தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் சிறீலங்கா விமானத் தாக்குதலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை திருமலை மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை கண்டிக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச நடத்தும் நாடக வலையினுள் இந்தியா விழுந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அரங்கில் மகிந்த ராஜபச்ச சிறந்த நடிகர் எனவும் சுட்டிக்காட்டிய ராமதாஸ் நோர்வேயின் அனுசரணையின் கீழ் இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-பதிவு-
ஜூலை, 2006 க்கான தொகுப்பு
விமானத் தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம்.
ஜூலை 28, 2006சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும்.
ஜூலை 28, 2006சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும் – கண்காணிப்புக் குழு.
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
சிறீலங்கா வான்படையினரின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒமர்சன் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு மற்றும் திருமலையிலும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களின் படி அரசாங்கம் யுத்த நிறுத்த மீறலை செய்துள்ளதாக ஒமர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த முழுமையான அறிக்கை ஒன்றை தாயாரித்துக்கொண்டிருப்பதாகவும் விமானத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் இதுவரை முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-பதிவு-
4ம் கட்ட ஈழப்போர் எந்நேரமும் தொடங்கலாம்.
ஜூலை 27, 2006திருகோணமலை ஈச்சலம்பற்றுப் பகுதியில் சிறீலங்கா விமானப் படை விமானங்கள் இன்று மீண்டும் நடத்திய விமானக் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் மீது மேற் கொள்ளப்படும் விமானத்தாக்குதலோ அல்லது தரைத் தாக்குதலோ யுத்தப் பிரகடனமா கருதப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்த நிலையில் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 4ம் கட்ட ஈழப்போர் எந் நேரமும் தொடங்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை முல்லைத்தீவில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
-புதினம்-
தமிழீழத்தில் கடற்படை, விமானத் தளங்கள் அமெரிக்கா திட்டம்.
ஜூலை 26, 2006தமிழீழத்தில் கடற்படை தளம் மற்றும் விமானத் தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டம் – கரேன் பாக்கர்.
தமிழீழ மக்களை பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான உரிமையினை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் முன்னணி சட்டவாளர் கரன் பார்க்கர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கறுப்பு ஜுலையின் நினைவு சுமந்த எழுச்சிப் பேரணியில் சிறப்புரையாற்றிய அமெரிக்க சட்டவாளர் கரன் பார்க்கர், தேசிய இனம் என்ற வகையில், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமிழீழ தனியரசை நிறுவும் உரிமையை, தமிழீழ மக்கள் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழீழ மக்களின் நலன்களில் அக்கறை கொள்ளாத போதும், தமிழீழ நிலப்பிரதேசங்களை அமெரிக்க அரசாங்கம் குறிவைப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் சட்டவாளர் கரன் பார்க்கர், இது குறித்து தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக தென்தமிழீழத்தில் கடற்படை தளம் ஒன்றையும், வடதமிழீழம் பலாலியில், விமானப் படைத்தளம் ஒன்றையும் உருவாக்கிப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், சட்டவாளர் கரன் பார்க்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு திராணியற்ற சிறீலங்கா அரச படைகள், அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் சட்டவாளர் கரன் பார்க்கர், இவ்வாண்டு மிகவும் துயரம் நிறைந்த வருடமாக விளங்குகின்ற போதும், சில வேளைகளில் தமிழீழ தனியரசு உருவாகுவதற்கு இவ்வாண்டு வழிகோலலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நன்றி>பதிவு
பல்லாயிரம் மக்களுடன் நடைபெற்ற சாவிலும் வாழ்வோம்.
ஜூலை 25, 2006இரவில் தமிழர்களை புலிகள் கொன்றுவிடுவர்: மகிந்த
ஜூலை 25, 2006இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவு நேரங்களில் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுவிடுவர் என்று தன்னைச் சந்தித்த தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர் குழுவிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புளுகியுள்ளார்.
தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச பேசியுள்ளதாவது:
அண்மைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரணின் சிறிலங்கா பயணத்தின் போது கூட்டரசு போன்ற குறிப்பிட்ட சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை நீங்கள் பரிசீலிக்கிறீர்களா?
நாங்கள் நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அனைத்து அரசு அமைப்பு முறைகளையும் குறிப்பாக இந்திய அரசு முறை குறித்து ஆராய கூறியுள்ளோம். அதனடிப்படையில் இலங்கைக்கான ஒரு அரசு முறை உருவாக்க உள்ளோம். ஏனெனில் இது சிறிய நாடு.
அதிகாரப் பகிர்வு என்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்று கருதுகிறீர்களா?
எந்த ஒரு தீர்வானாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர்களை நாம் அழைப்போம். வட்டமேசை மாநாடு நடத்தப்படும். அதன் பின்னர் ஓரிரு பரிந்துரைகள் தீர்மானிக்கப்பட்டு அதை விடுதலைப் புலிகளுக்கும் அனுப்புவோம். ஏனெனில் அவர்களினது கருத்தும் தேவை.
பேச்சுக்கள் ஏன் முறிவடைந்தது என்பது இந்திய மக்களுக்கு புதிராக உள்ளதே?
பிரபாகரன் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ளாதவர். அவர் காடுகளில் தனது தரப்பினருடன் வசிக்கின்றனர். அவரை ஒரு சிலரைத் தவிர எவரும் சந்திக்க முடியாது. அவருடன் எப்படி பேச்சுக்கள் நடத்த முடியும்? அவர் தமிழர்களின் பிரதிநிதியாக
கூறுகிறார். உண்மையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை அவர் பிரதிபலிக்கிறாரா? தமிழர் தரப்பில் பல அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
கொழும்பில் 39 விழுக்காடு தமிழர்கள் உள்ளனர். கொழும்பின் பிரதி மேயர் கூட ஒரு தமிழர்தான்.
இந்தியாவுக்கு மீண்டும் அகதிகள் வருகை தொடங்கியுள்ளதே?
இந்தியாவுக்குச் செல்லுமாறு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளே அனுப்புகின்றனர். அவர்களின் பயணத்துக்கு புலிகளே ஒழுங்கு செய்கின்றனர்.
இங்கே விடுதலைப் புலிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் கூட எங்கள் அகதிகள் முகாம் உள்ளது. புலிகளின் கட்டளைக்கு அவர்கள் கீழ்படியாவிட்டால் இரவு நேரங்களில் சுட்டுக் கொன்றுவிட்டுவார்கள்.
பிரபாகரன் இலங்கையைச் சேர்ந்தவர். நான் அவரைச் சந்திக்கத் தயாராக உள்ளேன். அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்னால் செய்ய முடியும் என்று. நாங்கள் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். அவர் தயாராக இல்லை.
பிரபாகரனை பேச்சு மேசைக்குக் கொண்டு வர இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். நான் போருக்கானவன் அல்ல என்றார் மகிந்த ராஜபக்ச.
நன்றி>புதினம்.
மகிந்தவுக்கு இதயம் இருக்கிறது- மூளை இல்லை: விமல் வீரவன்ச.
ஜூலை 24, 2006தயா மாஸ்டருக்கு சிகிச்சை அளித்திருப்பதன் மூலம் தனக்கு இதயம் இருக்கிறது என்பதை மகிந்த வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் மூளை இல்லை என்று ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்ச சாடியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிப்பதன் மூலம் தனக்கு இதயம் ஒன்று இருப்பதாக வெளிப்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்துள்ளார்.
ஆனால் உண்மையில் அரசாங்கத்துக்கு மூளை இல்லை என்பதைத்தான் அது வெளிப்படுத்தியிருக்கிறது. தங்களது இதயத்தை வெளிப்படுத்துகிறவர்களுக்கு மூளையும் நன்றாக இருக்க வேண்டும்.
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி, பாரமி குலதுங்க கொலை, கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தின் போது இதைச் செய்திருக்க வேண்டும். அன்ரன் பாலசிங்கத்தின் சிறுநீரக சிகிச்சையின் போது இந்தியா எப்படி நடந்து கொண்டது? அவர்கள் பாலசிங்கத்தின் பயணத்துக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் இங்கே பிரச்சனையே நல்ல இதயம் இருக்கிறது. மூளை இல்லை.
இத்தகைய முட்டாள்தனமான சிந்தனைகள் இனிவரும் காலத்தில் இருக்கக் கூடாது என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் விமல் வீரவன்ச.
நன்றி>புதினம்.
ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்.
ஜூலை 23, 2006ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்: கொழும்பில் தாக்குதல் நடத்திய ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் .
இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதலை நடத்திய விஜித ரோகன விஜயமுனிக்கு 1990 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவரால் மன்னிப்பு அளிக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் விஜித ரோகன விஜயமுனி சிஹல உறுமய சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அரசியல் முகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு இப்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
19 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜீவை தான் தாக்கியது குறித்து கொஞ்சமும் குறையாத பேரினவாத வெறித்தனத்துடன் விஜித ரோகன விஜயமுனி கொழும்பு ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணல்:
1985 ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்தேன். கடற்படைக் கப்பல் எண்: 526 இல் றேடியோ தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றினேன். அப்போது நடைபெற்று வந்த வடமராட்சி போர் நடவடிக்கையில் பங்கேற்றிருந்தேன்.
பெருந்தொகையான விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டு காலி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்த நேரம்.
அப்போது அரச தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக யூலை 29 ஆம் நாள் ராஜீவ் சிறிலங்கா வந்திறங்கினார். அப்போது நாடு பதற்றத்தில் இருந்தது. அனைத்து மக்களும் அதிர்ச்சியில் இருந்தனர். எனக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக சிறிலங்காவை இணைத்துவிட்டார்கள் என்று நினைத்தேன். எமது போரை நிர்மூலமாக்கி எங்களை எளிதில் வெற்றி கொண்டுவிட்டார் ராஜீவ். அவருக்கு வரவேற்பளிக்கப்பட்ட சம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என் இரத்தம் கொதித்தது. என்னால் அந்த தொலைக்காட்சிப் பதிவுகளை தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை. ராஜீவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போது ரட்மகம நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சோமரட்ண தனது பதவியிலிருந்து விலகியும் இருந்தார்.
யூலை 30 ஆம் நாள்- நான் விரைவாக தயாராகிக் கொண்டிருந்தேன். காலையில் மீன் உணவை சாப்பிட்டேன். அதன் பின்னர் பேரூந்தில் ஏறி அரச தலைவர் மாளிகைக்குச் சென்றேன்.
அணிவகுப்பு மரியாதைக் குழுவில் இணைந்து கொண்டேன்.
இப்போது அணிவகுப்பு மரியாதை தொடங்க உள்ளது.
மணி முற்பகல் 10 இருக்கும்…
அரை மணிநேரம் கடந்தது…..
ராஜீவ் வந்துசேரவில்லை..
நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது ராஜீவ் மட்டும் அதைச் செய்யாது இருந்திருந்தால் இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதத்தை அப்போதே நாம் அழித்திருப்போம்-
என்ன கொடுமை-
ராஜீவ் காந்திக்கு வணக்கம் செலுத்தி அந்தப் பாவச் செயலில் என்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இரு நாட்டு தேசியப் பண்களும் இசைக்கப்பட்டன.
ராஜீவ் காந்தி வந்திருந்தார்.
கடற்படை தளபதி ஆனந்த டி சில்வா ராஜீவுக்கு பின்னால் இருந்தார்.
நான் இடதுபுறத்திலிருந்து 3 ஆம் நபராக நின்றிருந்தேன்.
என்னால் நீண்ட நேரம் பொறுமை காத்திருக்க முடியவில்லை.
ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும்.
நான் முன்நகர்ந்து ராஜீவை கடுமையாகத் தாக்கினேன். அது பலமான தாக்குதல். ஆனால் அத்தாக்குதல் விலகிச் சென்றுவிட்டது.
நான் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்- அது மரணத்தை ஏற்படுத்தும் தாக்குதல்- அதுதான் என் நோக்கம்.
ஆனால் அவர் மற்றொரு பக்கம் திரும்பியதால் மயிரிழையில் உயிர்தப்பிவிட்டார்.
ராஜீவ் பாதுகாவலர்கள் என்னை அங்கேயே தாக்கினர். மைதானத்தில் விழுந்துவிட்டேன். அதன் பின்னர் கடற்படையால் சோதனையிடப்பட்டு கடற்படை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்ப்ட்டேன்.
அதன் பின்னர் கடற்படை தளபதி லெப். மெண்டிஸ் அங்கு வந்தார்.
“உனக்கு என்ன நடந்திருக்கிறது என்று தெரியுமா?” என்று கேட்டார்.
“நான் செய்வது என்ன என்பது குறித்து எனக்குத் தெரியும். நான் எதற்கும் முகம் கொடுக்கத் தயார்” என்றேன்.
அதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு 4 ஆம் மாடியில் 3 மாதங்கள் வைக்கப்பட்டிருந்தேன். அப்போது காவல்துறை அதிகாரி சந்திர ஜயவர்த்தன என்னிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
ஒருநாள் பிரதி காவல்துறை மா அதிபர் ஹென்றி பெரேரா 20 அல்லது 25 அறைகள் என்னை அறைந்திருப்பார். அது குறித்து சந்திர ஜயவர்த்தனவிடம் முறைப்பாடு செய்தேன். ஆனால் அவர் உயர் அதிகாரி என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
அதேபோல் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் என்னிடம் கேள்வி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
நீதிமன்றில் நிறுத்தப்பட்டேன். 1987 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் இராணுவச் சட்டத்தின்படி 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
எனக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது மிகக் கேவலமாக உணர்ந்தேன். ஏனெனில் எனக்கு தண்டனை விதித்த குழுவில் வடமராட்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தளபதிகளும் இருந்தனர். அவர் கேணல் விஜய விமலரட்ண. அவரும் காலியைச் சேர்ந்தவர்தான்.
தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் வெலிக்கடை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். கைதிகள் என்னை உற்சாகமாக வரவேற்றனர். அதன் பின்னர் இந்திய இராணுவம் வெளியேறக் கோரி சிறைக்குள் போராட்டம் நடத்தினோம். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காயமடைந்தேன்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட போது என்னைச் சுற்றி ஒவ்வொரு நாளும் 500 பேர் இருப்பர். மருத்துவர்களும் தாதியரும் என்னை மிக மிக நன்றாக கவனித்து அன்பு செலுத்தினர்.
என்மீது ஒருபோதும் பரிதாபப்படவில்லை. இன்றைவிட நாளை நல்ல நாளாக இருக்கும் என்றார் விஜித ரோகன விஜயமுனி.
நன்றி>புதினம்.
முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத்தளம்.
ஜூலை 23, 2006
முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத்தளம் அமைக்க விடுதலைப் புலிகள் திட்டம்?: கொழும்பு ஊடகம்
முல்லைத்தீவு அருகே மேலும் ஒரு விமானத் தளத்தை விடுதலைப் புலிகள் அமைக்க திட்டமிடுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு ஊடகத்தின் செய்தி:
கடந்த புதன்கிழமை சிறிலங்கா விமானப் படையினர் வவுனியாவில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று இரவு 8.30 மணியளவில் பறப்பதை ராடார் மூலம் அவதானித்துள்ளனர். சிறிலங்கா காவல்துறையினரும் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியியின் மேலாக அடையாளம் தெரியாத விமானம் பறந்த சத்தத்தைக் கேட்டதாகக் கூறியுள்ளனர்.
முன்னதாக இரவு நேரங்களில் புலிகளின் விமானிகள் இலகு ரக விமான பயிற்சிகளை மேற்கொள்வதாக புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தனர். தற்போது கெரில்லாப் போராளிகள் பரசூட்டுக்களை இரவு நேரங்களில் பயன்படுத்தி பயிற்சி எடுப்பதாகவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர். விமானத் தாக்குதல்களை நடத்துவதற்காக இப்பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அண்மைய விமானத் தாக்குதலில் சேதமடைந்திருந்த புலிகளின் இரணைமடு விமானத்தளம் சீரமைக்கப்பட்டுவிட்டது. 1.4 கிலோ மீற்றர் நீளமுள்ள அந்த விமான தளத்தில் சி-130 ஹெர்குலிஸ் உள்ளிட்ட நடுத்தர விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் விமான தளத்தின் ஓடுபாதைக்கு அருகாமையில் இருந்த கட்டிடம் பாரிய சேதத்துக்குள்ளானது. அக்கட்டடம் சீரமைக்கப்படவில்லை.
மேலும் முல்லைத்தீவு அருகே புதுகுடியிருப்பிருந்து தென்பகுதியில் 10 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய அளவிலான இடத்தை விடுதலைப் புலிகள் தூய்மைப்படுத்தி வருவதாக ஆளில்லா வேவு விமானங்கள் மூலம் விமானப்படையினர் அறிந்துள்ளனர். அனேகமாக அங்கேயும் ஒரு விமான தளத்தை விடுதலைப் புலிகள் அமைக்கக் கூடும் என்ற சந்தேகத்தை அது எழுப்பியுள்ளது. இரணைமடுக்கு மிக அருகாமையில் தென்கிழக்கில் மற்றொரு விமான தளத்தை விடுதலைப் புலிகள் ஏன் அமைக்கின்றனர் என்பது குறித்து சிறிலங்கா விமானப் படையினர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
பாரிய அளவிலான பிரதேசத்தை துப்பரவு செய்தமை விமானத்தளத்துக்காக இல்லையெனில் அது எதற்காக என்பது குறித்து விமானப் படையினரால் கண்டறிய இயலாமல் போகும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடு கருப்பு ஜூலை83.
ஜூலை 22, 2006தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய துன்பியல் நிகழ்வு என வர்ணிக்கப்படுவது 83 ஆடிக் கலவரம்.
காருண்ய சீலரான புத்தரின் உயர்ந்த நெறி பிரவகித்த இலங்கைத் தீவில், மனிதத்துவமற்ற மிருகத்தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுத்தனம் மிக்க மிலேச்சத்தனமும் நிறைந்த இரத்தவெறி இப்படிக் கட்டவிழ்த்து விடப்பட்டது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்று புரியாமல் உலகத்தின் மனச்சாட்சி கலங்கி நின்றவேளை அது.
1983 ஜூலையில் இடம்பெற்றது இந்த இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு முன்னரும் இத்தீவில் 1956, 1958, 1974, 1977,1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் எடுத்து ஆடின.
அவ்வப்போது, தமிழர்களுக்கு எதிராக வெடித்த இந்த இனக் கலவரங்களை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவருக்கும் இடையே நிலவிய வெறும் இனப்பகை உணர்வின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்து வெடித்த வன்செயல்கள் என்று மட் டும் கருதிவிடவோ, அடையாளப்படுத்தி விடவோ முடியாது.
தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூர வன்முறைப் புயல்களும், வெறியாட்டங்களும் பெரும்பாலும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டமிட்டு ஏவப்பட்டவையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1983 ஆடிக் கலவர மும் இதற்கு விதி விலக்கல்ல.
1983 ஜூலை கலவரம் வெடிக்க முன்னரே அதற்கு முந் திய ஜூன் மாதத்திலேயே வவுனியா, திருகோணமலை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத் தமிழர்களின் வாழி டங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் ஆரம் பித்துவிட்டன. டசின் கணக்கான தமிழர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் வீடுகள், வாசல்கள், கடைகள், ஆலயங்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்கள் சீருடையினரால் கொன்றொழிக்கப் பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கை அக்காலகட்டத்தில், 83 ஜூனி லேயே ஆரம்பமாகி விட்டது. அது 83 ஜூலையில் உச்சம் பெற்று ஆறு நாள்கள் இலங்கைத் தீவு எங்கும் தலைவிரித்தாடியது.
யாழ்., திருநெல்வேலியில் ஜூலை 23இல் புலிகளின் தாக்கு தலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து திருநெல்வேலியிலும், கந்தர்மடத்திலும் இனவெறிச் சன்னதம் ஆடியது சிங்கள இராணுவம். அறுபது பொதுமக்கள் அங்கு சீருடை யினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், முன்னெப்போதும் இடம்பெற்றிராத குரூர மாக கொடூர இனவன்முறையாக இலங்கைத் தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்து இரத்தப் பிரளயமாக வெடித்தது. தட்டிக் கேட்பாரின்றி இனவெறியாட்டம் தலைநகர் கொழும்பி லும், ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அலை அலையாகச் சீறிப் பரவியது. தமிழரின் குருதி ஆறாய்ப் பெருக் கெடுத்தோட அவர்களின் சொத்துகளும், உடைமைகளும், உடலங்களும் தீயில் கருகின.
பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழ ருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கட்டடங் கள், மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங் கள் என்பன சூறையாடப்பட்டு பின்னர் எரித்து கரிமேடுகள் ஆக்கப்பட்டன.
இந்த இனக் கலவரத்தில் பேரினவாத ஆட்சியாளர்களின தும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரிகளினதும் கறை பட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தமையைச் சரித் திரம் பகர்கின்றது.
தமிழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமிழர் களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகிய வற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத்தனம் அடங்கி விட வில்லை.
தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக் காலத்தின் அருவருக் கத் தக்க மிகப்பெரும் கொடூரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் அரங்கேறியது. சிங்களக் கைதிகளும், சிங் களச் சிறைக்காவலர்களும் கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டு களை உடைத்து, நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதி களைக் கண்டதுண்ட மாக வெட்டி, குரூரமாக அவர்களது உட லங்களைக் குத்திக் கிழித்துச் சிதைத்துச் சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிருகத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடுதியை ஏற் படுத்திய கறுப்பு ஜூலை கலவரம் “பேரழிவிலும் ஒரு நன்மை’ என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற் றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கௌரவமான வாழ் வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை.
தமிழர்களுக்குப் பேரழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பௌத்தசிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக் கின்றது.
இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சிங் களம் புரிந்த பல் பரிமாண ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. இலங் கைத் தீவில் இன முரண்பாட்டை அது மேலும் கூர்மையடைய வைத்தது. இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத் தியமாக்கியது. தமிழ் மக்களிடையே விடுதலை நோக்கிய தீவி ரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் முழு அளவில் தோற்றம் கொள்வதற்கான ஒரு புற நிலையை இது உருவாக்கியது.
சுருங்கக் கூறுவதானால் அரச ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக் கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட் டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கக் காலாயிற்று.
இந்த இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை உருப்பெற வைத்த துடன் தனியரசுப் போராட்டம் வீறுகொண்டு எழுவதற் கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த இனக் கலவரம் தமிழ் மக்களது அரசியல் வரலாற்று செல் நெறியை மாற்றி, திருத்தமான உகந்த தடத்தில் அதைத் தூக்கி நிறுத் தியதும் கவனிக்கத்தக்கது.
இணைப்பு : newstamilnet.com
Saturday, 22 Jul 2006 USA











