ஜூன் 22nd, 2006- ‍க்கானத் தொகுப்பு

கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு

ஜூன் 22, 2006

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர்.
கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின் போதும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இதனை வலியுறுத்தினார்.
ஆனால் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் இன்று வியாழக்கிழமை நிராகரித்திருப்பதாக அசோசியேட் பிறஸ் நிறுவன செய்தி தெரிவித்துள்ளது.

நன்றி>புதினம்.

தமிழீழஅரசை புலிகள் இயங்குகின்றனர் – AP செய்தி நிறுவனம்.

ஜூன் 22, 2006

சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் AP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரசு இயங்குவதை உணர்த்தி நிற்பதாகவும், AP செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. கிளிநொச்சியை தலைநகராகக் கொண்;டு, எல்லையில் குடிவரவு – குடியகல்வு – சுங்க நிர்வாகத்தையும், உள்ளே காவல்துறை, கல்விக் கட்டமைப்பு, வரியிறுப்பாளர்கள், விளையாட்டுத்துறை போன்ற அரசுக்கு உரித்தான சகல கட்டமைப்புக்களையும், விடுதலைப் புலிகள் கொண்டிருப்பதாகவும், AP செய்தி நிறுவனம் குறிப்பிட்டள்ளது.

நன்றி>புதினம்.