‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்திருக் கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமை களை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்கு கிறது” என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்தும் ரிச்சர்ட் பௌச்சர் மூலம் அமெரிக்க அரசு சொல்லவும் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சட்டபுூர்வமான இலட்சியத்தை நோக்கியதாகவே தமிழர் போராட்டம் இருக்கிறது. ஆனால், அதனை அடையப் புலிகள் கையாளும் ஆயுதப் போராட்ட வழியைத்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. வெறுக்கிறது. ஏற்புடைய ஜனநாயகப் போராட்ட வழிகள் பல இருக்கும் பொழுது எவராலும் ஏற்க முடியாத ஆயுதம் து}க்கும் வழியைப் புலிகள் கையாளுவதையே அமெ ரிக்கா வெறுக்கிறது; எதிர்க்கிறது என்றும் ரிச்சர்ட் பௌச்சர், குறிப்பிட்டிருக்கிறார். கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றிலும், பின்னர் ஜூன் முதலாம் திகதி நடந்த இலங்கை அமெரிக்க வர்த்தக ‘சேம்பர்ஸ்” கூட்டத்தில் பேசும் போதும், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கை மீது அமெரிக்காவின் நிலை என்ன என்பதைத் தெட்டத் தெளிவாக பௌச்சர் எடுத்து முன்வைத்திருக்கிறார். ‘ பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் வாழ்ந்து வரும் தாயக மண்ணில் தங்களைத் தாங்களே ஆளும் தங்களது தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும் தங்களது வாழ்க்கை முறையைத் தாங்களே வகுத்துக் கொள்ளும் விருப்பங்கள் ஒரு இனத்தின் சட்டபுூர்வமான அபிலாஷை களே! இதனை அமெரிக்கா அங்கீகரித்தே வருகிறது”என்றும் அவர் சுட்டிக் காட்டிப் பேசினார். ‘புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். அப்படி அவர்கள் கைவிட்டால், அவர்களு டன் பேசுவதற்குரிய வாய்ப்புகளை அமெரிக்கா, பின்னர் பரிசீலனைக்கு எடுக்க வழிகள் பிறக்கும். பயங்கரவாத்தை முறியடிப்பதற்கு முழு உலகமுமே இன்று ஒன்றுபட்டுத் திரண்டு வருகிறது என்பதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தப் பயங்கரவாதம் ஆப்கானிஸ்தான் மலைகளிலிருந்து வந்தால் என்ன, வன்னியின் வயல் வெளிகளிலிருந்து வந்தால் என்ன அவற்றை முடியடிக்கவே உலகம் திரண்டு ஒன்றுபட்டு நிற்கிறது. இலங்கை அரசுக்கும் கடப்பாடு உண்டு தமது உரையின்போது அமெரிக்கத் துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச் சர், இலங்கை அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துக் கூற மறக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடிய முறையில் இலங்கை அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகத்தை வரித்துக் கொண்ட ஒரு அரசிடமிருந்து நாங்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறுபான்மை இன மக்க ளின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சகலரும் கட்டுப்பாடுகள் இல்லாத தெளிவான ஆட்சி நிலவ வேண்டும். சமாதானத்துக்கான து}ர நோக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிய வேண்டும். இத்தகைய லட்சணங்களையே நாம் ஜனநாயக அரசுகளிடமிருந்து எதிர்பார்த்து நிற்கிறோம். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில், அது இங்கு வாழுகின்ற சிறுபான்மை இன மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும், தங்கள் வாழ்க்கை முறையைத் தாங்களே தீர்மானிக்கும் தங்களின் அபிலாஷைகளை இந்த அரசு இலங்கை என்ற ஒரே தேசியத்தின் கீழ் செய்து தரும் என்பதை வெளிக்காட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது நேர்மையை அரசு வெளிக்காட்ட வேண்டும். அரசின் நேர்மைத் தன்மையை, விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு உதாரணம் ஒன்றையும் பௌச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழ்மொழியின் பாவனைக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அதனை அரச மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் சம சந்தர்ப்பங்கள் வழங்குவதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்த உதாரணமாகும். அரசு மீது குற்றச்சாட்டு கடந்த பெப்ரவரியில் ஜெனிவாவில் நடந்த பேச்சின் போது இணங்கப்பட்டபடி, துணை ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு இலங்கை அரசு தவறி விட்டது என்ற குற்றச்சாட்டையும் ரிச்சார்ட் பௌச்சர் தமது உரையின் போது முன் வைத்திருக்கிறார். வன்செயல் பெருக்கத்திற்கான பாரிய பொறுப்பை விடுதலைப் புலிகளே சுமக்க வேண்டி யிருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏறக்குறைய முறிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட் டிருப்பதற்கும் புலிகளே ஓரளவுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். புலிகளுக்கு எதிராக நாங்கள் இலங்கைக்கு ஆதரவு தருகிறோம். இந்த ஆதரவை, ராஜரீக ரீதியாக, பொருளாதார ரீதியாக, இராணுவ ரீதியாக வழங்குகிறோம். ஆனாலும், மறுபடியும் யுத்தம் மூளுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களின் இந்த உதவி, யுத்தத்துக்குப் போவதற்கு ஊக்கம் தருவதற்காக வழங்கப்படவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை க்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வைக் காண முடியாது என்பது எமக்குத் தெரியும். மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தம் மூளுமாயிருந்தால் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். முதலீடுகள் வராது. உல்லாசப் பயணிகள் வருகை நின்று விடும். கப்பல் சேவைக்கான காப்புறுதிக் கட்டணம் உயரும். அபிவிருத்திக்குப் பயன்படுத் தப்பட வேண்டிய நிதி யுத்தத்துக்கு முடக்கப்படும் என்றும் அவர் கூறினார். சாத்தியமானளவு மிக விரைவாக விடுதலைப் புலிகளும், அரசும் பேச்சுக்குப் போக வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பம் என்றும் அவர் கூறத் தவறவில்லை.
நன்றி>sankathi.com



