ஆகஸ்ட் 1st, 2006- ‍க்கானத் தொகுப்பு

ஆட்லறித் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள சிறிலங்கா.

ஆகஸ்ட் 1, 2006

வடக்கு-கிழக்குப் போரரங்கிற்கான பிரதான போக்குவரத்து மற்றும் விநியோகத் தளமாகவும் திருமலைப் பிரதேசத்திற்கான பாதுகாப்பிற்கான இதய நாடியாகவும் விளங்கிய திருமலைக் கடற்படைத் தளத்தின் மீதான ஆட்டிலறித் தாக்குதல் சிறிலங்காப் படைத்தரப்பை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வடக்கு – கிழக்கில் அமைந்துள்ள கடற்படைத் தளங்களிலேயே மிகப் பெரியதும், திருமலை துறைமுகத்தை அண்டியிருந்ததுமான இத் தளமானது இவ் ஆட்டிலறித் தாக்குதலின் காரணமான இயங்காததன்மையை அடைந்துள்ளதே இதற்கான காரணமாகும்.

இத் தளத்திலிருந்த கடற்படையினர் மற்றும் கடற்கலங்கள் என்பன தற்போது சீனன்குடாத் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சீனன்குடா ஒருவகையில் உயர்பாதுகாப்பு வலையத்தை ஒத்த பிரதேசமாகவே இதுவரை இருந்து வந்தது.

சீனன்குடா விமானத்தளம் விமானப் படையினரின் பாவனையில் தொடர்ந்து இருந்து வருகின்ற போதும், சீனன்குடாத் துறைமுகமானது இதுவரை பிறீமா மா ஆலையின் தேவைகளிற்கே பெரிதும் பாவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடற்படையினர் தற்போது அங்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர்களின் தொடர் இருப்புத் தொடர்பான கேள்வியே படை உயர் வட்டத்தை ஆட்டங்காண வைத்துள்ளது.

குறிப்பாக, நெடுந்தூரம் சென்று தாக்கும் 120 மில்லிமீற்றர் ஆட்டிலறிகளின் பாவனைக்கு திருமலைத் துறைமுகம் உட்படும் என்ற எண்ணக்கருவே அற்றவர்களாகவே படைத்தரப்பு இருந்துள்ளனர். குறிப்பாக புலிகள் 80 மில்லிமீற்றர் மோட்டார்கள் போன்ற குறுந்தூர ஆயுதங்களின் மூலமே தாக்குதல்களை திருக்கோணமலையில் மேற்கொள்வார்கள் என்றே அவர்கள் கருதியிருந்தனர்.

இந்நிலையில் தளம் மீதான இத் தாக்குதலின் மூலம் கடற்படையினரை தளத்திலிருந்து வெளியேற்றுமளவிற்கான வெற்றியைப் புலிகள் பெற்றுக் கொண்டதோடு, 120 மில்லிமீற்றர் ஆட்டிலறியின் பிரசன்னம் கிழக்கிலும் இருப்பதை முதற்தடவையாக உறுதி செய்துள்ளனர்.

பெரும்பாலும் பார ஊர்திகளின் துணையுடன் நகர்த்தப்படும் இந்தவகையான ஆட்டிலறிகளை திருமலையிலுள்ள விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் ஏதுமேயில்லை என்றே கருதியிருந்த படை உயர்தரப்பு எவ்வாறு விடுதலைப்புலிகள் இத்தகைய ஆட்டிலறிகளை திருமலைக்கு நகர்த்தினர் என்பதைக் கண்டறிய முடியாமல் தற்போது திணறுகிறது.

நன்றி>புதினம்.

போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு: வைகோ

ஆகஸ்ட் 1, 2006

இலங்கையில் போர் மூண்டால் விடுதலைப் புலிகளுக்கு பக்க பலமாக இருப்போம் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் ம.தி.மு.க கட்சி விழா ஒன்றில் நேற்று திங்கட்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:
இலங்கையில் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்காக விடுதலைப் புலிகள் போராடி வருகிற நிலையில், தற்போது அங்கும் மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.
போர் மூண்டால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தாய்த் தமிழகத்தையே திரட்டுவோம் என்றார் வைகோ.

நன்றி>புதினம்.

டோரா மூழ்கடிப்பு: 800 கடற்படையினர் விரட்டியடிப்பு!

ஆகஸ்ட் 1, 2006

திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 8 கடற்படையினர் பலி! 800 கடற்படையினர் விரட்டியடிப்பு!
திருமலையின் கடற்படைத் தலைமையகம் மீது விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அதேவேளை விடுதலைப் புலிகளின் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் டோரா அதிவேக பீரங்கிப் படகு முழ்கடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தாக்குதில் 8 கடற்படையினர் பலியாகியுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.25 மணியளவில் கடற்படைத் தளத்தை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் 36 எறிகணைகள் ஏவியுள்ளனர். புலிகளின் எறிகணைத் தாக்குதலில் இராணுவ தலையகத்தினுள் பெரும் புகை மண்டலம் எழுந்துவண்ணம் உள்ளது.
இதேவேளை திருமலை கடற்படைத் தளத்தை தரித்திருந்த துப்புக்காவி கடற்கலன்கள் மற்றும் கடற்கலன்கள் அருகிலும் எறிகணைகள் வெடித்து சிதறியுள்ளனர்.

விடுலைப் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தப்பட்ட வேளை 5 கடற்கலன்களில் திருமலை கடற்படைத் தளத்திற்கு விரைந்த விடுதலைப் புலிகளின் கடற்படையினர் அங்கு தரித்திருந்த கடற்படை அதிவேக டோரா படகை மூழ்கடித்ததோடு 800 பேரை ஏற்றிவந்த கடற்படையினரையும் சர்வதேச கடற்பரப்பு வரை விரட்டியுள்ளனர்.

இதேவேளை தென்னிலங்கையில் இருந்து 800 படைவீரர்களை ஏற்றிச் சென்ற துருப்புக்காவி இலக்கு வைத்து எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் மூர்க்கணமான எறிகணைத் தாக்குதலால் 800 பேரை ஏற்றிவந்த சிறீலங்கா கடற்கலம் சர்வசேத கடற்பரப்பு நோக்கி தப்பிச் சென்றுள்ளது.

இன்றைய தாக்குதலில் கடற்படையினர் 8 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலை அடுத்து பிற்பகல் 3 மணியளவில் சிறீலங்கா விமானப் படையினரின் துருப்புக் காவி உலங்குவானூர்தி அவசர அவசரமாக தரையிறங்கிச் சென்றுள்ளது.
நன்றி>புதினம்

தினத்தந்தியில் வந்த செய்தித்திரிபு!!!

ஆகஸ்ட் 1, 2006

தினத்தந்தியில் வந்த செய்தி இங்கு>
http://www.dailythanthi.com/article.asp?NewsID=274820&disdate=8/1/2006&advt=1

இறுதியாககிடைத்தசெய்திகள் இங்கு>
http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=1565

மாவிலாறு அனணக்கட்டு அமைந்திருக்கும் பிரதேசம் இங்கு>

தினத்தந்திகூறுகிறது, மவிலாறு அணைக்கட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவத்தினர்மீது புலிகள்தாக்குதல் நடத்தியதாக, இலங்கை அரசுகூறுகிறது மாவிலாறு அணையை மீட்கும் வரை தாக்குதல் நடைபெறும் எனவும், மீட்பதற்காக மும்முனைதாக்குதல் மூலம் ராணுவம் முன்னேறுகிறது எனறு,

தினத்தந்தி செய்தியை திரித்து உண்மைக்கு புறம்பான தகவலை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குகிறதே, இது சரியா? இதுதான் பத்திரிகை சுதந்திரமா? ஒரு பெரிய பத்திரிகை செய்தியை திரித்து பொய்யான தகவலை தமிழ்நாட்டுமக்களுக்கு, உண்மைசெய்திகளை அறியும் உரிமைக்கு பாதகம் செய்வது முறையா? இது பத்திரிகை விபச்சாரம் அல்லவா?