திருகோணமலையில் நடைபெற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதலை ஒளிவடிவில்பார்க்க இங்கே செல்லவும்.>
http://www.pathivu.com/?ucat=videonews
விவரமான தகவலுக்கு>
http://www.eelabarathi.com/1.html
திருகோணமலையில் நடைபெற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதலை ஒளிவடிவில்பார்க்க இங்கே செல்லவும்.>
http://www.pathivu.com/?ucat=videonews
விவரமான தகவலுக்கு>
http://www.eelabarathi.com/1.html
சிறிலங்காவின் கடற்படைக் கப்பலை காப்பாற்றுவதற்கு இந்தியா உதவாக் கூடாது வை.கோ
சர்வதேசக் கடற்பரப்பில் 800 இராணுவத்தினருடன் தத்தளித்துக் கொண்டிருக்கும் கப்பலை காப்பாற்ற இந்தியாவின் உதவியை சிறீலங்கா அரசு கோரியுள்ள நிலையில்.
இக் கப்பலைக் காப்பாற்ற இந்தியா உதவாக் கூடாது என மறுமலர்ச்சி திராவிடகழக தலைவர் வை.கோ இந்திய பிரதமர் மன்மேகன் சிங்கை கேட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் மீது ஆக்கிரமிப்பு போரை தொடுத்து அப்பாவி மக்களை கொன்று வரும் சிறீலங்கா படைகளிற்கு உதவாக் கூடாது என வை.கோபலசாமி கோரிக்கை விடுத்துள்ளார்
நன்றி>பதிவு.
சிங்கள இராணுவத்துக்கு உதவினால் தமிழ்நாட்டில் கடும் விளைவுகள் ஏற்படும்: பழ.நெடுமாறன் எச்சரிக்கை
ஈழத் தமிழர்களை மனிதாபிமானமில்லாமல் கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்துக்கு உதவுகிற இழிசெயலை இந்தியா செய்தால் தமிழ்நாட்டில் கடும் விளைவுகள் ஏற்படும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் வானொலிக்கு இன்று புதன்கிழமை பழ.நெடுமாறன் அளித்த நேர்காணல்:
திருகோணமலையில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த தமிழர்களைக் கொன்று குவித்த ஒரு இராணுவம்- அதுவும் அண்மையில் சில மாதங்களாக தொடர்ந்து இனவெறிப் படுகொலைகளை திருகோணமலை பகுதியில் செய்த சிங்கள இராணுவம், இன்றைக்கு விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடுவதற்கு, உயிர் பிழைப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடுகிறார்கள் என்ற செய்தி எங்களைப் போன்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
திருகோணமலை பகுதியிலும் பிற பகுதிகளிலும் சிங்கள இராணுவத்தினர் நடத்திய இன வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தன. ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். போராட்டங்களை நடத்தினோம். இவ்வளவெல்லாம் செய்து கூட இந்திய அரசு அந்த நேரத்தில் அந்த பிரச்சனையில் கொஞ்சமும் தலையிடாமல் வேடிக்கை பார்த்தது.
இப்போது சிங்கள இராணுவம் ஒரு ஆபத்தில் சிக்கிக் கொண்டது என்பதை அறிந்த உடன் அதற்கு உதவ வேண்டும் என்று சிங்கள அரசு கேட்கிறது. அப்படி கேட்பதற்கு அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இதே சிங்கள அரசு, சில நாட்களுக்கு முன்னால் இதே திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருந்த எண்ணெய்க் குதங்களிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனத்தை வெளியேற்றி தன் வசப்படுத்திக் கொண்டது என்பது மறந்துவிட முடியாது.
இந்தியாவுக்கு எதிராக இந்த செயல் புரிந்த சிங்கள அரசு அதே இந்தியாவிடம் உதவி கேட்கும்போது இந்திய அரசு உதவி செய்யக்கூடாது. அது உள்நாட்டுப் பிரச்சனை- அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று இந்திய அரசு ஒதுங்கியிருக்க வேண்டுமே தவிர அதிலே தலையிட்டு சிங்கள இராணுவத்துக்கு உதவி செய்வது என்பது இந்திய அரசு ஒரு சார்பாக நடந்து கொள்கிறது என்ற எண்ணத்தை இந்தியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் உள்ள தமிழர்களிடம் ஏற்படுத்தி விடும். அது நல்லது அல்ல. எனவே அந்த மாதிரி ஒரு செயலை இந்திய அரசு செய்யாது என்று நாங்கள் நம்புகிறோம். அதை மீறி இந்திய அரசு செய்யுமானால் அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இது தொடர்பாக இந்திய அரசுக்கான கோரிக்கை அறிக்கையை அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள 80-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் அதுபோல நமது நண்பர் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம், வைகோ அவர்களின் ம.தி.மு.க., மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற ஈழத் தமிழர் பிரச்சனையில் உண்மையான நாட்டம் கொண்டிருக்கிற அத்துணை இயக்கங்கள் மூலமாக இந்திய அரசின் மூலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கள இராணுவத்துக்கு உதவக் கூடாது என்பதற்காக ஏற்கனவே பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. மனிதாபிமான உதவி என்பது சிங்கள இராணுவத்தைப் பொறுத்தவரையில் அர்த்தமற்ற ஒரு சொல்லாகும். ஏனென்றால் சிங்கள இராணுவம் மனித நேயத்துக்கு எதிராக திட்டமிட்ட ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிற ஒரு இராணுவம். அதற்கு உதவி செய்வது என்பது மனிதாபிமான உதவியாகாது. அதற்கு மாறாக அவர்களின் இனப்படுகொலைக்கு துணை போகிற உதவியாகும். ஆகவே, அத்தகைய இழிசெயலை இந்தியா ஒருபோதும் இந்தியா செய்யாது என்று நம்புகிறோம்.
நன்றி>புதினம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.
தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.
மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.
இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் திருமலை ஈச்சலம்பற்று மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் தாக்குதலை நடத்தியதை அடுத்து பதில் தாக்குதலை புலிகள் தொடுத்த வண்ணம் முன்னேறத் தொடங்கினர்.
தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் சம்பூரில் உள்ள கட்டைபறிச்சன் இராணுவ முகாம் புலிகளிடம் வீழ்ந்தது. இதை அடுத்து தொடர்ந்து முன்னேறிய புலிகள் கடற்படைத்தளமான மூதூர் இறங்கு துறையைக் கைப்பற்றினர்.
இதை அடுத்து சிங்கள இராணுவமும் சிறிலங்கா கடற்படையினரும் ஆயுதங்களை போட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். புலிகள் தாக்குதலைத் தொடுத்தவாறு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
2 ம் இணைப்பு
தற்போது கல்லடி இராணுவ முகாமிற்கு அருகில் சண்டைகள் நடைபெற்று வருவதாக பிந்தி கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 4 நாட்களாக இந்த முகாமில் இருந்தே மாவிலாறு பகுதியைக் கைப் பற்றுவதற்கு பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா படையினர் மேற் கொண்டு வந்தனர்.
கட்டைப்பறிச்சான், பலாத்தோப்பு, செவ்வநகர் ஆகிய படை முகாம்கள் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன,
மூதூர்,செல்வநகர்,தோப்பூர்,காந்திநகர் ஆகிய பகுதிகள் விடுதலைப்புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.
இன்றை தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக முதல்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இணைப்பு 3
திருமலையில் இன்று அதிகாலை தொடங்கிய சிறீலங்கா படைகள் மீதான தற்காப்பு தாக்குதலில் விடுதலைப் புலிகள் 17 இராணுவ மினி முகாம்களைக் கைப்பற்றியுள்ளனர்.பெருமளவு இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.சமர் தொடர்கிறது மேலதிக விபரம் விரைவில்
நன்றி>பதிவு