ஜூன் 24th, 2006- ‍க்கானத் தொகுப்பு

கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?

ஜூன் 24, 2006

இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன.
சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கடந்த செவ்வாய்க்கிழமை (20.06.06) மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதன்படி, இராணுவமும், விடுதலைப் புலிகளும் போரை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளதால், இதை நிறுத்த ஒரு மாற்று உத்தியை தான் முன்னெடுக்க யோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவின் உத்தியோகபூர் வாசஸ்தலத்தில் சந்தித்த மகிந்த, இதற்கான இணக்கப்பாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து கண்டறிந்து தனக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
போரொன்று ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்காவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படையலாம் என்று குறிப்பிட்ட மகிந்த, சிறிலங்காவின் அனைத்து சமூகங்களும் இதனால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததுடன், நோர்வேயின் அனுசரணையில் தங்கியிருக்காது, அவர்களை விலக்கிவிட்டு, நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய நேரடிப் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப்பாட்டை அமுல்படுத்த இரு வாரங்களுக்கு முயற்சித்துப் பார்த்து, அதில் வெற்றி காணும் பட்சத்தில் அந்த வெற்றியைத் தொடர்ந்து செயற்படுத்த இருதரப்பும் முயலலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்த இருவார காலப்பகுதியில், விடுதலைப் புலிகள் மீதோ அல்லது பொதுமக்கள் மீதோ, கருணா குழுவினர் எதுவித தாக்குதல்களையும் தொடுக்காது இருக்க தான் பொறுப்பெடுக்க முடியும் என்று தெரிவித்த மகிந்த, இத்தகைய இருவார நேரடி போர் நிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் இந்தக் கோரிக்கையை, உதயன் நாளேட்டைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனிடம் விளக்கியதாகவும், அதற்கான பதிலை விடுதலைப் புலிகள் பின்னர் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறிவிட்டதாகவும், சண்டே லீடர் மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி>புதினம்.

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்லம் தாக்குதல்.

ஜூன் 24, 2006

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்ல தாக்குதல்களை கண்டித்து மக்கள் போராட்டம்.
யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அரச படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரும் சேதப்படுத்தியமையைக் கண்டித்து இன்று சனிக்கிழமை குடாநாடு தழுவியபூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய விழிப்புணர்வு கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று வீடுகளை விட்டு மக்கள் வெளியில் வரமால் வர்த்தக நிலையங்கள் முடியும் போக்குவரத்தை நிறுத்தியும் தமது எதிர்பை மக்கள் தெரிவிக்க வேண்டும் என தேசிய விழிப்புக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நன்றி>புதினம்.