ஆகஸ்ட் 5th, 2006- ‍க்கானத் தொகுப்பு

புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.

ஆகஸ்ட் 5, 2006

தேர்ந்தெடுத்த இலக்குகளை தாக்கியழித்த புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.
திருமலையில் கடந்த 26 நாள் தொடக்கம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி சிறீலங்காப் படையினர் விமானத்தாக்குதல், எறிகணைத் தாக்குதலை கண்மூடித்தனமாக நடத்தினர்.

இதனையடுத்து மாவிலாறு அணைக்கட்டை சிறீலங்கா படையினர் கைப்பற்றும் நோக்குடன் முன்னெடுத்த படைநகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அழி்க்க அதாவது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள பின்தளமாக இருந்த படைமுகாம்கள் தாக்கியழிக்கும் படைநகர்வை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில் மூதூர் பிரதேசத்திலும், சேருநுவரப் பிரதேசத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை தாக்கியழித்த விடுதலைப் புலிகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட படைநகர்வை நிறைவு செய்துகொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலான வரையறுக்கப்பட்ட பழைய நிலைகளுக்கு நேற்றிரவு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது ஏற்பட்டு மனிதாபிமான அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் தாக்கியழிக்கப் பட்டதையடுத்தும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் முற்றுமுழுதாக நிறுத்தி பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இப்படை நடவடிக்கையில் சிறீலங்கா அரச படையினர் தரப்பில் 100 மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் 30 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் பழை நிலைகளுக்குச் சென்றபின்னர் அவ்விடத்திற்கு சென்ற சிறீலங்காப் படையினர் உயிரிழந்திருந்த படையினரின் சடலங்களை அடக்கும் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற்துறைப் பேராளி புரட்சி எம்மிடம் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்