மார்ச் 12th, 2006- ‍க்கானத் தொகுப்பு

ஜே.வி.பி ஜனாதிபதிக்கு வைத்த ஆப்பு.

மார்ச் 12, 2006

ஜே.வி.பி.யின் எச்சரிக்கையை நிராகரித்த மகிந்த!

நோர்வேயை மத்தியஸ்த பணியிலிருந்து நீக்காது விடின் மகிந்த அரசிற்கான ஆதரவு மீள பெறப்படும் என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவும், பொதுச் செயலாளர் விமல் வீரவன்சவும் விடுத்திருந்த எச்சரிக்கையினை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுக்களுக்கு முன்னதாக நோர்வேயை மத்தியஸ்த பணியிலிருந்து நீக்காது விடின் மகிந்த அரசிற்கான ஆதரவு மீள பெறப்படும் என கடந்த புதன்கிழமை கண்டியில் ஜே.வி.பி. கட்சி விடுத்திருந்த எச்சரிக்கையினையே மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

இப் பேச்சுகளின் ஊடாக சமாதானத்தை உருவாக்குவதில் மிகவும் கடினமானதும் சவாலானதுமான ஒரு சூழ்நிலையில், மூன்றாம் தரப்பொன்று வகித்து வரும் மத்தியஸ்த பணி தொடர்பாக எதுவித தெளிவுமின்றி ஜே.வி.பி.யினர் இருப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பாலசிங்கம் கொழும்பு வாரப்பத்திரிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை மேலும் கூறுகையில்,

ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்றவற்றின் ஆதரவை காட்டி சமாதனத்திற்கு எதிரான மிகவும் வலுவான சக்கதிளுடன் இயங்கி வரும் மகிந்தவின் அரசின் சமாதான அணுகுமுறைகளை விடுதலை புலிகள் மிகவும் சந்தேகத்துடனேயே எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசின் ஊடக அமைச்சர் பிரியதர்சன யாப்ப, ஜே.வி.பி.யின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் நோர்வேயை தொடர்ந்தும் மத்தியஸ்த பணியினை வகிக்கும் என்ற மகிந்தவின் முடிவினை கடந்த வியாழக்கிழமை உறுதிப்படுத்தியிருந்தார்.

அரசியல் கட்சிகள் தங்களது அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது அவர்களது உரிமை எனினும், சர்வேதேச நிலைப்பாடுகளை எடுக்கும் அதிகாரம் சிறிலங்கா அரசிற்கு மட்டுமே இருப்பதுடன், அரசு தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பதாக பிரியர்சன யாப்ப மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறிலங்கா விடுதலை புலிகளினதும் அழைப்பினையடுத்தே, நோர்வே மத்தியஸ்த பணிபுரிய முன்வந்தாகவும், தொடர்ந்தும் தனது பணியினை நோர்வே மேற்கொள்ள தனது நாடு தீர்மானித்திருப்பதாகவும் நோர்வே நாட்டு தூதரக பேச்சாளர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்

யாழ்தமிழருக்கு சிங்களராணுவம் மிரட்டல்.

மார்ச் 12, 2006

இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம்
(யாழ். அலுவலக நிருபர்)

இலங்கை நாட்டில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு.

தமிழர்கள் நீங்கள் வந்தேறு குடிகள். இதையே மகாவம்சமும் கூறுகிறது. எமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கே உண்டு.

இவ்வாறு இலங்கை தேசத்தின் பாதுகாப்பாளர்கள் என தங்களை வெளிப்படுத்தி “”அன்பான யாழ்ப்பாண மக்களே. இது எங்களோட நாடு” என்ற தலைப்பில் யாழ். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக நாடுகள் எதுவும் எம்மை அடக்க முடியாது. மஹிந்தவின் சிந்தனைப்படியே நாம் செய்வோம். ஒற்றை ஆட்சிக்குள்ளும் ஒரு படைக்குக் கீழும் வாழ்வதாயின் இங்கு வாழும் உரிமையுண்டு.

ஜெனிவாவில் பேசினாலும் நோர்வேயின் தலைமையினாலும் இந்தியாவின் உறவாலும் நாட்டைப் பிரித்து உங்களிடம் தரமுடியாது. யாழ்ப்பாணத்தில் இராணுவம் சொல்வதே தீர்ப்பு. சிங்கள மொழிதான் எல்லோருக்கும் தாய்மொழி. இங்கு வேறு எந்த மொழியும் இருக்க முடியாது.

எல்லா மக்களையும் பாதுகாப்பது சிங்கள இராணுவம்தான். உங்களையும் நாங்கள்தான் பாதுகாப்போம். நோர்வே இராணுவமோ இந்திய இராணுவமோ உங்களை பாதுகாக்காது. புலிகளும் உங்களைப் பாதுகாக்கமாட்டார்கள். உங்களை எம்முடன் உறவு வைத்துக் கொள்ள சொல்கிறோம்.

உங்கள் பிள்ளைகள் எங்கள் படையில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். அமெரிக்கா எமக்கு காசு தரும். சிங்களத்தை படியுங்கள். உங்களுக்கு நல்ல காலம் உண்டு.

புலிகளால் எங்களை வெல்ல முடியாது. யாழ்ப்பாணத்தை பிடிக்கமுடியாது. யாழ்ப்பாணம் பத்து வருடங்களாக எம்மிடமே இருக்கிறது. புலிகளில் கொஞ்சப்பேர்தான் இருக்கிறார்கள். எங்களிடம் இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் நாங்கள் சொல்வதுபோல நடவுங்கள். உங்களை நாங்கள் பாதுகாப்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>வீரகேசரி

தமிழீழ தலைநகரில் ஜிகாத்.

மார்ச் 12, 2006

திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போது, ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்று, தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகாத் குழுவில் அங்கம் பெறும் குறிப்பிடத்தக்க ஆயுததாரிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் ஆதரவுடன் இஸ்லாமிய சமயக் கல்வி என்ற போர்வையில், பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிகாத் குழு அங்கத்தவர்கள், பாகிஸ்தானின் மலையோரங்களில் உள்ள லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் பாசறைகளில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜதந்திரியாக தற்போது கடமையாற்றும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர், ஜிகாத் ஆயுத் குழுவினருக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான இந்த ராஜதந்திரி, அண்மையில் யாழ். குடாநாட்டிற்கு பாகிஸ்தான் உளவாளிகள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத இறுதியில் பாகிஸ்தான் செல்வதன் பின்னணியில், இந்த ராஜதந்திரி செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

லண்டனில் முன்னர் பணியாற்றிய இந்த ராஜதந்திரி, சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவ் இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நன்றி>வீரகேசரி.