ஜூலை 28th, 2006- ‍க்கானத் தொகுப்பு

உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன!!!

ஜூலை 28, 2006

உங்கள் முன்னால் குண்டுகள் வீசப்படுகின்றன, இப்போது என்ன கூறப்போகின்றீர்கள்?: கண்காணிப்புக் குழுவிடம் புலிகள் கேள்வி
[சனிக்கிழமை, 29 யூலை 2006, 05:51 ஈழம்] [கொழும்பு நிருபர்]
உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக சி.எழிலன் கொழும்பு ஊடகமொன்றுக்கு கூறுகையில்,

இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவின் தலைவர் உலப் ஹென்றிக்சனுடன் நேற்று மாலை 3.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன்.

எமது அலுவலகத்திற்கு 750 மீற்றர் தூரத்தில் விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசின.

உங்கள் கண்முன்னாலேயே குண்டுகள் வீசப்படுவதை பாருங்கள். இது தொடர்பாக என்ன கூறப் போகின்றீர்கள் என்று உலப் ஹென்றிக்சனிடம் கேட்டேன். உண்மை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.

அரசாங்கத்துடன் பேசி முடிவெடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறி பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு அவரை வழியனுப்பிவிட்டேன் என்றார் எழிலன்.

உல்ப் ஹென்றிக்சனுடனான சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

நன்றி>புதினம்.

விமானத் தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம்.

ஜூலை 28, 2006

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெறும் சிறீலங்கா விமானத் தாக்குதலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை திருமலை மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை கண்டிக்கும் பொழுது மகிந்த ராஜபக்ச நடத்தும் நாடக வலையினுள் இந்தியா விழுந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அரங்கில் மகிந்த ராஜபச்ச சிறந்த நடிகர் எனவும் சுட்டிக்காட்டிய ராமதாஸ் நோர்வேயின் அனுசரணையின் கீழ் இனப்பிரச்சினைக்கு சிறீலங்கா அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-பதிவு-

சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும்.

ஜூலை 28, 2006

சிறீலங்கா விமானத் தாக்குதலானது போர் நிறுத்த மீறலாகும் – கண்காணிப்புக் குழு.
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளுக்குள் நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
சிறீலங்கா வான்படையினரின் தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்து கண்காணிப்புக் குழு பேச்சாளர் ஒமர்சன் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட முல்லைத்தீவு மற்றும் திருமலையிலும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலானது போர் நிறுத்த உடன்படிக்கையின் சரத்துக்களின் படி அரசாங்கம் யுத்த நிறுத்த மீறலை செய்துள்ளதாக ஒமர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த முழுமையான அறிக்கை ஒன்றை தாயாரித்துக்கொண்டிருப்பதாகவும் விமானத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் இதுவரை முறைப்பாடு எதனையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-பதிவு-