ஜூலை 22nd, 2006- ‍க்கானத் தொகுப்பு

தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடு கருப்பு ஜூலை83.

ஜூலை 22, 2006

தமிழ்த் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய துன்பியல் நிகழ்வு என வர்ணிக்கப்படுவது 83 ஆடிக் கலவரம்.

காருண்ய சீலரான புத்தரின் உயர்ந்த நெறி பிரவகித்த இலங்கைத் தீவில், மனிதத்துவமற்ற மிருகத்தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுத்தனம் மிக்க மிலேச்சத்தனமும் நிறைந்த இரத்தவெறி இப்படிக் கட்டவிழ்த்து விடப்பட்டது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்று புரியாமல் உலகத்தின் மனச்சாட்சி கலங்கி நின்றவேளை அது.
1983 ஜூலையில் இடம்பெற்றது இந்த இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு முன்னரும் இத்தீவில் 1956, 1958, 1974, 1977,1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் எடுத்து ஆடின.
அவ்வப்போது, தமிழர்களுக்கு எதிராக வெடித்த இந்த இனக் கலவரங்களை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவருக்கும் இடையே நிலவிய வெறும் இனப்பகை உணர்வின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்து வெடித்த வன்செயல்கள் என்று மட் டும் கருதிவிடவோ, அடையாளப்படுத்தி விடவோ முடியாது.
தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூர வன்முறைப் புயல்களும், வெறியாட்டங்களும் பெரும்பாலும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டமிட்டு ஏவப்பட்டவையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1983 ஆடிக் கலவர மும் இதற்கு விதி விலக்கல்ல.
1983 ஜூலை கலவரம் வெடிக்க முன்னரே அதற்கு முந் திய ஜூன் மாதத்திலேயே வவுனியா, திருகோணமலை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத் தமிழர்களின் வாழி டங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் ஆரம் பித்துவிட்டன. டசின் கணக்கான தமிழர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் வீடுகள், வாசல்கள், கடைகள், ஆலயங்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்கள் சீருடையினரால் கொன்றொழிக்கப் பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கை அக்காலகட்டத்தில், 83 ஜூனி லேயே ஆரம்பமாகி விட்டது. அது 83 ஜூலையில் உச்சம் பெற்று ஆறு நாள்கள் இலங்கைத் தீவு எங்கும் தலைவிரித்தாடியது.
யாழ்., திருநெல்வேலியில் ஜூலை 23இல் புலிகளின் தாக்கு தலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து திருநெல்வேலியிலும், கந்தர்மடத்திலும் இனவெறிச் சன்னதம் ஆடியது சிங்கள இராணுவம். அறுபது பொதுமக்கள் அங்கு சீருடை யினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், முன்னெப்போதும் இடம்பெற்றிராத குரூர மாக கொடூர இனவன்முறையாக இலங்கைத் தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்து இரத்தப் பிரளயமாக வெடித்தது. தட்டிக் கேட்பாரின்றி இனவெறியாட்டம் தலைநகர் கொழும்பி லும், ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அலை அலையாகச் சீறிப் பரவியது. தமிழரின் குருதி ஆறாய்ப் பெருக் கெடுத்தோட அவர்களின் சொத்துகளும், உடைமைகளும், உடலங்களும் தீயில் கருகின.
பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழ ருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கட்டடங் கள், மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங் கள் என்பன சூறையாடப்பட்டு பின்னர் எரித்து கரிமேடுகள் ஆக்கப்பட்டன.
இந்த இனக் கலவரத்தில் பேரினவாத ஆட்சியாளர்களின தும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரிகளினதும் கறை பட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தமையைச் சரித் திரம் பகர்கின்றது.
தமிழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமிழர் களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகிய வற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத்தனம் அடங்கி விட வில்லை.
தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக் காலத்தின் அருவருக் கத் தக்க மிகப்பெரும் கொடூரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் அரங்கேறியது. சிங்களக் கைதிகளும், சிங் களச் சிறைக்காவலர்களும் கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டு களை உடைத்து, நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதி களைக் கண்டதுண்ட மாக வெட்டி, குரூரமாக அவர்களது உட லங்களைக் குத்திக் கிழித்துச் சிதைத்துச் சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிருகத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடுதியை ஏற் படுத்திய கறுப்பு ஜூலை கலவரம் “பேரழிவிலும் ஒரு நன்மை’ என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற் றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கௌரவமான வாழ் வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை.
தமிழர்களுக்குப் பேரழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பௌத்தசிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக் கின்றது.
இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சிங் களம் புரிந்த பல் பரிமாண ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. இலங் கைத் தீவில் இன முரண்பாட்டை அது மேலும் கூர்மையடைய வைத்தது. இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத் தியமாக்கியது. தமிழ் மக்களிடையே விடுதலை நோக்கிய தீவி ரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் முழு அளவில் தோற்றம் கொள்வதற்கான ஒரு புற நிலையை இது உருவாக்கியது.
சுருங்கக் கூறுவதானால் அரச ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக் கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட் டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கக் காலாயிற்று.
இந்த இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை உருப்பெற வைத்த துடன் தனியரசுப் போராட்டம் வீறுகொண்டு எழுவதற் கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தன. இந்த இனக் கலவரம் தமிழ் மக்களது அரசியல் வரலாற்று செல் நெறியை மாற்றி, திருத்தமான உகந்த தடத்தில் அதைத் தூக்கி நிறுத் தியதும் கவனிக்கத்தக்கது.

இணைப்பு : newstamilnet.com
Saturday, 22 Jul 2006 USA

இந்திய நிறுவனத்திடமிருந்து எண்ணெய்க்குதங்கள் பறிப்பு!!

ஜூலை 22, 2006

சிறிலங்காவில் செயற்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்களை பறிக்க சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் திருகோணமலை சீனன்குடா எண்ணெய்க்குதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த எண்ணெய்க்குதங்களை பொறுப்பேற்குமாறு தற்போது சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் எழுத்து மூலம் இந்த எண்ணெய்க்குதங்கள் இந்திய நிறுவனத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தன.

அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன நிறுவனத்துக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

மேலும் ஜே.வி.பி. ஆதரவிலான தொழிற்சங்கங்களும் இந்தியாவை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கூட்டுத் தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிறிலங்காவின் எண்ணெய் வர்த்தகத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை தவிர்ப்பது, வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை தேசிய எண்ணெய் சந்தையிலிருந்து நீக்குதல், நாட்டிற்குள் எண்ணெய் வர்த்தகத்தின் ஏகாதிபத்தியத்தை மீண்டும் கூட்டுத்தாபனத்தின் வசம் கொண்டு வருதல் மற்றும் தேசிய சந்தையில் எரிபொருளின் விலையைக் குறைத்தல் ஆகியவை குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்திய நிறுவனத்திடமிருந்து எண்ணெய்க்குதங்களை பறிக்குமாறு ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறிலங்கா திறைசேரியின் கீழ் இருக்கும் 107 எரிபொருள் நிலையங்களின் பொறுப்பு, நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வசம் ஒப்படைப்பதற்கும் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெற்ற திருகோணமலை எண்ணெய்க்குதங்கள்

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து நாட்டினால் திருகோணமலை சீனன்குடாவில் பாரிய எண்ணெய்க்குதங்கள் அமைக்கப்பட்டன. திருகோணமலை துறைமுகத்திலிருந்து இங்கிலாந்து நிர்வாகத்தில் இருந்த கிழக்கு கடற்படையினருக்காக இந்த எண்ணெய்க்குதங்கள் உருவாக்கப்பட்டன.

இலங்கையிலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் இந்த எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் இருந்தன. திருகோணமலையில் உள்ள இந்த எண்ணெய் குதங்களை பயன்பாட்டுக்குப் பெறுவதன் மூலமாக திருகோணமலையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா, இந்தியாவும் 1980-களின் தொடக்கத்திலே போட்டியிட்டன.

ஆனால் 1980-களின் தொடக்கத்தில் திருகோணமலையில் அமெரிக்காவின் நிறுவனங்கள் கால்பதிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருந்தது.

அப்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இத்தகவலை தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அந்நாளைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றில் பகிரங்கமாகவே சிறிலங்காவின் இந்த அனுமதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு ராஜீவ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவின் அனுமதியின்றி வேறு எந்த ஒரு நாட்டினது பயன்பாட்டுக்கும் அனுமதிக்கக் கூடாது என்பதை இடம்பெற வைத்தது இந்தியா. சிறிலங்காவும் ஒப்புக்கொண்டது.

ஆனால் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றுக்கு திருகோணமலையில் 300 ஏக்கர் நிலத்தை கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தது. அதனால் இந்தியா-சிறிலங்கா இடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

திருமலைக்காக அமெரிக்கா- இந்தியா மோதல்

தொடர்ச்சியான யுத்தத்துக்குப் பின்னால் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்ற நிலையிலேயே இந்தியாவும் அமெரிக்காவும் திருகோணமலையைக் கைப்பற்றும் முயற்சிகளில் முனைப்பு காட்டின.

அமெரிக்கா நடத்தி வந்த ஆப்கான் யுத்தத்துக்கு உதவியாகவும் தெற்காசிய பிராந்தியத்தில் தலையிடவும் திருகோணமலையில் தனது இராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா விரும்பியது.

மத்திய கிழக்குக்கும் ஆசியாவுக்கும் இடையேயான கடல்வழிப் போக்குவரவுக்கு திருகோணமலை துறைமுகம் பயன்படும் என்றும் அமெரிக்கா கருதியது.

திருகோணமலை எண்ணெய்க்குதங்களை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள் இருநூறுக்கும் மேற்பட்ட சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர்களான சிங்களவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.

இருதரப்பு பேச்சுக்களின் பின்னர் 2002 ஆம் ஆண்டு யூன் 11 ஆம் நாள் இந்திய-சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனங்கள் இது தொடர்பிலான புரிந்துணர்வு ஓப்பந்தத்தை ஏற்படுத்தின.

2003 ஆம் ஆண்டு பெப்ரவரியில் சிறிலங்கா அரசாங்கம்- சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம்- இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாதானது.

ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாத கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்த எதிர்ப்புகளிடையே 2003 ஆம் ஆண்டு மே 28 ஆம் நாள் லங்கா-இந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பணிகளை முறைப்படி அந்நாளைய இந்திய பெற்றோலிய அமைச்சர் ராம் நாயக் கொழும்பில் தொடங்கிவைத்தார்.

மகிந்தவும் இந்தியாவும்

இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய கூட்டரசாங்கம் இந்தியாவில் ஆட்சி அமைத்தது.

அதேபோல் கடந்த 2005 ஆம் ஆண்டு சிறிலங்கா அரச தலைவராக பேரினவாதி மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றார்.

சிறிலங்காவுக்குச் சார்பான நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுக்கக் கூடாது என்று தமிழ்நாட்டிலிருந்து பாரிய அழுத்தம் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டது.

அதன் விளைவாக தான் பதவியேற்ற நிலையில் மேற்கொண்ட மகிந்தவின் முதலாவது இந்தியப் பயணம் படுதோல்வியில் அடைந்தது.

ஐக்கிய இலங்கை எனும் கோட்பாட்டை வலியுறுத்தி பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு மகிந்தவுக்கு இந்தியா அறிவுறுத்தியது. இராணுவ உதவியை செய்யவும் மறுத்தது.

இதனால் வழமைபோல் இந்தியாவை அச்சுறுத்த பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் ஆயுத உதவிகளைக் கோர சிறிலங்கா முடிவு செய்தது.

அரசியல் ரீதியாக சிங்களப் பேரினவாதத்துக்குச் சார்பாக இல்லாத இந்தியாவை வெளியேற்றும் நடவடிக்கையானது மகிந்த ராஜபக்ச பதவியேற்ற 3 ஆவது மாதத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது.

2006 ஜனவரி 29 ஆம் நாள் ஊடகவியலாளர்களிடம் பேசிய மகிந்தவின் பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, திருகோணமலையில் சிறிலங்கா – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்துக்கு கொடுக்கப்பட்ட எண்ணெய் சேமிப்புக்குதங்களை சிறிலங்கா அரசாங்கம் மீள தன்வசம் வைத்துக் கொள்ளவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் இந்திய நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட வேண்டிய மானியத் தொகையான 78 மில்லியன் டொலரை மகிந்த ராஜபக்ச நிறுத்தினார். இதனால் சிறிலங்காவின் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் முடங்கும் நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் கடந்த யூன் மாதம் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டு சமரச ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் இந்த மாதம் தொடக்கத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் பௌசி பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார்.

அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் இந்தியாவை வெளியேற்றக் கோரி மகிந்தவுக்கு கெடு விதித்தது.

இந்தியாவை வெளியேற்றா விட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. தங்களது தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து தொழிற்சங்கத்தினரை பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பேச்சுக்கு அழைத்தார். இந்திய நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் மீண்டும் வலியுறுத்திய நிலையில் இந்தியாவிடமிருந்து எண்ணெயக்குதங்களை பொறுப்பேற்குமாறு சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு அதிரடியாக ரட்ணசிறீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்களத்துக்குச் சார்பாக இல்லாமல்- ஆனால் தனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியாவின் செயற்பாட்டை முறியடிக்கும் வகையில் இந்தியாவை முன்னிறுத்தி வந்த ரணில் விக்கிரமசிங்கவை பேச்சுக்கு அழைப்பதுபோல் அழைத்து கடைசிநேர நாடகத்தால் இந்தியாவின் தலையீட்டை தான் விரும்பவில்லை என்பதை அண்மையில் மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்தியிருந்தார்.

மகிந்த அரசாங்கத்தின் எண்ணெய் நிறுவனம் தொடர்பான தற்போதைய முடிவானது இந்தியாவை தொடர்ந்து நிராகரிக்கும் வகையில் இருப்பதாக கொழும்பு கொள்கை வகுப்பாளர் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிங்களவர்கள் எப்போதும் இந்தியாவுக்குச் சார்பானவர்கள் இல்லை என்பதை இனியேனும் இந்தியா புரிந்து கொண்டு இந்தியாவை தாய்நாடு என்று கருதி இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு செயற்பாட்டையும் எந்த நிலையிலும் மேற்கொள்ள மாட்டோம் என்று தொடர்ந்து அறிவித்து வரும் தமிழர் தரப்பின் பக்கம் உள்ள உண்மைகளை உணர்ந்து கொண்டு தனது வெளிவிவகாரக் கொள்கையை மாற்றிக் கொள்வதுதான் பிராந்திய ரீதியாக இந்தியாவுக்கு பயனளிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நன்றி>புதினம்.