ஆகஸ்ட் 3rd, 2006- ‍க்கானத் தொகுப்பு

30 ஆயிரம் மக்களும் வெளியேறப்போவதாக எச்சரித்துள்ளனர்.

ஆகஸ்ட் 3, 2006

மூதூரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலினாலேயே பொது மக்கள் பலர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளதாக முஸ்லீம் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூதூர் உலமாக்கள் சபைப் பிரதிநிதிகளும், பொது மக்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினாலேயே முஸ்லீம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதையடுத்து இன்று இரவு அவசரமாக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய குழு, இது குறித்து ஆராய்ந்துள்ளது.இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவில்,ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் இன்று இரவுக்குள் தமது எறிகணைத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் மூதூரில் உள்ள 30 ஆயிரம் பொது மக்களும் நாளை காலை அங்கிருந்து வெளியேறி கந்தாளாயில் தஞ்சமடையப் போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசீல் ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எனினும் இது குறித்த முக்கியமான முடிவு நாளை காலை வெளியாகாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு : newstamilnet.com
Thursday, 03 Aug 2006 USA

திருமலையில் அனைவருக்கும் உதவிகள் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 3, 2006

தென்தமிழீழத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் உட்பட அனைவருக்குமான உதவிகளை வழங்குவது விடுதலைப் புலிகளின் கடமை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களும் தமிழீழ மக்களே என்றும் அவர்களைப் பாதுகாக்கின்ற கடமையிலிருந்த ஒருபோதும் விடுதலைப் புலிகள் தவறமாட்டார்கள் என்றும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மனிதநேயத்தின் அடிப்படையில் இடம்பெயர்ந்தோருக்கான உதவிகளை வழங்குவதற்காக திருமலையில் எழிலன் தலைமையில் உள்நாட்டு வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட 40 படையினரின் சடங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறீலங்கா அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த இளந்திரையன் மூதூர் பகுதியையும் 17 இராணுவ முகாம்களையும் விடுதலைப் புலிகள் தாக்கியழித்ததால் மூதூர் பிரதேசத்திற்கு எறிகணை தாக்குதல்களுக்குள் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி>புதினம்.

படையினரின் எறிகணைத் தாக்குதலில் 10 முஸ்லிம்கள் பலி!

ஆகஸ்ட் 3, 2006

திருகோணமலை மூதூர் அரபுக்கல்லூரி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்களை இலக்கு வைத்து சிறீலங்காப் படையினர் ஆட்டிலறி தாக்குதலை நடத்தியதில் 10 தமிழ் பேசும் முஸ்லிங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 100 மேற்பட்ட பொதுமக்கள் காயடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மதியம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருலையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக பெருமளவு தமிழ் முஸ்லிம் மக்கள் அரபுக் கல்லூரியிலும் பள்ளிவாசலிலும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இவ்விரு இடத்திலும் 10 ஆயிரம் தமிழ் முஸ்லிம் மக்கள் தஞ்சமடைதிருந்தாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி>புதினம்

இரண்டாவது இணைப்பு.

சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சுக்கு மேலும் 12 முஸ்லிம்கள் பலி
சிறிலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மூதூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி மேலும் 12 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தோப்பூர் அல் நுரையா முஸ்லிம் பாடசாலையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆட்டிலெறித் தாக்குதலிலேயே அப்பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த 12 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்காப் படைகளின் இன்றைய தாக்குதல்களில் மொத்தமாக 22 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, மூதூர் காவல் நிலையத்துக்குள் அகப்பட்டிருந்த அகப்பட்டிருந்த காவல்துறையினர் அங்கிருந்து தப்பி திருமலை சென்றுள்ளதாகவும், அவ்வாறு சென்றவர்களில் 16 பேர் காயமடைந்தவர்கள் இருந்ததாகவும் அவர்களில் 6 பேர் கொழும்புக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவியவருகிறது.

நன்றி>புதினம்

தற்காப்பு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல்கள்.

ஆகஸ்ட் 3, 2006

திருமலையில் சிறீலங்காப் படையினர் மீது பரவலாக நடத்தப்படும் வலிந்த தாக்குதல்கள் தற்காப்பு நிமிர்த்தமும் மனிதாபிமான அடிப்படையிலும் நடத்தப்படுவதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்புக்களை நிறுத்துவற்கு தற்காப்பு நிமிர்த்தம் தாக்குதலைப் போராளிகள் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள கண்மூடித்தனமான வான்வெளி , ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல்களைப் போராளிகள் தொடுத்துள்ளதாவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மாவிலாறு நோக்கிய படையினரின் தாக்குலுக்கு திருமலைதுறைமுக கடற்படைத் தலைமைய கத்திலிருந்து பின்தள ஆட்லறி எறிகணை சூட்டுவலு வழங்கப்பட்டுள்ளது என்றும் இதனாலேயே கடற்படை தலைமையகம் மீது தாக்குதல்கள் தொடுத்ததாகவும் இளந்திரையன் சுட்டிக்காட்டினார்.

சிறீலங்கா படையினரின் படையெடுப்புக்கான வழங்கல் பாதையையும் செயற்பாடுகளையும் சீர்குலைத்து முடக்கும் நோக்குடன் திருமலைத் துறைமுகம் மற்றும் புல்மோட்டைத் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படை கலன்கள் மீது கடற்புலிகள் தாக்குதலைத் தொடுத்ததாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

ஏ15 நெடுஞ்சாலையில் உள்ள படைமுகாம் மீது போராளிகள் நடத்திவரும் தாக்குதல்கள் தற்காப்பு மற்றம் மனிதாபிமான நோக்கம் கொண்டது எனவும் இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.

இணைப்பு : newstamilnet.com
Wednesday, 02 Aug 2006 USA