ஜூலை 29th, 2006- ‍க்கானத் தொகுப்பு

படையினரின் வலிந்த தாக்குதல்கள் கொழும்புக்கு ஆபத்து.

ஜூலை 29, 2006

படையினரின் வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்பட வழிகோலும் – ஹென்றிக்சன்
தமிழர் தாயகப் பகுதி மீது சிறீலங்கா படையினர் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் கொழும்பு நகரம் தாக்கப்படுவதற்கு வழிகோலும் என கண்காணிப்புக் குழு எச்சரித்துள்ளது. நேற்று ரொயிற்றர் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கும் போது உல்வ் கென்றிக்சன் இதனைத் தெரிவித்தார்.

மாவிலாற்றுப் பிரச்சினையை காரணம் காட்டி தரை, வான்வெளிகளில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்துள்ள வலிந்த தாக்குதல்கள் தவறான அணுமுறை என கண்ணடம் வெளியிட்டுள்ளார்.

இரு தரப்பினரும் போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் முறித்துக்கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் கண்காணிப்புக் குழுத் தலைவர் தற்பொழுது பெயரளிவில் மட்டுமே போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இரு தரப்பினரும் அதிகாரபூர்வமாக விலகாததால் அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பேச்சை ஆரம்பிக்க முடியும். எனினும் தற்போதைய போர் நிறுத்தத்தில் இருந்து பலதூரத்திற்கு சென்றுவிட்டோம்.

நீரைப் பெறுவதாகக் கொண்டு வலிந்த தாக்குதலைத் தொடுத்துள்ளதன் மூலம் தவறான பாதையில் சிறீலங்கா அரசாங்கம் செல்கிறது. உண்மையில் நீரைப் பெறுவதில் சிறீலங்கா அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்தால் வலிந்த தாக்குதலைத் தொடுப்பது பொருத்தமற்ற செயலாகும்.

சிறீலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெருகல் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திப்பை மேற்கொண்டோம். சிறீலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு நாம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வலியுறுத்தினோம். ஆனால் நாம் பேசிக்கொண்டிருந்த போது சிறீலங்கா வான்படை விமானங்கள் எமக்கு அருகில் குண்டுகளை வீசின. இது சரியான அறிகுறி இல்லை என்பதே எனது கருத்து.

என்னைப் பொறுத்த வரை முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பிக்கும் வல்லமையை இரு தரப்பினரும் கொண்டிருக்கவில்லை. தற்போதைய வன்முறைகளை மட்டுமே இரு தரப்பினராலும் அதிகரிக்க முடியும். எனினும் நிலமையை சிறீலங்கா அரசாங்கம் கட்டுப்படுத்தத் தவறினால் கொழும்பில் தாக்குதல்கள் நடப்பதை தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

பின்லான்ட், டென்மார்க், ஆகிய நாடுகளைப் போன்று கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் முடிவை சுவீடனும் எடுக்கும் பட்சத்தில் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் செயலிழந்து போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நன்றி>பதிவு

இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது.

ஜூலை 29, 2006

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செத்துவிட்டது: உல்ப் ஹென்றிக்சன
இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. செத்துவிட்டது. ஆனால் பெயரளவிலும் உக்கிரமற்ற தணிவான போரும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு உல்ப் ஹென்றிக்சன் அளித்த நேகாணல்:
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகிய இருதரப்பினரது செயற்பாடுகளினாலுமே யுத்த நிறுத்த ஒப்பந்தமானது உண்மையில் அதிகபட்சமாகவோ குறைந்தபட்சமாகவோ முறிவடைந்துள்ளது.
உண்மையான யுத்த நிறுத்தத்திலிருந்து தொலைவில்தான் நாம் உள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது எங்கள் முன்னாலேயே விமானத்திலிருந்து குண்டு வீசப்பட்டது. நிச்சயமாக இது சரியான சமிக்ஞை அல்ல.
எந்த ஒருதரப்பும் முழு அளவிலான யுத்தத்துக்குத் தயாராக இருப்பதாக நான் கருதவில்லை. வன்முறைகள்தான் அதிகரிக்கும். வன்முறைகள் அதிகரிப்பது என்பது சிக்கலானது. நிலைமைகளை கவனத்தில் கொள்ளாவிடால் கொழும்புவுக்கும் வன்முறைகள் பரவும்.
பின்லாந்து, டென்மார்க்கைப் போல் சுவீடனும் வெளியேற முடிவு செய்தால் மூன்றில் ஒரு பங்கு கண்காணிப்புக் குழுவினர் வெளியேற நேரிடும். அனைத்து முறைப்பாடுகளையும் எம்மால் விசாரிக்க முடியாது. கண்காணிப்புக் குழு மூடப்பட்டுவிட்டால் இருதரப்புக்கும் இடையே செய்திகளை எடுத்துச் செல்கிற நபர்கள் இல்லை. அது அப்பாவி மக்களை பாதுகாப்பற்ற தன்மையை மேலும் அதிகரிக்கும் என்றார் உல்ப் ஹென்றிக்சன்.

நன்றி>புதினம்.

இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.

ஜூலை 29, 2006

ஈரானுக்கு அணுஆயுதம் செய்வதற்கு உதவி செய்த இரண்டு இந்திய நிறுவனங்கங்களுக்கு தடைவிதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது, ஆனால் அவற்றின் பெயர்களை அறிவிக்க மறுத்து விட்டது,

இதேவேளை அப்துல் கலாம் காஸ்மீர் வருவதயிட்டு எதிப்பு தெரிவிக்கும் முகமாக கடைகள் அனைத்து மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரின் பாரிய தாக்குதல் முயற்சி முறியடிப்பு.

ஜூலை 29, 2006

திருகோணமலையில் மாவிலாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய தாக்குதல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கந்தையிலிருந்து மாவிலாறு நோக்கி இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்ட தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் இன்று காலை முதல் இரண்டு முறை பாரிய தாக்குதல் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது இராணுவத்தினருக்குத் துணையாக சிறிலங்கா விமானப்படை விமானங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதேநேரம் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுத் தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இந்த நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டன.

இந்த முறியடிப்பு நடவடிக்கைகளின் போதே இரு போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர்.

இணைப்பு : newstamilnet.com
Friday, 28 Jul 2006 USA