பெப்ரவரி 21st, 2006- ‍க்கானத் தொகுப்பு

விடுதலைப்புலிகள் என்னை கொன்று விடுவார்கள்: கருணா அலறல்

பெப்ரவரி 21, 2006

கொழும்பு, பிப். 21- விடுதலைப்புலிகள் இயக் கத்தில் தளபதியாக இருந்து வந்த கருணா தனியாக பிரிந்து புதிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார். இதை தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. தற்போது கருணா இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இ-மெயில் மூலம் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகளிடம் இருந்து அனைத்து ஆயுதங்களையும் பறிக்க வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் இதை செயல்படுத்தலாம். எங்கள் அமைப்பு மட்டும் அல்லாமல் மற்ற அமைப்புகளிடம் இருந்தும் ஆயுதங்களை பறிக்கலாம். விடுதலைப்புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காவிட்டால் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்காதது விடுதலைப்புலிகளுக்கு என்னை கொல்ல சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது போல உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமைதி ஏற்படுத்த இலங்கை அரசின் துணை ராணுவ படையிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதற்கு பதிலடியாக கருணா இந்த தகவலை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே ஜெனீவாவில் விடுதலைப்புலிகள்-இலங்கை அரசு பிரதிநிதிகள் இடையே நாளையும் நாளை மறுநாளும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்காக இருதரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவில் உள்ளனர்.

நன்றி>மாலைமலர்

தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது சான்றோர் வாக்கு.