை என்பதே உண்மை!

இறுதியாக, தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு பாக்கிஸ்தான தற்போது தனது ஆளணி முதல் ஆயத தளபாடம் வரை சகல வளங்களையும் ஸ்ரீலங்கா அரசக்கு வழங்கிவருகின்றது உண்மை. இதற்கு ஆதாரம் அண்மையில் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்! இன்று ஸ்ரீலங்கா விமானப் படைகளின் யுத்த விமானங்களின் பிரதான ஓட்டியாகவிருப்பவர்கள் பாக்கிஸ்தானிய விமான ஓட்டிகள் என்பது இங்கு கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய ஓர் உண்மை
நன்றி>நிதர்சனம்.

பாக். தூதரின் வாகன அணி தாக்குதல்:
பின்னணியில் “றோ’ என்று குற்றச்சாட்டு!

கொழும்பில் பாகிஸ்தான் நாட்டின் தூதர் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இந்தியப் புலனாய்வுத் துறைக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி பாகிஸ்தானின் சுதந்திரதினத்தன்று அந்நாட்டுத் தூதரும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்த வாகனத் தொடரணி மீது கொழும்பில் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்ததே. தூதரின் வாகனத் தொடரணியில் சென்ற கொமாண்டோ படையினரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில் நான்கு கொமாண்டோ படையினர் உயிரிழந்தனர்.
தூதர் பஷீர் வலி முஹமட் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் இந்தியப் புலனாய்வுத்துறையான “றோ’ வின் வேலை என்று இஸ்லாமாபாத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்று பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகரித்துவரும் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக் கண்டு சீற்றமடைந்துள்ள இந்தியப் புலனாய்வுத்துறை இந்தத் தாக்குதலைத் திட்டமிட உதவியிருக்கின்றது.
தூதர் வலி முஹமட் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர். பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ கேணல். இலங்கையில் தனது கடமைக் காலத்தைப் பூர்த்திசெய்யும் தருணத்தில் அவர் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டையிடும் இலங்கைப் படைகளுக்கு இரண்டு கப்பல்களில் ஆயுதங்கள் தரையிறக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவுகளைப் பலப்படுத்துவதில் தூதர் வலி முஹமட் முக்கிய குறிப்பிடக்கூடிய பங்கை வகித்தவர்.
“கொழும்பில் அவருடைய பணி இந்தியாவுக்கு உகந்ததாக இருக்கவில்லை’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தென்னாசியாவில் சுதந்திர வர்த்தக உடன் படிக்கையைக் கொண்டுள்ள இரண்டு நாடுகள் பாகிஸ்தானும் இலங்கையுமே ஆகும். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தை இந்தியப் புலனாய்வு அமைப்பு இந்தத் தாக்குதல் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறது.
இவ்வாறு பாகிஸ்தானின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி தெரிவிக்கிறது.

நன்றி> உதயன்

கொல்பிட்டியில் உள்ள கருணா குழுவின் அலுவலகம் இதுக்கு பாவிக்கப்பட்டதாக சிங்கள பத்திரிகை வேறு எழுதியது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான நிழல் யுத்தத்தின் களமாக தென்னிலங்கை மாறுகிறது போலுள்ளது.
ஜிகாத் குழு கருணா குழு போன்றவர்களிற்கு முன்னிறுத்தி நிழல் யுத்தம்… ஒளிமயமான எதிர்காலம் கொழும்பில் தெரிகிறது.

பொங்கி எழும் தமிழகம்.

ஆகஸ்ட் 20, 2006









சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கறுப்புக் கொடி பேரணி: நாளையும் பொதுக்கூட்டங்கள்- ஆர்ப்பாட்டங்கள்

சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலில் முல்லைத்தீவில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று கறுப்புக் கொடி பேரணி நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா சாலை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இப்பேரணி நடத்தப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரசுவதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், கவிஞர் அறிவுமதி, இயக்குநர்கள் வி.சி. குகநாதன், சீமான், புகழேந்தி உள்ளிட்டோர் கறுப்புக் கொடி, கறுப்பு உடை மற்றும் கறுப்புப் பட்டி அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியில் முல்லைத்தீவு அவலத்தைச் சித்தரிக்கும் வகையிலான சவப்பெட்டி ஒன்றும் முல்லைக் கோரக் காட்சிகளை விளக்கும் பதாகைகளும் எடுத்துச் செல்லப்பட்டன.
பேரணியின் நிறைவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக பழ. நெடுமாறன் மற்றும் பெ.மணியரசன் ஆகியோர் கண்டன உரைகளை நிகழ்த்தினர்.
இப்பேரணியில் பெண்கள் கைக்குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
இதர நிகழ்வுகள்
சென்னையில் இன்று காலை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய நீதிக் கட்சி சார்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.
முல்லைப்படுகொலைச் சம்பவத்தை கண்டித்தும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா உதவக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.

சேலம் அருகே நங்கவல்லி என்ற கிராமத்தில் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்த 45 பொதுமக்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் அருகே காளியப்ப கவுண்டன் புதூரில் இயங்கி வரும் தாய்த் தமிழ்ப் பள்ளி மாணவிகள் 70 பேர் உட்பட 200 பொதுமக்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
உடுமலைப் பேட்டையில் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்றார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் தியாகு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
மதுரையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரிக்கப்பட்டது.
திருப்பூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் கண்டப் பேரணி நேற்று நடத்தப்பட்டுள்ளது.
சேலம் மேட்டூரில் நேற்று சனிக்கிழமை அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதிப்பேரணியும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இப்பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள், இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் பேரணியில் பங்கேற்றனர்.
முல்லைத்தீவு படுகொலைக் காட்சிகளையும் ஈழத் தமிழர் படுகொலைக் காட்சிகளையும் விவரிக்கும் பதாகைகளையும் பேரணியில் பங்கேற்றோர் ஏந்தியிருந்தனர்.
நிகழ உள்ளவை
சென்னையில் நாளை திங்கட்கிழமை “இலங்கை இனவெறி போரை எதிர்ப்போம்- தமிழின விடுதலையை ஆதரிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து முகம், கவிதாசரன், கலை, யாதும் ஊரே, மெய்யறிவு, கல்வெட்டு பேசுகிறது ஆகிய சிற்றிதழ்கள் சார்பில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நாளை மாலை இந்நிகழ்வு நடைபெறுகிறது.
முல்லைப் படுகொலையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் நாளை மாலை தியாகராய நகர் பேரூந்து நிலையம் அருகே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாலர் தொல். திருமாவளவன் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
சேலத்தில் நாளை அமைதிப் பேரணி, உண்ணாநிலைப் போராட்டம் ஆகியவை நடைபெற உள்ளது.
சேலம் சாரதா கல்லூரி, சட்டக் கல்லூரி, சவுடேஸ்வரா கல்லூரிகளின் மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். உண்ணாநிலைப் போராட்டத்தில் தியாகு, கொளத்தூர் மணி, பேராசிரியர் சந்திரநாராயணன், தமிழ்த் தேசிய கட்சி இளமுருகு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி பாவேந்தன் உள்ளிட்ட பலர் காலை முதல் மாலை வரை கண்டன மற்றும் வீரவணக்க உரை நிகழ்த்துகின்றனர்.
எதிர்வரும் 22 ஆம் நாள் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆனூர் கோ.ஜெகதீசன், விடுதலை க.இராசேந்திரன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்துகின்றனர். பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் அகவணக்க இசைநிகழ்வு நடைபெற உள்ளது.
எதிர்வரும் 23 ஆம் நாள் சென்னை தொலைக்காட்சி நிலையம் அருகே உள்ள சுவாமி சிவானந்தா சாலை அண்ணா அரங்கத்தில் முல்லைப் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுக்கு பொடா சாகுல் அமீது தலைமை வகிக்கிறார். மக்கள் கவிஞர் இன்குலாப், கவிஞர் பச்சியப்பன் ஆகியோர் இரங்கற்பா வாசிக்க பழ. நெடுமாறன், பேராசிரியர் அப்துல் காதர், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், மறுமலர்ச்சி திமுக நிர்வாகி மல்லை சத்யா, பாவலர் அறிவுமதி, இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, வழக்கறிஞர் அஜிதா, மருத்துவர் வேலாயுதம் ஆகியோர் கண்டன உரைகள் நிகழ்த்துகின்றனர்.
எதிர்வரும் 24 ஆம் நாள் சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் தமிழ் இளைஞர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
நன்றி>புதினம்.

இலங்கைப்பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வு.

ஆகஸ்ட் 20, 2006

தமிழர் பிரச்சினைக்கு சர்க்காரியா கமிஷன் அடிப்படையில் தீர்வு: கமிஷன் அறிக்கையின் நகலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இலங்கை அரசும் இந்தியாவை இது தொடர்பாக வற்புறுத்தி வந்தது.

இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா இப்போது புதிய யோசனையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லறவு, அதிகாரம் பற்றி ஆராய சர்க்காரியா தலைமையில் முன்பு கமி ஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழர் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்து இருக்கிறது.

அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வசதியாகவும், நிர்வாக முறை தொடர்பாக வும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் நகலை இலங் கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவில் கடைபிடிக் கப்படும் நிர்வாக முறையை பின்பற்றலாம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. தேசிய அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க உதவி செய்ய அரசியல் சட்ட நிபுணர்களை அனுப்பி வைக்க தயாராக இருந்ததாகவும் இந்தியா தெரி வித்து உள்ளது.

இணைப்பு : newstamilnet.com
Sunday, 20 Aug 2006 USA

முல்லைத்தீவில் கொல்லப்பட்டவர்களின் புகைபடங்கள்.

ஆகஸ்ட் 20, 2006

முல்லைத்தீவு செஞ்சோலைமீது நாடாத்தப்பட்ட, அரசபயங்கரவாத விமானகுண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவர்களதும்,ஊழியர்களதும் புகைப்படங்கள்.





School: Puthukkudiyiruppu Mahavidhyalayam

Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT

School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu

School: Udayarkaddu Mahavidhyalayam

Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam

School: Mullaitivu Mahavidhyalayam

Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil

School: Kumulamunai Mahavidhyalayam

Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai

School: Vidhyananda College, Mulliyavalai

Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai

School: Chemmalai Mahavidhyalayam

Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai

School: Oddusuddan Mahavidhyalayam

Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.

School: Muruhananda Mahavidhyalayam

Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai

School: Tharmapuram Mahavidhyalayam

Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram

School: Piramanthanaru Mahavidhyalayam

Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai

Names of staff killed

Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)
S Jeyarubi (Age 20)
நனறி>லங்கசிறி,தமிழ்நெற்.

டாக்டர் ராமதாஸின் வேண்டுகோள்.

ஆகஸ்ட் 20, 2006

பசி-பட்டினியால் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு விமானம் மூலம் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
“இலங்கையில் சிங்கள இராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலினால் யாழ்ப்பாணத் தீபகற்பம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள். அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அவர்களில் பெரும்பாலானோர் பசி பட்டினியால் மடிந்து கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஓடோடி வரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் பணக்கார நாடுகளும் யாழ்பாணத் தமிழர்களை பட்டினி சாவில் இருந்து மீட்க முன் வர வேண்டும்.
“இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக கொழும்பு நகரில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இது பற்றி இந்திய அரசிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
“இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவ முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தியா அனுப்புகிற உதவி பொருட்களை உண்மையிலேயே பசி-பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு சென்றடையுமா? அல்லது அங்கே சிக்கித் தவித்து கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான சிங்கள இராணுவத்துக்கு பயன்படுமா? என்பது தெரியவில்லை. எனவே இந்தியா அனுப்பும் உதவிப்பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். அல்லது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில் விமானம் மூலம் உணவுப்பொருட்கள் யாழ்பாணத்தில் விநியோகிப்பட்டதை போல் இப்போதும் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மனிதாபிமான உதவி தமிழர்களை சென்றடையும்” என்றார் மருத்துவர் இராமதாஸ்.
நன்றி>புதினம்.