பிரித்தானிய அரசின் விசேட அனுமதியுடன் தயா இடைக்காடர் எதிர்வரும் 2ம் திகதிமுதல் 6ம் திகதிவரை தொடர் 101 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுக்கபட்டுள்ளது. இதற்கான அனுமதியும் பிரித்தானிய அரசு வழங்கியுள்ளதுடன் ஒரு மீற்றர் நீளமும் மூண்று மீற்றர் அகலமும் உடைய பிரதேசத்தை இவருடைய உண்ணாவிரதத்திற்கு கொடுத்துள்ளது. இரவு பகலாக தொடர்சியாக நடைபெறும் இந்த உண்விரதத்தில் ஆதரவு கொடுக்கும் பலரும் உதவிக்கு சுற்றவர நிப்பதுடன் பிரித்தானிய அரசியல்வாதிகளின் ஆதரவும் இதன்ஊடாக பெறமுடியும் எண்று தயா தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய தமிழர் அவலத்தை பிரித்தானியாவில் அரசியல்வாதிகளுக்கு எடுத்தக்காட்ட இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் வாக்கு போட்ட ஈழத்தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு புரியும் விதத்தில் தெரியப்படுத்தவதே தனது பூரண விருப்பம் எனவும் வடக்கு கிழக்கு தமிழர் மிதான அரச பயங்கரவாத செயல்கள் நிறுத்தப்படல் வேண்டும் தமிழ் பொதுமக்கள் அரச நிர்வாக பகுதியில் கோரமானமுறையில் கொல்லபடுவதை முண்டங்களாக மிதப்பதையும் உலகம் கண்டித்து இலங்கை அரசிற்கு உரிய அளுத்தம் கொடுக்கவேண்டும். பெண்கள் சிறுவர்கள் பாதுகாக்கபடல்வேண்டும். தமிழருக்கு நீதியான சுதந்திரம் கிடைக்க பிரித்தானியா உதவவேண்டும். எண்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளும் 101 மணிநேரம் வைக்கப்பட உள்ளது. இவருக்கு ஆதரவாகவும் அனைத்துக்கும் பாதுகாவலனாக திரு.றாஜன் (07751717097) என்பவருக்கு பொலிசார் அனுமதி கொடுத்துள்ளனர். இவருக்கு அச்சுறத்தல் ஏற்படுத்தாத விதத்தில் பலரும் ஆதரவு கொடுக்க இருப்பதுடன் அனைத்து ஊடகங்களும் இவருக்கான ஆதரவை கொடுக்க இருப்பதாக அறியமுடிகிறது.
நன்றி>யாழ்.கொம்



