ஜூலை 17th, 2006- ‍க்கானத் தொகுப்பு

சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா?

ஜூலை 17, 2006

சொந்த நாட்டை பாதுகாக்க முடியாத இந்தியா இலங்கையரசை பாதுகாக்க உதவி வழங்குகிறது திருமாவளவன் விசனம்.
இலங்கை அரசுக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “பொடா” எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் மேலும் பேசியதாவது;

“இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் பாராளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப்பகுதியான மும்பையில் ரயில் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உளவுத்துறையால் இக்குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குரிய பாதுகாப்பைச் செய்ய முடியாத இந்தியா, இலங்கை அரசுக்கு ராடார் கருவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். முதலில் தனது நாட்டின் பாதுகாப்பிலே இந்தியா கவனம் செலுத்தட்டும்.

ஈழம் என்றால் புலிகள் – புலிகள் என்றால் ஈழம் என்பதுதான் எமது நிலைப்பாடு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெறுவது என்பது தேர்தல் அரசியல் கூட்டு. கூட்டணிக் கட்சிகளிலே இடம்பெற்றிருக்கிறோம் என்பதற்காக எங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

“பொடா” சட்டம் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்ல நாம். பொடா சட்டத்திலே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே புலித் தேசத்துக்குப் போய் வந்தவன் நான். தேர்தல் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசிய பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.’

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் செந்திலதிபன் பேசுகையில், “ஈழத்திலே இருக்கிற எம் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகாலமாக எதுவித ஊதியம் எதுவும்பெறாமல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார்.

இக்கூட்டத்தில் “பொடா” வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் 914 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு, பேராசிரியர்கள் சரசுவதி, கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இணைப்பு : newstamilnet.com

இந்தியாவில் எழுத்து உரிமைக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஜூலை 17, 2006

இந்தியாவில் எழுத்து உரிமைக்கு தடை விதிக்கப்படுகிறது, ஒரு ஜனநாயக நாட்டில் நடப்பதென்ன? இது எழுத்துரிமையை மதிக்கும் அனைவரையும் சீண்டிப்பார்கும் ஒரு நடவடிக்கை. சில வலைபூக்கள் பிரச்சினையானவை என்றால் அவற்றை தெரிந்தெடுத்து தடை செய்வதை விட்டு விட்டு, ஒட்டுமொத்தமாக அனைத்து புளக்கர்களையும் இழுத்துப்பூட்டுவது என்பது எந்த விதத்தில் நியாயம்? எழுத்துரிமையை மறுக்கும் இந்தியா உண்மையிலேயே இது ஜனநாயக நாடுதானா? அல்லது இதுதான் ஜனநாயகமா? ஆண்டுக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேர்த்து வைத்தவற்றை ஒரு நிமுடத்தில் இழப்பதென்பது எவ்வளவு பெரிய சோகம், மகரந்தம் என்னும் ஒரு வலைப்பதிவர் கூறுகிறார் இனி எனது எழுத்துக்களை என்னாலேயே பார்க்கமுடியாது என்று. இதற்கு என்னதான் தீர்வு.

பாதிக்கப்பட்டவர்களின் உரல்கள்

http://madippakkam.blogspot.com/2006/07/blogspot.html
http://icarus1972us.blogspot.com/2006/07/blogspotcom-ban-next-in-chennai.html
http://gragavan.blogspot.com/2006/07/blog-post_115314839163033283.html
http://icarus1972us.blogspot.com/2006/07/blog-post.html

மேலதிக விவரத்துக்கு தொடர்ந்து வரும்>http://www.eelabarathi.com

ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம் -திருமாவளவன்

ஜூலை 17, 2006

ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம் என்பதே எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன்.

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற “”பொடா” எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருமாவளவன் தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப் பகுதியான மும்பையில் தொடர் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் உளவுத்துறையால் இக் குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த நாட்டுக்குரிய பாதுகாப்பைச் செய்ய முடியாத இந்தியா, சிங்கள தேசத்துக்குப் போய் ராடர் கருவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். முதலில் தனது நாட்டின் பாதுகாப்பிலே இந்தியா கவனம் செலுத்தட்டும்.

“பொடா” சட்டம் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்ல நாம். பொடா சட்டத்திலே கைது நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்ட காலத்திலேயே புலித் தேசத்துக்குப் போய் வந்தவன் நான். தேர்தல் அரசியல் மாறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசிய பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் – என்றார்.

நன்றி>பதிவு